இந்து மத நம்பிக்கைகளும் அவ நம்பிக்கைகளும் என்றுமே சர்சைக்குறியது தான். சமீபத்தில் நடந்த கந்த சஷ்டி விவகாரம் கூட அதற்கு உதாரணம். ஒவ்வொரு தரப்பு விளக்கத்தை கேட்கும்போது புராண கதைகள் நமக்கு சொல்லபட்டதை தவிர நிறைய மறைந்திருக்கும் கருத்துகள் இருக்கிறதா என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்து மத புராணங்களில் எண்ணற்ற கதைகள் உள்ளன. அதில் பல காமத்தையும் லீலைகலையும் பற்றி சொல்லிப்படுகிறது. இதில் நாத்திகவதிகளால் சுட்டிக்காட்டப்படும் பிரபல கதைகளில் ஒன்றுதான் பால்ய கிருஷ்ணன் செய்யும் வஸ்திராபரணம்.
அதாவது கோபியர்கள் நீரோடையில் குளித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வரும் கிருஷ்ணன் அவர்களது ஆடைகளை திருடிக்கொள்கிறான். இதனால் நீரை விட்டு வெளிவர இயலாத கோபியர்கள் கிருஷ்ணனிடம் ஆடையை கொடுக்குமாறு கெஞ்சுகிறார்கள். ஆனால் மரத்தில் ஏறிக்கொண்ட அவன் கொடுப்பதாக இல்லை.
எல்லோரையும் நிர்வாணமாகவே வெளியே வரச் சொல்கிறார், அதுவும் கைகளை
உயர்த்தியவாறே. இவ்வாறாக செல்லும் கதையை கேட்கும்போது இதுவும் ஆபாச புராணமா என்ற சந்தேகம் எழுவதில் ஆச்சர்யமில்லை.
ஆனால் மேலாட்டமாக பார்த்துவிட்டு அதை காமம்சாரந்ததாக பாவித்தால் எப்படி. கிருஷ்ணனின் கதை முழக்க கோபியர்கள் அன்பின் உருவாமாய் வருகிறார்கள். அண்டத்தை தன் வாயினில் காண்பித்த ஒரு கதாபாத்திரம் இதனை செய்ய காரணம் இருக்குமல்லவா. அதனை அறியாமல் குற்றம்சாட்டுவது தான் குற்றம்.
இந்த லீலையை செய்யும்போது கிருஷ்ணருக்கு வயது ஏழு. அதை பாலபருவம் என்போம். அப்பருவத்தில் பாலியல் எண்ணமோ தோன்றுவது அசாத்தியம். கிருஷ்ணர் குறும்புக்காரர் அவர் எதை செய்தாலும் அதில் குறும்புகளிருக்கும். அது லீலைகளாக இருந்தாலும் சரி, சம்ஹாரங்களாக இருந்தாலும் சரி.
ஸ்ரீமத் பாகவதம் 10 காண்டம்-அத்தியாயம் 29ல் இவை வருகின்றன.
கோபியர்கள் தனங்கள் அன்பினால் கண்ணனை அடைய பாவை
விரதம் இருந்தனர். துர்க்கை உருவத்தை வைத்து வழிபடும் யாகம் அது. விரதத்தின் ஒரு பங்காக அவர்கள் தன் நகைகள், உடைகளை கரையில் வைத்து நீராடினர்.
அந்நேரத்தில் ஒரு குழலோசை கண்ணன் மரத்தில் அமர்ந்துகொண்டு ஆடைகளை மரக்கிளைகளை தொங்கவிட்டுகொண்டிருந்தான். உடனே கோபியர்கள் தன் உடலை மறைத்துகொண்டு கண்ணா! உன்னை நம்பியவருக்கு இதுவா கதி? உன்னை தவிற வேறொன்றுமஎ தேவையில்லை என்று உன்னை சரணடைந்தவரை இப்படியா நடத்துவாய் என்று கேட்கலானர்.
என்னை தவிற வேறு ஏதும் முக்கியமில்லை என்று கூறிய நீங்கள் ஆடையின்றி வெளியே வருவது எப்படி என்கிறீர்களே. எனில் உங்களுக்கு உடலின் அபிமானம் தானே முக்கியம். உலகப்பற்றையும் உடல்பற்றையும் விட்டவர்கள்தானே என்னை அடையமுடியும். என்னை தவிர்ந்த எந்த பற்றுகொண்டாலும் அது மோக்ஷ தடை என்றான் மாயக்கண்ணன்.
அவனது உபதேசத்தை கேட்ட கோபியர் தனஎ தவறை உணர்ந்து உடலை மறந்து கிருஷ்ண பிரேமையில் ஆழ்ந்து கைகளை தூக்கிக் கொண்டு துதிபாடினர். கலங்கமற்றதும், அற்ப ஆசை அற்றதுமான கோபியர் பக்தியில் குளிர்ந்த கண்ணன் அவர்களுக்கு ஆடையை அளித்து மறைந்தான்.
இதுவே வஸ்திராபரண கதையாக புராணத்தில் சொல்லப்படுகிறது. இதனை ஆபாசத்தில் பார்ப்பதும் அருள் கொண்டு பார்ப்பதும் அவரவர் கருத்து தன்மையை கொண்டது. அதற்காக ஆத்திகர்களும் நாத்திகர்களும் கொச்சையாக பேசி ஒருவரை ஒருவர் தாழ்த்திக் கொள்வது அபத்தம்.
சமணர் கழுவேற்றம் – வரலாற்று பின்னணி
வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் கடவுள் மறுப்பு என்பது பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் தன் மதத்தை பெருமைபடுத்தி மற்றவரை சிறுமைபடுத்தும் அவலமும் நிகழ்கிறது. தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்துக் கொண்டு மற்றவர் நம்பிக்கையை துச்சமாக எண்ணாமல் இருந்தாலே நலம்.