கழுவேற்றம்(Impalement) என்பது மரண தண்டயிலேயே கொடுமையான ஒன்று. வலிமையான மரத்தினை செதுக்கி அதன் முனையை கூறாக்கி அதில் எண்ணையை தடவி கழுமரம் உருவாகிறது. உயிரோடு இருக்கும் ஒரு மனிதரை கழுமரத்தின் மீது அமர வைப்பதால் ஆசனவாய் வழியாக அது உடலில் ஏறி வாய் வழியாக துடிதுடிக்கச் செய்து வெளியேறும்.

பொதுவாக மரணித்தவர்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள். ஆனால் கழுமரத்தில் ஏற்றியவர்களை அப்படியே விட்டுவிடுவார்கள். கழுகுகளும் நரிகளுமே அந்த உடல்களை கொத்தி தின்னும். இத்தனை பெரிய தண்டனை யாருக்கு கொடுப்பார்கள் என்ற கேள்வி எழலாம்.

திருடர்கள்,கொலையாளிகள் முக்கியமாக அரசிற்கு எதிராக குற்றம் செய்தவர்களுக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்து சமயத்தில் மட்டுமல்லாது உலகெங்கும் பல்வேறு கலாச்சாரத்தில் இந்த கழுவேற்ற சம்பவம் சிறு சிறு பரிணாம வேறுபாடுகளோடு அரங்கேறியிருக்கிறது.

உடன்கட்டை ஏறுதல், நவகண்டம் என மறுக்கபட்ட வழக்கங்கள் போல கழுவேற்றமும் காலாப்போக்கில் காலாவதியானது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கழுமரங்கள் காணக்கிடைக்கும். திருப்புல்லாணி என்கிற இடத்தில் 5 இரும்பாலான கழுமரங்களை வணக்கும் வழக்கம் இன்றும் உள்ளது.

IMG_8825.JPG

மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற அதன் சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமல்லாது ராமநாதபுரம், ஈரோடு என தமிழகத்தின் மற்ற சில இடங்களில் கழுவேற்றம் தொடர்பான பழங்கால ஓவியங்களும் சிற்பங்களும் அங்காங்கே காணக்கிடைக்கின்றன.

குற்றம் புரிந்தவர்கள் எனினும் கழுமரத்தில் இறந்தவர்களின் ஆன்மா அதில் இருக்கிறது என்ற ஐதிகத்தில் கழுமரங்கள் இன்றளவும் வணங்கப்படுகின்றன. வேதனையில் உயிர்துடித்து ரத்த கறை படிந்த மரத்தால் ஆனா கழுமரங்கள் இன்னனும் உயிர்பெற்று இருக்கவில்லை.

அதனால் வெங்கழு எனப்படும் இரும்பாலான கழுமரங்களை உருவாக்கி அதனை மக்கள் வழிபடுகின்றனர். பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ஈரோடு பகுதியில் மிச்சமிருக்கும் ஒரேயொரு பனை மரத்தால் ஆன கழுமரத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்.

சித்திரை திருவிழாவில் ஆறாம் நாள் சமயத்தில் சுந்தரரும் மீனாட்சியும் சிவகங்கை குளத்தில் ஜமீன் மண்டகப்படிக்கு எழுந்தருளுவார்கள். அப்போது அங்கே சைவ சமய ஸ்தாபித வரலாறு பாடலாக ஓதப்பட்டது. கழுவேற்றம் எனப்படும் இந்த நிகழ்வில் சைவத்தின் புகழை பற்றி நிறைய பாடல்கள் படிக்கப்படும்.

இந்த வழக்கம் மதுரையில் நின்றசீர் நெடும் பாண்டியன் ஆட்சியின் போது 8000 சமணர்களை(Jains) கழுவேற்றியதன் தொடர்ச்சியாக கடைபிடிக்க படுவதாக கருதப்படுகிறது. ஆனால் இவ்வாறான ஒரு தண்டனையை சைவ சமயம் பெருமை கொண்டு எதற்காக கொண்டாடுகிறது? யார் அந்த சமணர்கள்?

Implacement.jpg

பன்னெடுங்காலமாகவே தென்னாட்சியில் புத்த/சமண மதங்கள் தங்களது பங்கை ஆற்றியுள்ளன. ஜெயின் எனப்படும் சமண மதத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கென தனி வழிபட்டு முறையை கொண்டவர்கள். ஒரு கட்டத்தில் சமணம் தழைந்தோங்க அவர்களை கட்டுப்படுத்த சைவ சமய காவலர்கள் பல ஒழிப்பு நடவடிக்களில் ஈடுபட்டனர்.

