நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

புது கிரகம் தேடி வாழ்விடம் அமைப்பது நம் எல்லோர் ஆழ்மனதிலும் உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கனவு. அதிலும் செவ்வாய் கிரக பயணத்திற்கு நம்மக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர்.

நாசா விஞ்ஞானிகள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் தொடர்ந்து மக்களின் மனதில் செவ்வாய் குடியேற்ற கனவை மெல்ல மெல்ல பதிய வைத்துவிட்டனர்.

earth from moo

2010 ஆம் ஆண்டு முதலே மக்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்றுவதற்கான திட்டத்தில் தீவிரமாக உள்ளது நாசா, அதிலும் SpaceX என்ற நிறுவனம் 2024 லின் தொடக்கத்தில் செவ்வாய் காலணியை உருவாக்குவதில் திட்டவட்டமாக உள்ளது எனபதை அதன் தலைவர் எலான் மஸ்க்(Elan Musk) ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

mars one

மேலும் 2012ல் தொடங்கப்பட்ட MARS ONE திட்டம் உலகம் முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட100 நபர்களுக்கு செவ்வாயில் வாழ்வமைக்க பயிற்சி கொடுத்து வருகிறது. திருப்ப வருவதற்கான எண்ணமே இல்லாத பயணத்தில் 2027-ல் அங்கு தரையிறங்க உள்ளது.

செவ்வாய் குடியேற்றம் அவ்வளவு எளிதானதல்ல.

வேறு கிரகத்தில் குடியேறுவது(colonize) நாம் நினைப்பது போல அல்லாமல் மிக சிக்கல் நிறைந்தது. பயணத்தின் போதோ அல்லது தரையிறங்கிவுடனோ உயிர் பிழைத்திருக்க தேவையான தொழிற்நுட்பத்தை நாம் விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை.சில அதிநுட்ப கருவிகள் இருப்பினும் அவை விண்வெளியிலும் மற்ற கிரகங்களிலும் எவ்வாறு செயல்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

moon surface

சில அதிநுட்ப கருவிகள் இருப்பினும் அவை விண்வெளியிலும் மற்ற கிரகங்களிலும் எவ்வாறு செயல்படும் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவியேற்ற போது நாசாவின் விண்வெளி கொள்கை பற்றி பேசினார்.செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முன்பு ஏதேனும் ஒரு விண்கல்லுக்கு(asteroid)  அனுப்புங்கள்,மேலும் நிலவுக்கு நாம் செல்ல தேவையில்லை ஏனெனில் நாம் ஏற்கனவே அங்கு சென்றுவிட்டோம் என்றார். இந்த சொல் பல தாக்கங்களை ஏற்படுத்தியது.மீண்டும் நிலவுக்கு செல்லும் வாய்ப்புகளையும் குறைத்தது.

மற்ற நாடுகளின் பங்களிப்பு

ஆனால் நாசாவின் சந்திர பிரயாணம் முக்கியத்துவம் வாய்ந்தது.ஏனெனில் செவ்வாய்க்கான பயணத்தில் மற்ற நாடுகளின் பங்களிப்பு குறைவு தான்.இதுவே சந்திரன் என்றால் விண்வெளி துறையில் மற்ற நாடுகளுடன் இணைவது எளிது.

ரஷ்ய விண்வெளி நிறுவனம் Roscosmos மற்றும் ஐரோப்பாவின் விண்வெளி(ESA) நிறுவனங்கள் சந்திர குடியேற்றதிற்கான(Lunar colony) திட்டத்தை முன்னரே வகுத்துவிட்டன.இருப்பினும் நாசாவின் முன்னணி வல்லுனர்களின் துணை மற்றும் உபகரணகள் கிடைப்பதில் ஆவலாகவே உள்ளன.இவை இணைந்தால் அதன்பின் நாசா தலைமையில் எல்லோருக்கும் பலன் கிடைக்கும்.

lunar-mission-one_3110612k

அது மட்டுமின்றி இதுபோன்ற ஒரு செயல் திட்டத்திற்கு(Mars Colony) அதிகளவு செலவும் ஆள் பலமும் தேவைப்படும்,இந்த விசயத்தில் நாசாவும் திணறும் என்பதில் சந்தேகமில்லை. ரஷ்யா,ஐரோப்பா,சீனா ஆகிய நாடுகள் மனிதனை செவ்வாய்க்கு அனுப்புவதில் நாசாவுடன் உடன்பாடில்லை.அந்தளவிற்கு பணவசதி மற்றும் ஆராய்ச்சிக்கு தேவையான தொழிற்நுட்ப வளங்கள் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம்.

செவ்வாய் கிரகத்திற்கு இதுவரை மூன்று விண்வெளி நிறுவனகள் வெற்றிகரமாக செயற்கைகோளை அனுப்பியுள்ளன.அவை நாசா,ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இஸ்ரோ(மங்கல்யன்).

நாசாவின் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக வருடாவருடம் சராசரியாக $19 பில்லியன் பட்ஜெட்டில் ஒதுக்குகிறது அமெரிக்க அரசாங்கம்.இந்த அளவிற்கு ரஷ்யா பெற்றாலும் ஊழல் மற்றும் அரசியல் காரணமாக முழுவதும் பயன்படுவதில்லை.ஐரோப்பியாவோ இதில் 25% அளவைத்தான் பெறுகிறது.

patrawlings-lunarbase-600

அப்படி பார்த்தால் இந்தியாவை கணக்கில் எடுத்துக் கொள்ளவே முடியாது.நாசாவோடு ஒப்பிடுகையில் வெறும் 15% அளவே இஸ்ரோவிற்கு வருகிறது(US $1.2 பில்லியன் or ₹7,927 crore).இந்தியாவின் இப்போதைய அதிகபட்ச திட்டம் மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது(Human spaceflight programme), அதற்கான ஒப்புதல் காத்துக் கொண்டிருக்கிறது.அதன் காரணமாக காலனி திட்டங்களை இஸ்ரோ இப்போதைக்கு கையில் எடுக்கவில்லை.

