சதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்

சதுரங்கத்தால் மதுவை வீழ்த்திய கிராமம்

கேரளாவின் திருச்சூரில் உள்ள அழகிய கிராமம் மரோட்டிச்சல்(Marottichal). பல அழகான இயற்கை தலங்கள் கொண்ட இவ்விடம் பலரால் அறியப்படாத சுற்றுலா தலம்,ஆனால் அவ்வூரில் உள்ள உன்னிகிருஷ்னண் உணவகத்தை உலகில் பலருக்கு தெரியும்.

%e0%b4%ae%e0%b4%b0%e0%b5%8b%e0%b4%9f%e0%b5%8d%e0%b4%9f%e0%b4%bf%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b5%bd_%e0%b4%b5%e0%b5%86%e0%b4%b3%e0%b5%8d%e0%b4%b3%e0%b4%9a%e0%b5%8d%e0%b4%9a%e0%b4%be%e0%b4%9f

60-70 களில் இந்த பகுதியில் குடித்தனம் வாழ்ந்தவர்களில் பெரும்பங்கு குடியோடு வாழ்ந்திருக்கின்றனர். கள்ளுக்கு அடிமையாகிய ஆண்களால் ஒவ்வொரு குடும்பமும் அளப்பரிய துன்பத்தை அனுபவித்தது.குடும்ப தகராறும் வன்முறையும் தெருவெங்கும் அரங்கேறியது.

எல்லை மீறிய குடிப்பழக்கம் தொடர இந்த ஊர் மக்கள் சேர்ந்து அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்..அதிகாரிகள் தினமும் ரோந்து வந்து கிராமத்தை கட்டுக்குள் கொண்டுவர துவங்கினர்,அதுவரை போதையை பொழுதுபோக்காக கொண்டவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அதே சமயம் சமகால நிகழ்வாக பாபி பிஷ்ஷர் என்பவர் உலகின் சதுரங்க வெற்றியாளராக முடிசூடினார்.உலகின் எல்லா செய்திதாள்களிலும் அது வெளியானது,இந்த கிராமத்து இளைஞன் உன்னிகிருஷ்ணன்(16) கையிலிருந்த செய்திதாளில் அவரது சதுரங்க நுணுக்கத்தை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருந்தான்.

bobby fishewr

அவனுக்கு சதுரங்க விளையாட்டில் அலாதி பிரியம் தொற்றிக் கொண்டது.பல மைல் தூரம் பயிற்சிக்கு சென்றான்.ஆனால் விளையாட ஊரில் ஆள் இல்லையே.

resizer.jpg

அப்போதைய சமயத்தில் இவரோடு விளையாட தெரிந்தவர் ஒருவர் மட்டுமே.அதனால் தனது குடும்பம் தொடங்கி விருப்பம் உள்ளவர்களுக்கு சொல்லி தந்தார்.சில மாதங்களில் இவரே ஊருக்கு சதுரங்கம் சொல்லிக்கொடுக்கும்  ஆசிரியராக மாறினார்.

காவலர்கள் செல்லும் வரை அவர்கள் சதுரங்கம் விளையாட தொடங்கினர். மதுவை பிரதானமாக கொண்டிருந்த கிராமம் மெல்ல மெல்ல ஒரு மறுமலர்ச்சியை வித்திட்டது.

காவலர் கட்டுக்குள் இருந்தவர்கள் 64 கட்டங்களுக்குள் வாழ துவங்கினர்.பாட்டில் இருந்த கைகளில் சதுரங்க காய்கள் திட்டம் தீட்டின.அங்கிருப்போர் யாரும் இப்போது மது அருந்துவதில்லை,ஆனால் பள்ளி குழந்தைகள் முதல் கிழவர்,கிழவி வரை அனைவருக்கும் சதுரங்கம் விளையாட தெரியும்.

CATUR.jpg

அன்று ஒருவரோடு ஆரம்பித்த உன்னிகிருஷ்ணன் இன்று வரை சுமார் 600 க்கும் மேற்ப்பட்டோருக்கு அவரது உள்ளூர் கிளப் வழியாக பயிற்சி அளித்துள்ளார்.அவர் கடைக்கு எப்போது வேண்டுமானலும் சென்று மக்கள் விளையாடலாம்.அவ பேட்டி ஒன்றில் கூறுகையில் தான் சதுரங்க போதைக்கு அடிமையாகி விட்டதாக விளையாட்டாக சொன்னார்.

Chess is my passion. Once I start playing, I forget everything. It’s kind of an addiction.

மதுக்கு செக்மேட் வைத்த இங்குள்ளவர்களுக்கு பல இயக்கங்கள் ஆதரவு தந்துள்ளன, இவர்களை வெளியுலக போட்டிகளுக்கு அறிமுகபடுத்தி ஊக்கம் அளிக்கின்றனர். அரசாங்கத்தின் கவனத்தை
ஈர்த்துள்ள நவீன கிராமத்தின் புகழால் அருகிலுள்ள மற்ற கிராமத்திலும் சதுரங்க பற்று பரவுகிறது.

 கடந்த ஜனவரியில் மிஷன் சம்பூர்ணா திட்டத்தின் மூலம் நமது நாட்டிலேயே 100 சதவீதம் சதுரங்கம் விளையாடும் மக்கள் உள்ள கிராமமாக விழா அரங்கேறியுள்ளது.மலையாள நடிகர் சுரேஷ் கோபி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஒரே நேரத்தில் அதிகமானோரால்(1500 நபர்கள்) சதுரங்கம் விளையாடியதற்கான ஆசிய சாதனையையும் இவ்வூர் கொண்டுள்ளது.

Chess village

மதுவை இப்படியான ஒரு வழியில் கட்டுபடுத்த முடியுமா என்று ஆச்சர்யம் அளிக்கும் இக்கிராமத்தின் வரலாறு கேட்பவர்களை சிந்தனையில் ஆழ்த்துகிறது, அதற்கேற்றவாறு  அரசங்கமும் அவர்களுக்கு தேவையான ஊக்கத்தை அளித்து வருகிறது.

போதையை ஒழிக்க ஆக்கப்பூர்வமான விளையாட்டுகள் உதவும் என்பதற்கான உதாரணமாக இருக்கிறது. இதுபோல மற்ற விளையாட்டு துறைகளையும் சில கிராமங்களில் மேம்படுத்த அரசு முயற்சி எடுத்து வருகிறது.

August-Club-Malayalam-Movie-Poster-6.jpg

  • 5 முறை பட்டம் வென்ற சதுரங்க சக்கரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த் இக்கிராமத்தின் வளர்ச்சியை பாராட்டியுள்ளார்.

  • ஆகஸ்ட் கிளப்(2013) என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரம் இந்த ஊரைச் சேர்ந்தவராகவும் கிராமத்தை பற்றியும் காண்பிக்கப்பட்டிருக்கும்.

Add comment