Image default
Space

சந்திரனின் கனிம வளங்களை பூமிக்கு கொண்டுவர இஸ்ரோ திட்டம்

பூமியின் துணைகோள் நிலா. நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரமும் தன்னைத்தானே சுற்ற எடுத்துக் கொள்ள நேரமும் சரிவிகதத்தில் இருப்பதால் நிலவின் ஒரு பக்கத்தை மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. இதன் காரணமாக அதன் மறுபக்கத்தை பூமியில் இருந்து நம்மால் காண முடியாது. நிலவை அடிப்படையாக வைத்தே மேற்கத்திய நாடுகள் நாள்காட்டிகளை அமைத்திருக்கின்றன. இந்தியாவில் தோன்றிய வானியல் சாஸ்திரங்களும் நிலவுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன.

பல நூறு ஆண்டுகள் கழித்து நிகழப் போகும் கிரகணங்களையும் இந்திய வானியல் சாஸ்திரங்கள் துல்லியமாக கணித்து கூறியுள்ளன. அந்த அளவுக்கு பூமிக்கும், நிலவுக்குமான நெருக்கமான தொடர்பு நீண்டு கொண்டே வருகிறது.

முதன்முதலாக கடந்த 1972 ஆம் ஆண்டு நிலவில் கால்பதிப்பதற்கான அப்போலோ திட்டத்தை அமெரிக்கா வகுத்தது. அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்டராங் முதன்முதலாக கால்பதித்தார். அதற்குப் பின் 1976 ஆம் ஆண்டு ரஷ்யா ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி வைத்தது. கடைசியாக சந்திராயன் திட்டம் மூலம் இந்தியா நிலவில் கொடி நாட்டியிருந்தது. இப்படி அடுத்தடுத்த ஆய்வுகள் மூலம் அதன் மேற்பரப்பு, ஈர்ப்பு விசை என பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டாலும், நிலவின் மறுபக்கத்தில் என்ன இருக்கிறது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது.

இந்தியாவின் சந்திரயான் விண்கலம். கடந்த 2008ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் மொத்தம் 11 ஆய்வு உபகரணங்கள் இருந்தன. அவற்றில் 5 கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாகும். மீதம் உள்ள 6 கருவிகள் வெவ்வேறு நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்பட்டதாகும்.

அமெரிக்க, ரஷ்ய நாடுகள் அனைத்தும் ஏற்கனவே விண்வெளி ஆராய்ச்சியிலும், நிலவு ஆராய்ச்சியிலும் முன்னனியில் இருந்தது. இந்த நிலையில் தான் இந்தியா சார்பில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட சந்திரயான் 1 விண்கலத்தை, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

சந்திரயான் 1 அப்படி என்ன தான் செய்துவிடப் போகிறது என்று மற்ற நாடுகள் எண்ணியிருந்த நிலையில், நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 1 கண்டுபிடித்து அசத்தியது. இதனால் உலக அரங்கில் இந்தியாவுக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்தது. இஸ்ரோவின் கணிப்புபடி, சந்திரயான் 1 விண்கலம், சுமார் 2 ஆண்டுகள் உழைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 2009 வரையில் மட்டுமே சந்திராயான் 1 இயங்கியது. அதன்பின், அதன் ஆயுட்காலம் முடித்துக் கொள்ளப்பட்டது. இருப்பினும் 95% ஆய்வுப்பணிகள் வெற்றியடைந்தது. இதனால் சந்திரயான் 1 விண்கலம் வெற்றி பெற்றதாகவே அறிவிக்கப்பட்டது.

நிலவுக்கு விண்கலம் அனுப்புவது என்பது அவ்வளவு சாதரணமான விஷயம் அல்ல. ராக்கெட் விண்ணில் செல்லும் பாதையில் வெவ்வேறு கட்டங்கள் உள்ளது. சந்திரயான் 1 விண்கலம் ஏவப்பட்ட பிறகு,பூமியை சுற்றி வரும். இதனை Earth Hacking Orbit என்று அழைக்கப்படுகிறது. இது நீள்வட்ட பாதையில் இருக்கும்.

அதன் பின்னர் உலவும் ரோபோட் கொண்ட விண்கலத்தை இந்தியா தற்போது அனுப்பி உள்ளது. தாதுக்கள் மற்றும் கனிமங்கள் கொட்டிக் கிடக்கும் பொக்கிஷமாக நிலவு இருப்பதால், அதன் மறுபக்கத்தை ஆய்வு செய்வதற்காக ஆளில்லா விண்கலத்தை அனுப்பி இருந்தது இந்தியா நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்ய சந்திராயன் இரண்டை அனுப்பி வைத்துள்ளது.

நிலவில் ஹீலியம் என்ற வாயு அதிகம் காணப்படுகிறது. அதன் அடர்த்தியை ஆய்வு செய்வதற்காக இந்தத் திட்டம் வகுக்கப்பட்டது. இது தவிர விண்வெளித்துறைக்கு தேவையான தொழில்நுட்பங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்தப்பட்டுள்ளது .. அதுவுமில்லாமல் இதுவரை எந்த நாடும் மேற்கொள்ளாத ஆராய்ச்சி என்பதன் மூலம் இந்தியாவுக்கு பெருமை கிடைக்கும்.

அணுமின் உற்பத்திக்கு முக்கிய எரிபொருளாக இருக்கும் ஹீலியம் – 3 என்ற வாயு நிலவில் அதிக அளவில் கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த வாயுவை பூமிக்கு கடத்தி வருவதன் மூலம், சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான எரிசக்தி மனிதர்களுக்கு கிடைக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது தவிர நிலவில் டைட்டானியம், யூரேனியம் போன்ற அணுசக்திக்கு தேவையான மூலப் பொருட்களும் கொட்டி கிடக்கின்றன. எதிர்காலத்தில் பூமியின் தேவைக்காக அந்த மூலப் பொருட்களையும் கொண்டு வர முடியும். தற்போது அந்த மூலப் பொருட்களை கடத்தி வருவதற்கு அதிக பொருட் செலவு ஆகலாம்.

எனினும் வருங்காலத்தில் அதை குறைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருப்பதால், நிலவில் இருந்து பூமிக்கு டைட்டானியம் இறக்குமதி ஆகும் என்கின்றனர் விஞ்ஞானிகள்
அடுத்த பத்து வருடத்திற்குள் நிலவில் ஆராய்ச்சி மையம் அமைத்து ஹீலியம் பிரித்தெடுக்கப்பட்ட நிலையில் பூமிக்கு கொண்டுவரப்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Related posts

ஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை?

Seyon

நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

Seyon

மார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்

Seyon

Leave a Comment