Image default
History

கல்லணை – உலகின் பழமையான அணையின் கட்டிட வரலாறு

நாம ஒரு வீடு கட்டவே பல வல்லுநர்கிட்ட பலவிதமான யோசனை கேட்குறோம். அப்படியே கட்டினாலும் எ‌ந்த சிமெண்ட் போட்டு கட்டலாம் என்னென்ன கலவை போட்டு கட்டலாமுன்னு பல குழப்பம் வரும். இதையெல்லாம் தாண்டி கட்டினாலும் எப்போ இடிந்து விழுமுன்னே தெரியாது.

எடுத்துக்காட்டுக்கு சென்னை விமானநிலையம் கண்ணாடி இருக்கு. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலகட்டத்துல இன்னும் நம்மை திகைக்க வைக்கிற ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிட கல்லணையும் அதன் பின்னால் உள்ள அறிவியலையும் தான் பார்க்க போறோம்.

Karikalan

கிமு இர‌ண்டாம் நூற்றாண்டில் அதாவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கரிகாலன் சோழரால் கட்டப்பட்ட கல்லணை உலக புகழ் வாய்ந்த பழம்பெரும் அணை என்பது அனைவரும் அறிந்ததே. மிகவும் அகலமான காவிரி ஆற்றின் குறுக்கே களிமண்ணை மட்டும் கொண்டு எப்படி இது கட்டப்பட்டது என்பதிலேயே ஆச்சர்யம் அடங்கி உள்ளது.

இதுவரை பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் இதுபோல கற்களை ஒட்டும் ஒரு பசை ஒன்றை இன்றளவும் உருவாக்க முடியவில்லை என்பதே இதன் தனி சிறப்பு. கல்லணையின் நீளம் 1080 அடி அகலம் 66 அடி உயரம் 18 அடி. இது நெளிந்து வளைந்த அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது.

கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே. கல்லணை தோன்ற அன்றைய சோழமன்னர் கரிகாலனின் முயற்சியே காரணம். விவசாயத்திற்கு நீர் தேவை. மழைக்காலங்களில் வெள்ளமாக சென்ற நீரை கோடையில் பயன்படுத்த முடியாத நிலையை உணர்ந்த கரிகாலன் ஆற்றின் குறுக்கே அணை ஒன்றை கட்ட முடிவெடுத்தார்.

பெரிய பெரிய கற்களை சுண்ணாம்பு சாந்து போன்ற ஒருவிதமான பசை கொண்டு ஒட்டி கட்டினாலும் ஓடும் நீரில் கட்டுவது சுலபமல்ல. இதற்கான ஒரு வழிமுறையை உருவாக்கியதுதான் தமிழனின் மேலோங்கிய அறிவியலை உலகுக்கே எடு‌த்து சொல்கிறது.

old kallanai dam

பொதுவாக ஓடும் நீரில் நாம் நின்றால் நமது கால்கள் மணலில் புதையுமல்லவா இந்த அடிப்படை அறிவியலை அந்த காலத்தில் பயன்படுத்தி ஒரு மிக‌ப்பெ‌ரிய அணை கட்டி உள்ளனர். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் புதையும்.

அதன் மேல் மற்றொரு பாறையை வைப்பார்கள்.நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டுக் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இதனால், இரண்டு பாறைகளும் ஒட்டிக்கொள்ளும்.

இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை டெல்டா மாவட்டத்திற்கு பாசன வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த அணையானது திருச்சியில் முக்கொம்பில் பிரிகிறது. சாதாரணமான பாசன காலங்களில் காவேரியில் செல்வதும் வெள்ளம் ஏற்பட்டால் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடுவது போலவும் அமைக்கப்பட்டது கரிகாலனின் திட்டமிடல் பற்றி சிறப்பாக விளக்குகிறது.

1804 ல் பாசன வசதிக்காக தனியாக ஆங்கிலேயரால் ஒரு பொறியியல் ஆய்வாளர் நிறுவபட்டார். இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்து தமிழனின்  கட்டிடக்கலையை கண்டு வியந்து போனார்.

கல்லணை பல காலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் என அழைக்கப்படும் நாகை திருவாரூர் மாவட்டம் தஞ்சைதொடர்ச்சியாக வெள்ளத்தாலும் வறட்சியாலும் வளமை குறைந்துக் காணப்பட்டது.

பயனற்று இருந்த கல்லணையில், தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார் சர் ஆர்தர். கல்லணை ப‌ற்‌றி ஆராய்ந்து வியப்படைந்த ஆர்தர் கரிகாலன் கட்டிய இக்கல்லணையை “மகத்தான அணை” (Grand Anicut) என்ற பெயர் சூட்டி அழைத்தார்.

kallanai dam trichy

பாசன காலங்களில் காவிரி, வெண்ணாறு, புது ஆறு ஆகியவற்றிலும், வெள்ள காலங்களில் கொள்ளிடத்திலும் தண்ணிர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்படும். அதாவது வெள்ள காலங்களில் கல்லணைக்கு வரும் நீர் காவிரிக்கு இடது புறம் ஓடும் கொள்ளிடம் ஆற்றில் (முக்கொம்பில் காவிரியில் இருந்து பிரிந்த கிளை ஆறு ) திருப்பி விடப்படும். பல இலட்சம் ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் இருந்து காப்பாற்றப்பட்டது.

1839 இல் அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டது. பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. தமிழ் மன்னர்களின் நிர்வாக திறமைக்கும் அறிவியல் ஆட்சிக்கும் இதை விட சான்று எதுவு‌ம் தேவை இல்லை.

Related posts

காவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை

Seyon

தாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்

Seyon

உண்டக்கட்டி – வார்த்தை அல்ல வரலாறு

Seyon

Leave a Comment