Image default
Mystery

கொங்கா லா பாஸ் – இந்தியாவின் ஏலியன் தளம்

கொங்கா லா பாஸ் என்பது இந்திய-சீனா எல்லை பகுதியில் உள்ள கணவாய் (Mountain Pass) ஆகும். இமயமலைத்தொடரின் லடாக் பிராந்தியத்தில் காணப்படும் இந்த இடம் ஒரு ரகசிய ஏலியன் தளமாக கருதப்படுகிறது.உள்ளூர்வாசிகள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் விந்தையான கலன்கள் வானில் பறப்பதையும் அவ்வப்போது மிளிர்ந்து மறையும் வெளிச்சத்தை கண்டதாகவும் சொல்கிறார்கள்.

அவை உண்மையென்றால் இமயமலை முகடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தளம்(UFO Base) இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? இந்திய சீனா அரசுகள் இவை எல்லாவற்றையும் அறிந்தே ரகசியத்தை உடன்படிக்கை ஆக்கிக் கொண்டு பேணிக்காக்கின்றனவா? விரிவாக பார்ப்போம்.

உலகில் பயணப்பட முடியாத இடங்களில் ஒன்றாக லா பாஸ் மலைமுகடு உள்ளது. இந்திய – சீனா அரசுகள் போட்டுக் கொண்ட ஒப்பந்த படி லா பாஸ் க்குள் நுழைவது அரசால் தடைசெய்யப்பட்ட ஒன்று. இரு நாட்டு ராணுவ வீரர்கள் சர்வ காலமும் இப்பகுதிகளை காவல் காக்கின்றனர்.

மனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்

இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது 1962 ஆம் ஆண்டு நடந்த இந்தோ-சீனப்போர். இந்திய கணவாய் பகுதியில் ரோந்து செய்த இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீனா வீரர்களுக்கும் இடையே நடந்த சண்டையில் பிடிப்படட இந்திய வீரரை சித்தரவதை செய்து கொன்றது சீனா ராணுவம், அதன் தொடர்ச்சியாக 1962 இந்தோ-சீனா போர் மூண்டது. அந்த வகையில் பார்த்தால் இது ஒரு வரலாற்று சுவடுகள் பதிந்த இடம்.

மீண்டும் போர்மேகம் சூழும் நிலை வரக்கூடாதென அண்டை நாடுகள் ஒப்பந்தமிட்டு இந்த பகுதிகளை பாதுக்காப்பதாக கருதி இதுபோன்ற ஒரு சர்ச்சையை கிளப்பிருக்கலாம்.

இருப்பினும் 2006 க்கு முன்னர் கொங்கா லா பாஸை கூகுள் மேப் வழியே பார்க்கும் போது அங்கு கட்டிட அமைப்புகள் பொருந்திய ஒரு ராணுவ தளம் காணப்பட்டது. அங்கு பாதாளத்தில் வேற்றுகிரகவாசிகளின் இயக்க மையம் இருப்பதற்கு சான்றாக மலை முகட்டில் மிகப்பெரிய பள்ளம் போன்ற துளை காணப்படுகிறது.

தற்போது கூகுள் செய்து பார்த்தால் எதுவும் இருக்காது, அலைவரிசை பிரச்சனை என்று சொன்னாலும் இது வழக்கமான மர்மங்களை மறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் ஏரியா 51, நவேடா பகுதிகளிலும் இதேதான் நடக்கிறது.

பாதாள குடியேற்றம்

இந்தியாவின் ஏரியா 51 என சொல்லப்படும் கொங்கா லா மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி, அங்கு வருடத்திற்கு சில நாட்கள் மழை பொழிவு இருப்பதே அரிதாகும். இதனால் மனித வாழ்வியலுக்கான சூழல் இங்கே குறைவு.

பூகோள ரீதியில் பார்த்தால் இவ்விடம் பாதாள நிறுவன பயன்பாட்டிற்கு ஏற்ற தகவமைப்போடு உள்ளது. புவியின் மற்ற பகுதிகளை விட இங்கிருக்கும் நிலத்தகடுகளின் மேலோடுகள் பலமானதாக இருக்கின்றன. ஏலியன்கள் இங்கு தளம் அமைக்க இதுவும் ஒரு காரணம் என UFO நம்பிக்கையாளர்கள் திடடவட்டமாக தெரிவிக்கிறார்கள்(Convergent Plate Boundary).

சில வருடங்களுக்கு முன்னர் கைலாசத்திற்கு யாத்திரை சென்ற பயணிகள் திடீரென வானில் தோன்றிய வெளிச்சத்தை கண்டு திகைத்து போய் நின்றுவிட்டனர். பாதுகாக்கப்பட்ட கணவாய் பக்கத்திலிருந்து விசித்தரமான ஒளிக்கற்றைகள் தோன்றியது.

ஆனால் மின்சார வலைகள் கொண்டு பாதுகாக்கப்படும் வட்டத்திற்குள் நுழைய முடியவில்லை அவர்களால். அதன் பின்னரும் பல ஆர்வலர்கள் இந்த எல்லைக்குள் நுழைய அனுமதி கேட்டும் அது இரு நாட்டு ராணுவத்தாலும் மறுக்கப்பட்டது.

சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு இத சாதாரண நிகழ்வாக மட்டுமே உள்ளது. அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்கள் அடிக்கடி தென்படுவதாகவும் இவையெல்லாம் அரசாங்கத்திற்கு தெரிந்தும் யாரும் எதுவும் பேசுவதில்லை என முறையிடுகின்றனர்.