செவ்வாயின் முன்மாதிரியான சந்திரன் 

நிலவிற்கு திரும்ப செல்வது செவ்வாய்க்கு செல்வதற்கான ஒரு முன்மாதிரி. ISS அனைத்துலக விண்வெளி நிலையம் (International Space Station) நமக்கு பல விசயங்களை கற்றுத்தந்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் மனிதர்களை எவ்வாறு உயிர்ப்பிழைத்திருக்க வைப்பது, மனித உடலில் விண்வெளியின் ஈரப்பு விசை பாதிப்பை பற்றியும் பல பரிணாமங்களை அளித்துள்ளது.

International_Space_Station_after_undocking_of_STS-132

நிலவு திட்டம் செவ்வாயில் நாம் உயிர் பிழப்பதற்கான வாய்ப்புகளை பற்றிய அறிவைத தரும்.உதாரனமாக புவி அல்லாது மற்ற கிரகங்களின் நிலத்தில் கட்டிடங்களை உருவாக்கும் முறை தெரியும்.அதுமட்டுமல்ல நிலவும் செவ்வாயும் புழுதி நிறைந்தது, இயந்திரங்களை பழுதாக்க வல்லது.அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை நிலவிலேயே சோதனை செய்துக் கொள்ளலாம்.

சந்திரனில் வாழ்க்கை அமைப்பதற்கான சாத்தியங்கள் மிக குறைவு.29 நாட்கள் இரவு,பகலை நம்மால் சமாளிக்க முடியாது, முக்கியமாக தாவரங்கள் வளர சூரிய ஒளி அத்தியாவசியமானது.ஆனால் செவ்வாய் நம்மை போல சராசரி இரவு பகல் கொண்டது,இருந்தும் காந்த புலங்கள் இல்லை.நிலவில் வளிமண்டலம் கிடையாது,ஆனால் செவ்வாயில் நாம் சுவாசிக்க இயலாத வாயுக்கள் உள்ளது.

நிலவில் குடியேறுவது அவ்வளவு நல்ல திட்டம் அல்ல,அதே நேரத்தில் செவ்வாய்க்கு முன் இங்கு முன்மாதிரி ஆய்வு செய்வதுதான் சிறந்த முடிவு.

கூடுதலாக நிலவின் வளங்கள் மற்றும் தொலைவு அதன் சிறப்பம்சம். 240,000 மைல் தொலைவுள்ள நிலவை சேர சில தினங்கள் போதும்,ஆனால் செவ்வாய்க்கோ ஆறு மாதங்கள் வரை பிடிக்கும்.சமீபத்தில் நிலவின் அடியில் கண்டுபிடிப்பட்ட நீர் ஆதாரங்களையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

“My interest is not the Moon. To me the Moon is as dull as a ball of concrete,But we’re not going to have a research base on Mars until we can learn how to do it on the Moon first. The Moon provides a blueprint to Mars.” -NASA astrobiologist Chris McKay

இவை எல்லாவற்றையும் விட கருத்தில் கொள்ள வேண்டியது, ஆய்வின்படி நாசாவிடம் தற்போது உள்ள ஏவுகணை, மற்ற சாதனங்களை பயன்படுத்தியே நிலவை விரைவாக அடைய முடியும்,அதுவும் குறைந்த செலவில்..

செவ்வாயை அடையும் பாதை

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விண்வெளி சம்பத்தப்பட்ட செய்திகளில் மக்கள் வெகு ஆர்வம் கொண்டுள்ளனர்.

சந்திர பயணத்தை பலரும் எதிர்த்து வந்திருக்கின்றனர்.செவ்வாய் இருக்கும் போது வாழ்விடம் அமைக்க தகுதி இல்லாத நிலவெதற்கு தேவை இல்லாமல் என்பது அவர்கள் வாதம்.

MarsFirstLight(Rawlings)

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு விண்வெளி சம்பத்தப்பட்ட செய்திகளில் மக்கள் வெகு ஆர்வம் கொண்டுள்ளனர்.இஸ்ரோ முதல் நாசா வரை அவற்றின் செயல்திட்டங்களை கவனிக்கின்றனர், சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்கின்றனர்.விண்வெளி துறை எடுக்கும் முடிவுகள் மக்களையும் நேரடியாக பாதிக்கச் செய்யும்.

நாம் செவ்வாய் கிரகத்தில் ஒரு நாள் குடியேற போகிறோம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை,என் தலைமுறையிலேயே கூட அது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஏன் அதற்கான சரியான பாதையை தேர்ந்தெடுக்க மறுக்கிறோம். நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ள பயன்படும் சந்திர பயணம் நிச்சம் நம்மை வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கி நிரந்தர வாழ்வமைக்க வழிசெய்யும்.

 

2 comments

  • செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதாக காட்டும் புகைப்படங்களை நாசா முன்னர் வெளியிட்டிருக்கிறது.செவ்வாய் கிரகத்தின் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.
   இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பது,அது இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருக்கலாம் என்பதை உறுதி செய்கிறது.
   மேலும் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது.

   http://www.bbc.com/tamil/science/2015/09/150928_nasawater