அப்படி ஒரு புராண சம்பவம் தான் இன்றும்கூட விவாதத்திற்கு ஆளாகி கொண்டே இருக்கும் சமணர் கழுவேற்றம் நிகழ்வு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் அற்புதங்களில் ஒன்றாக சமண கழுவேற்றம் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

அன்றைய மதுரையை ஆண்ட கூண் பாண்டியன் சமண மதத்தை ஆதரித்து போற்றியதால் அமைச்சர்களும் ஏனைய மக்களும் அதன் ஏற்றக்கொள்ள வேண்டிப்பட்டது. மகாராணியான மங்கையற்கரசியாரும் மந்திரி குலச்சிறையாரும் மட்டுமே சைவ சமயத்தினை கடைபிடித்தார்கள். மனச்சோர்வடைந்த அரசி திருஞானசம்பந்தரை மதுரை விஜயத்துக்கு அழைத்தார்.

மன்னரை மனம் மாற்ற வந்த சம்பந்தரை தடுக்கும் விதமாக சமணர்கள் அவர் இருந்த மாளிக்கைக்கு தீவைத்ததாகவும் இதனால் கோபமுற்ற சைவ பெரியவர் சமணருக்கு ஆதரவு தந்த மன்னர் மீது சினமடைந்தார். இது சாப நோயாக பாண்டியனை தாக்கியது.

photo2jpg.jpg

சமண முனிகள் எவ்வளவு முயன்றும் அரசனின் நோயை தீர்க்க முடியவில்லை. பின்னர் மங்கையர்க்கரசியின் வேண்டுக்கோளுக்கு இணைய திருஞானசம்பந்தர் திருநீற்றை தந்து நோயை குணப்படுத்தினார். மன்னரும் தான் சைவத்திற்கு திரும்பவதாக ஒப்புக்கொண்டார். இப்போது சமணர்களுக்கும் சம்பந்தருக்கும் நேரடியாக போர் மூண்டது.

அக்கால முறைப்படி சம்பந்தரை வாதத்திற்கு அழைத்தனர் சமணர்கள். வாதத்தில் தோற்றால் தங்களை பாண்டிய மன்னன் கழுவேற்றலாம் எனவும் சபதமிட்டனர். முதல் போட்டி அனல் வாதல் – ஏடுகளை நெருப்பில் இடுதலில் சமணர்களின் ஏடுகள் எரிந்துபோயின. திருஞான சம்பந்தரின் ஏடு எரியாமல் இருந்தது. பனை ஓலைக்களுக்கு பதிலாக பிராய் போன்ற மரப்பட்டைகளை பயன்படுத்தி சூழ்ச்சி செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இரண்டாவது போட்டி புனல் வாதம் – ஏடுகளை ஆற்றில் வீசி எறிந்த போது சம்பந்தரின் ஏடுகள் மட்டும் நீரோட்டத்திற்கு எதிர் திசையில் அடித்துக் கொண்டு வந்தன. ஆனால் சம்பந்தர் இதில் சூட்சமமாக ஓடும் நீரில் எதிர்திசையில் நகரும் கருட சஞ்சீவி வேரை சுவடிகளோடு மலர் போல கட்டிவிட்டிருக்கிறார். இயற்கையில் இப்படி ஓர் அதிசய வேர் இருப்பதே சமணர்கள் அறியாதிருந்தனர்.

போட்டியில் தோற்றதால் சாமணத்தம் என்ற இடத்தில் எண்ணாயிரம் சமணர்கள் வரிசையாக கழுவேற்றப் பட்டதாக சொல்கிறது பெரிய புராணம்.

மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
“துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க” வென்று கூற

இதற்கு சைவ ஆதரவாளர்கள் சார்பாக பல்வேறு சான்றுகள் சமர்பிக்கப்படுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் தொடர்பான ஓவியங்கள் இருக்கின்றன. மேலும் ஆவுடையார் கோயில், சிதம்பரம் நடராஜர் போன்ற இடங்களில் கழுவேற்ற சிலைகள் கிடைக்கின்றன.

பிற்கால புலவரான ஒட்டக்கூத்தர் எழுதிய தக்கயாகப்பரணி, திருவிளையாடல் புராணம் இதனை வழிமொழிகின்றன. ஆரம்பத்தில் எல்லோராலும் ஏற்றக்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் இதன் நம்பகத்தன்மை குறித்த விவாதம் அதிகரிக்க தொடங்கியது.

IMG_4372.JPG

என்னதான் சைவ புராணங்கள் மாற்றி மாற்றி இதைப் பற்றி குறிப்புகளை தந்தாலும் எந்த சமண நூல் இலக்கியமும் கல்வெட்டும் இந்த நிகழ்வினை குறிப்பிடவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எவ்வித கல்வெட்டும் இல்லை.

இது அந்த சமயத்தில் நடந்த சமண வீழ்ச்சியை குறிப்பதாக எடுத்துக் கொண்டாலும் அதன் பின்னர் வந்த சமண கல்வெட்டுகள் ஏன் இதனை குறிக்கவில்லை என தெரிவில்லை. அதன் பின் வந்த பல்வேறு அறிஞர்கள் வெவ்வேறு விதமான கருத்துகளை வெளிப்படுத்தினர்.