இதன் சாத்தியமான கோட்பாடாக விஞ்ஞானிகள் கருதுவது இயற்கை ஒளிகள். வெப்பமான பகுதி என்பதால் இயற்கையாகவே கானல் போன்ற ஒளிச்சிதறல் நிகழ்வுகள் அங்கு நடைபெற்று அதனால் அங்கு வெளிச்சங்கள் தோன்றி மறையலாம். அரோரா(aurora) போன்ற வெளிச்சதை கண்டும் மக்கள் ஆச்சர்யப்பட்டிருக்கலாம். ஆனாலும் அரோரா இரவில் தான் அதிகம் ஏற்படும்.

எந்திர ராட்சதன்

புவியியலாளர்கள் குழு ஒன்று இஸ்ரோ விஞ்ஞானி அனில் குல்கர்னி தலைமையில் ஹிமாச்சல பிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் போது அதிசயிக்கத்தக்க வகையிலான எந்திரம் போன்ற ஒரு உருவம் செங்குத்தாக மலை ஏறி விண்ணில் மறைவதை கண்டனர்.

சில படைவீரர்கள் உட்பட 14 நபர்கள் இதனை நேரடியாக கண்டனர். இந்திய பத்திரிகைகள் இதை பற்றி விவாத கட்டுரைகள் வெளியிட்டன. மத்திய அரசு, இஸ்ரோ, ராணுவம் வரை இந்த தகவல் சுற்றறிக்கை விடப்பட்டது. ஆனால் வழக்கம் போல பதில்கள் எதுவும் இல்லாமல் இந்த செய்து புதைத்து மறைக்கப்பட்டது.

Ref : We are not alone: UFO sightings in Ladakh spook soldiers – India Today

பலர் கொடுத்த பரிசீலனை அவை ரேடாரில் பதிவாகாத UAV(Unmanned aerial vehicles) வகை வானுர்தியாக இருக்கலாம் என்பது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் உளவு பார்ப்பதற்காக இவற்றை பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளின் மேல் இவை கண்காணிப்பு பணிக்காக ரோந்து செல்கின்றன.

அதே நேரத்தில் இவை மிக உயரத்தில் பறப்பதால் கண்ணில் படாது. ஆனால் இவை இவர்கள் குறிப்பிடும் பறக்கும் தட்டுகளை போல வேகமாக மேலே எழும்ப முடியாது. அதுவும் இல்லாமல் இந்திய சீன எல்லையில் அயல் நாட்டு விண்கலம் அவ்வளவு எளிதாக பயணித்திருக்க இயலாது.

விரட்டிய ராணுவ வீரர்கள்

பொதுமக்கள் மட்டுமின்றி குழுவாகவும் தனியாகவும் பல ராணுவ வீரர்கள் வித்தியாசமான விண்கலன்களை கண்டதாக புகார் தெரிவித்துள்ளனர். அவை மலைக்கடியிலிருந்து ஒளிப்பிழம்பு போல வெளிச்சத்தோடு விண்ணில் மறைந்துவிடும்.

பாங்காங் ஏரியில் சில ராணுவ எதிரி விண்கலமாக கருதி ஆராய்ந்தனர். ஸ்பெக்ட்ரம் பகுப்பாய்வி(spectrum analyzer) கூட அதனை ஸ்கேன் செய்யவில்லை. நேராக பார்க்க முடிந்தும் ரேடாரில் அதை பதிவு செய்ய இயலவில்லை.

முன்னர் சொன்னது போல ஒரு வேளை அது ஏலியன்ஸ் ஏவுதளமாக இல்லாமல் நிஜ ரகசிய ராணுவ கட்டமைப்பாக இருக்கக் கூடும். ஒப்பிடுகையில் சீனா இதை செய்ய வாய்ப்புகள் அதிகம். ஒரு தீவையே ராணுவ தளமாக மாற்றிய வரலாறுகள் எல்லாம் சீனாவிற்கு உள்ளது. ஆனாலும் கொங்கா லா பாஸை மட்டும் விஞ்ஞானம் கண்டறியாமல் இருப்பது எப்படி.

இதுபோல பல சாட்சியங்களும் சாத்தியக் கூறுகளும் இருப்பினும் இது தொடர்பான ஆய்வையோ அறிக்கையையோ அரசு இதுவரை வெளியிடவில்லை. இது UFO நம்பிக்கையாளர்களின் கூற்றை உண்மையாகுவது போன்று உள்ளது.

References :

https://www.verytopsecret.info/indian-ufo-investigator-intrigued-by-ufo-mystery-kongka-la-pass-ladak

https://www.indiatoday.in/india/north/story/unidentified-flying-objects-ufo-sighting-in-himachal-pradesh-in-2005-120392-2012-11-02

https://www.quora.com/What-is-the-truth-behind-the-Kongka-La-Pass-UFO-base-mystery

https://thevoiceofnation.com/politics/ladakhs-kongka-la-pass-is-the-mother-of-all-mysteries-does-it-have-a-ufo-hub-or-a-secret-air-force-bas

Related posts

அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி

Seyon

மனிதன் செல்ல முடியாத தீவு – அந்தமானின் வடக்கு சென்டினல்

Seyon

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்

Paradox

1 comment

பெர்முடா முக்கோண மர்மம் விலகியது - மாயோன் September 4, 2019 at 11:48 pm

[…] இவர்கள் ஒருபக்கம் எனில் ஏலியன்கள் தளம் கடலுக்கடியில் இருப்பதாகவும் பலர் […]

Reply

Leave a Comment