கிராமங்களை தேடி வரும் கூகுள் இணைய சகி திட்டம்

உலகளவில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்தளவிற்கு கைப்பேசி தொழிற்நுட்பம் நம் விரல் வழி பிரபஞ்சத்தை சல்லடையிட்டு அலசுகிறது.

எனினும் நம் ஆதிகால தொற்றாக பெண்களுக்கு இன்னுமும் சமூக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வண்ணமே இருக்கின்றன. இந்தியாவில் பத்து ஆண்களுக்கு ஒரு பெண் என்ற விகிதத்தில் மட்டுமே பெண்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள்.588984724.jpg

இதற்கு நாம் சொல்லும் காரணங்கள் பல. இணையம் பார்த்தால் கெட்டு போய் விடுவாய், படிப்பு கெட்டு போகும், பெண்களுக்கு எதற்கு என்ற பழைய ஓசைகளை இன்னுமும் அவர்கள் காதுகளுக்குள் ஓதிக்கொண்டு இருக்கிறோம்.

பெண்கள் கையில் தொழிற்நுட்பம் சென்றால் அது அவர்கள் வாழ்வை மட்டுமல்ல உலகின் பல வழக்கங்களை கூட மாற்றும். மேரி கியூரி, கல்பனா சாவ்லா, ஜேகே ரவுலிங் என நீள்வரிசை கொண்டவர்களுக்கு கிடைத்த தொழிற்நுட்பம் இன்று நம் வாழ்வியலை வெகுவாக மாற்றி அமைக்கிறது.

தற்போது நகரங்களில் இணையத்தை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயர்ந்துள்ளது. பழைய மகாபலிபுர சாலை முழுதும் தகவல் தொழிற்நுட்பத்தில் பணிபுரியும் தோழிகளால் வீதி நிரம்பியுள்ளது.

slidernew8
ஆனால் கிராமங்களோ அதற்கு நேர்மாறாக அதன் சாயல் மாறாமல் அப்படியே இருக்கிறது. நகரங்களுக்கு கல்லூரி பயில செல்லும் போது தான் அவர்கள் இணையத்தை முதன்முறையாக அறிய நேரிடுகிறது.

படிக்கும், வேலைக்கு செல்லும் மகளிர் தாண்டி கிராமங்களில் வசிக்கும் அக்காக்கள், சித்திகள்,அத்தைகள் என வெளிச்சம் பற்றிடாத பல வேர்கள் சமூக வெளியை அறியும் வாய்ப்பை இழந்து உள்ளனர்.

முதல் காரணம் அவர்களிடம் அதற்கான கருவிகள் இல்லை,அப்படி இருந்தால் அதை பயன்படுத்த தெரிவதில்லை. நாம் எல்லோரும் நம் அம்மாவிற்கு குறுஞ்செய்தி அனுப்ப கற்றுக் கொடுப்பத்தில்லையே.

சிந்தித்து பாருங்கள், நம் வீட்டில் உள்ள பெண்கள் யூடியூப்பில் சமையல் கற்பது,வங்கி பணமாற்றம் செய்வது, புத்தகம் படிப்பது, புகைப்படங்கள் பகிர்வது, காணொளியில் உரையாடுவது போன்றவற்றை கற்றுக் கொண்டால் எப்படி இருக்கும். பொதுவாக வீட்டில் அதிக நேரத்தை விரயம் செய்யும் அவர்களுக்கு இது எவ்வாறான ஒரு வரப்பிரசாதம்.
9fb578f06aa381d3b55098b86faf62079cd7824b

2018 பிப்ரவரியில் கூகுள் இந்தியா டாட்டா டிரஸ்ட் உடன் இணைந்து இன்டர்நெட் சாத்தி(Internet Saathi) என்ற திட்டத்தை தமிழக கிராமங்களில் தமிழக அரசோடு இணைந்து துவங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பெண்களுக்கான பல சிறுதொழில் திட்டம் போன்றவற்றை கூகுள் உடன் இணைத்து துவக்கி வைத்த தகவல் தொழிற்நுட்ப அமைச்சர் மணிகண்டன் இவை அனைத்தும் தமிழக பெண்களின் முன்னேற்றச் செய்யும் என கூறியுள்ளார்.

வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு தன்னார்வலர்கள் மூலம் கிராமங்களில் உள்ள பலருக்கு முதன்முறையாக இணையத்தை அறிமுகப் படுத்துவதே கூகுளின் நோக்கம். 2015 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் தான் இந்த திட்டம் முதன்முதலாக செயல்படுத்த பட்டது.

அங்கு வெற்றிகரமாக கிராமங்களில் மாற்றத்தை விதைத்த இந்த பயணம் பல இணைய பிரியைகளை அறிமுகப்படுத்திக் கொண்டது. கிட்டத்தட்ட 3 லட்சம் கிராமங்களில் உள்ள பெண்களை இணையத்தை கொண்டு சேர்ப்பதே இந்த திட்டத்தின் முக்கிய பங்கு.

ஒரு கிராமத்தில் மையமிட்டு முகாம் நடத்தி அங்கு இணைப்பு கருவிகள் கொண்டு சென்று சொல்லிதருவார்கள். அதில் குறிப்பிட்ட நபர்கள் மூலம் மற்ற அருகாமை கிராமங்களுக்கும் இணையத்தை பயன்படுத்த ஊக்குவிக்கின்றனர். இதில் கிராம பெண்களே தன்னார்வலர்களாக இணைந்து மற்ற கிராம பெண்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் உள்ள 4000 கிராமங்களுக்கான திட்டத்தை கொண்டுள்ள கூகுள், விரைவில் அதனை செயல்படுத்தவும் உள்ளது. இதன் வழியாக 60 லட்சம் கிராம பெண்களிடையே இணையம் அறிமுகமாகி விரிவடையும்.

ஏற்கனவே இதனால் பத்திற்கு மூன்று என்ற வீதத்தில் தேசிய அளவில் இணையம் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக இதன் ஒருகிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நம் கிராம பெண்களின் வளர்ச்சியை நாமும் அக்கறை செலுத்தினால் அதன் வெளிப்பாடு நம் வாழ்வியலையும் மகத்துவமாக்கும்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.