இதனை சந்தேகிக்க காரணம் பல உண்டு. தமிழ் மரபில் உடன் கட்டை ஏறுதல், தோற்றவர்களை கழுவேற்றுதல் போன்ற கொடுரமான பலியிடல் முறைகள் இருந்தபோதும் சமணர்களுக்கு அவ்வாறில்லை. வடக்கு நோம்பிருந்து உயிர்விடல் எனும் முறையே இருந்தது. மேலும் புத்த பிட்சு, சமண முனி ஆகியோரை கொன்றால் ஜென்ம சாபம் வந்து சேரும் என இந்து மன்னர்கள் நம்பினர் என்பது யாவரும் அறிந்ததே.

அப்படிப்பட்ட ஒரு சமூகம் ஒரு சமண குழுவை பலியிட்டதா எனும் போது கேள்விகள் எழமால் இல்லை. போட்டியில் தோற்றதால் அவர்கள் தற்கொலை செய்திருக்கலாம். காலப்போக்கில் அது சைவத்தின் வெற்றியை போற்றும் விதமாக மருவியிருக்கலாம்.

முக்கியமாக எண்ணாயிரம் என்பது 8000 சமண முனிகளை குறிப்பிடவில்லை, அது ஒரு குறுப்பிட்ட குழுவினரையோ ஊரையோ பற்றி சொல்கிறது என முன்மொழியப்பட்டது. முனைவர் கொடுமுடி ச.சண்முகன் தான் எழுதிய எண்ணாயிரம் என்ற நூலில் எண்ணாயிரம் சமணர் என்பது சில சமணர்களை கொண்ட குழுவே என்றும் எழுதியுள்ளார்.

erode kathavarayan

பிற்காலத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வில் எண்ணாயிரம் என்பது ஒரு இடத்தை குறிக்கிறது என ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே 8000 சமணர்கள் கொல்லப்படவில்லை. ஒரு குழுவினர் மட்டுமே என தெரியவந்தது. அதன்பின்னர் இது தொடர்பான உண்மை அறியும் வேட்கையும் அதிகரித்தது.

திரு.வி.க தான் எழுதிய இளமை விருந்து நூலில் போதிய சான்றுகள் இல்லாததால் சமணர் கழுவேற்றத்தை ஏற்க மறுத்தார். ஜெயமோகன் தனது வலைப்பதிவு ஒன்றில் சமணர் கழுவேற்றம் என்பது ஆதாரங்கள் அற்ற ஒரு புராண கதை மட்டுமே என எழுதியுள்ளார்.  2017 ல் கோ.செங்குட்டுவன் எழுதிய சமணர் கழுவேற்றம்: ஒரு வரலாற்றுத் தேடல் என்ற புத்தகம் இதன் மொத்த சரித்திரத்தையும் அலசி ஆராய்கிறது.

இன்று நாம் அறிந்திருக்கும் பழமை தமிழ் சமூகத்தின் கலாச்சார பாரம்பரியம் எல்லாமே சங்க தமிழ் நூல்களில் இருந்து பெறப்பட்டதே. திருமண முறைகள், உணவு பழக்கம், குடும்ப சடங்குகள், போர் கலாச்சாரம் என யாவுமே நம்மிடம் கடத்தப்பட்டது இவ்வழியே. எனவே புராணங்களை அப்படியே ஒதுக்கிவிடலாகாது.

ஓவியங்களும் சிற்பங்களும் சில நேரம் கற்பனை கலந்து இருப்பது தான் யதார்த்தம். உதாரணமாக கோவில்களில் காணப்படும் யாளி யை முழவதும் நிஜமென கருதமுடியாது. முறையான தொல்லியல் ஆராய்ச்சியும் கலாச்சார வரலாற்று கட்டமைப்பையும் செய்து அறிஞர் சபையில் என்றுமே விவாதிக்க பட வேண்டியது சமணர் கழுவேற்றம்.

References:

https://www.sramakrishnan.com/?p=510

https://www.nhm.in/shop/9789386737243.html

யாளி மிருகம் – கடவுள்களின் பாதுகாவலன்

https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்

கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்

https://www.nhm.in/shop/9789386737243.html

4 Comments

  • தவறான கருத்து.சஞ்சீவி வேர் நீரின் எதிர் திசையில் செல்லும் போது சுழன்ற வன்னமே செல்லும்.ஆனால் நீங்க சொன்ன மாதிரி, ஓலைகளில் சஞ்சீவி வேரை கட்டினால், வேரின் சுழற்சிக்கு ஓலைகள் தடையை ஏற்படுத்தும்.அதனால் வேர் செல்லாது.புரியுதா நண்பா.

    பிராய் மர பட்டைகளா??
    இன்னைக்கும் திருமுறைகள் பனை ஓலைகள் ல தான் இருக்கு.

    ஞான சம்பந்தர் மீது பழி இட வேண்டாம்.

  • இந்து மன்னர் என இல்லாத பெயரை இட்டு எழுப்புவது ஏன்.

  • எழுப்புவது அல்ல குழப்புவது எழுத்துச் செயலியின் தானித் திருத்தியால் வந்தது.

Leave a Comment