இந்தியாவின் முதல் சூரிய ஒளி சோலார் ரயில்

இந்திய ரயில்வேயின் முதல் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் ரயில் இராஜஸ்தானின் ஜோத்பூரில் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராக உள்ளது.பயணிகள் பாதுகாப்பு தொடர்பான ஆய்விற்கு பின் சில தினங்களில் வெள்ளோட்டம் துவங்கப்படும்.இந்த பயணிகள் ரயிலின் பாதை இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

solar-3

இந்திய ரயில்வேயின் மாற்று சக்தி மூலத்திற்கான பணியின் முதற்கட்டமாக துவங்கப்பட்டுள்ளது இத்திட்டம். ரயில் வழக்கமான டீசல் என்ஜின்களாலே இழுக்கப்பட்டும் அதே நேரத்தில் உள்கட்டமைப்புக்கான மின்சார தேவைகளான விளக்குகள்,விசிறிகள் மற்றும் குளிர்சாதன பெட்டி அறைகள் சூரிய ஒளி மூலமே இயங்கும்.

தற்போது 50 பெட்டிகள்(Diesel Electric Multiple Unit – DEMU Coaches) வரை தயார் நிலையில் உள்ளன.ஒவ்வொரு பெட்டியின் மேற்கூரையிலும் 12 சூரிய ஒளி தகடுகள் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேனலும் 300 வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய வல்லது.மொத்தம் 3.6 கிலோவாட் அதிகபட்சமாக உற்பத்தி செய்யலாம்.இதன் மூலம் ரயிலில் உள்ள விளக்குகள் மற்றும் மின்விசிறிகளுக்கு தேவையான 1.6 கிலோவாட்டை சுலபமாக வழங்கலாம்.

சோலார் ரயில்கள் பயன்பாட்டுக்கு வந்தால் ஆண்டுக்கு 90,800 லிட்டர் டீசல் மிச்சம் பிடிக்கப்படும்.இதனால் 239 டன் அளவிற்கு கார்பன்-டை-ஆக்சைடின் உற்பத்தி தவிர்க்கப்படும் வாய்ப்புள்ளது.சூரிய சக்தி மூலம் இயங்கும் திட்டம் நாட்டில் உள்ள அனைத்து ரெயில்களிலும் அமல்படுத்தப்பட்டால் சுமார் 450 மில்லியன் யூனிட் மின்சாரம் சேமிக்கப்படும்.சுமார் 11 கோடி லிட்டர் டீசல் பயன்பாடும் தவிர்க்கப்படும்.ஒரு பெட்டி மூலம் ஆண்டுக்கு 7200 யூனிட்டுக்கு அதிகமான மின்சாரம் சேமிக்கவும் சாத்தியம் உள்ளது.

on-top-of-coaches_1463142387

இதற்கு முன் 2015-ல் சில இரயில் பெட்டிகளில் சோலார் பேனல்களை பொருத்தி சோதனை செய்யப்பட்டுள்ளது.விரைவில் இத்திட்டம் மற்ற முக்கிய இரயில் நிலையங்களில் அமல் படுத்தப்பட உள்ளது.இதன் தயாரிப்பு நிறுவமான Jakson Engineers Limited (JL) ஏற்கனவே 30 DEMU பெட்டிகளுக்கான சோலார் பேனல்களை சென்னைக்கும் 50 அமிர்த்சரசிற்கும் அனுப்பியுள்ளது.

ரயில்வேயின் 2016-17 வருடத்திற்கான பட்ஜெட் தாக்கலில் 5 வருடத்தில் மாற்று சக்தி மூலமாக 1000 மெகாவாட் உற்பத்தி செய்யபட்டும் என் குறிப்பிடபட்டிருந்தது.அதற்கான பணிகளும் செவ்வனே நடந்துக் கொண்டிருக்கிறது.இரயில் நிலையங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு வருகிறது, மேலும் லெவல் கிராசிங்கிலும் சோலார் பேனல்கள் பயபடுத்துவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.

 

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.