Read Part 1 of this List here
மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1
FightClub (1999)
வார்த்தைகளால் இந்த திரைப்படத்தை விளக்குவது அவ்வளவு சுலபமில்லை. ஒரு வட்டத்திற்குள் சிக்கி தவிக்கும் வழக்கமான வாழக்கையை உதறி தள்ள ஆசைப்படும் நாயகன் தான் ஆசைப்பட்ட வாழ்வை வாழும் பிராட் பிட் ஐ சந்தித்த பின் நடக்கும் எதிர்பாரா திருப்பங்களே கதை. புதுவகையான திரைக்கதை, சண்டை களம் என பல இளைய ரசிகர்களின் ஆல் டைம் பேவரைட் படமாக இருக்கிறது.
Titanic (1997)
உலக காதலர்களால் கொண்டப்பட்ட ஒரு மிகச்சிறந்த திரைப்படம் டைடானிக். அன்றைய காலக்கட்டத்தில் அதிகமான பொருட்செலவு செய்து எடுக்கப்பட்ட படமும் டைடானிக் தான், படத்தின் பட்ஜெட் 200 மில்லியன் டாலர். இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் 11 ஆஸ்கார் விருதுகளை தட்டிச்சென்றது.
Saving Private Ryan (1998)
இரண்டாம் உலகப்போரை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படம். அதன் பின்னர் வந்த போர் தொடர்பான படங்களுக்கு இது தான் முன்னோடி என அடித்து சொல்லலாம். நிஜமாக போரில் இருக்கும் போது நடக்கும் பரப்பரப்பான காட்சிகளை படமாக்கிய விதத்திற்காக புகழ்பெற்றது. இயக்குனர் ஸ்டீவன் ஸ்பில்பேர்கின் மற்றோரு மைல்கள் சினிமா.
Children of Heaven (1997)
ஈரான் நாட்டில் நடக்கும் கதை இது. இரு குழந்தைகள் தொலைந்த ஒரு காலணியை தேடி செல்லும் பயணம் ஒரு வாழ்க்கை அனுபவத்தை நமக்கு பரிசளிக்கிறது. இயக்குனர் மஜீத் மஜீத் தந்த ஒரு உலகத் தரமான திரைப்படம் இது. அந்த வருடத்தின் சிறந்த மற்ற மொழி திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
American Beauty(1999)
மகளின் தோழியோடு சல்லாபபடும் நடுத்தர அமெரிக்க ஆண்களின் எதார்த்த மன உணர்வை காமெடியாகவும் போகிற போக்கில் அழுத்தமாகவும் சொல்லிய படம். அந்த வருடந்தின் மிக பிரபலமான படமாகவும் இது திகழ்ந்து பல விருதுகளையும் அள்ளி குவித்தது.
Princess Mononoke(1997)
அமெரிக்க படங்களுக்கு நடுவே தனது அடையாளத்தை பதித்த ஜப்பான் திரைப்படம் தான் மோனோனோக்கி. அனிமேஷன் படமான இது அற்புத மாயாஜால உலகத்திற்கு நம்மை கொண்டு செல்லும். கடவுள்கள் ஆவிகளுக்கு மத்தியில் ஒரு மனித பயணத்தை சித்தரிக்கும் அழகியல் இதற்கு உலக அரங்கில் புகழ் பெற்று தந்தது.
Requiem for a Dream (2000)
போதை பழக்கத்துக்கு அடிமையாகும் இளைஞ்ஞர்கள் பற்றிய அசாத்திய திரைப்படம். ஒரு கட்டத்துக்கு மேல் நிஜத்திற்கும் கற்பனைக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் உடலவிலும் மனதளவிலும் பாதிக்கப்படும் கதாப்பத்திரங்ககுள் எடுக்கும் முடிவுகள் எங்கே நம்மை அழைத்து செல்கிறது என திகைக்க வைக்கிறது.
Green mile (1999)
இந்த படம் கிரீன் மைல் என்ற பிரபல நாவலை தழுவி எடுக்கப்பட்டது. தூக்கு தண்டனை அளிக்கப்பட ஒரு கறுப்பர் இனக் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றுவதற்காக வந்த காவல் அதிகாரிக்கு சில நாட்கள் பிறகு அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்பது தெரிய வருகிறது. 4 ஆஸ்கார் உட்பட 15 விருதுகளை வென்றுள்ளது.
The Sixth Sense (1999)
இந்த வரிசையில் இருக்கும் பேய் படம் என்று இதனை சொல்லலாம், ஆனால் இது அதைவிட தகுதி வாய்ந்தது. சிறுவன் ஒருவனுக்கு இறந்த மனிதர்களை பார்க்கும் சக்தி இருக்கும். அவனுக்கு உதவி செய்ய வரும் காவல் அதிகாரி மற்றும் யாருமே எதிர்பார்க்க முடியாத கிளைமாக்ஸ் காட்சியென ஹாலிவுட்டை திரும்ப பார்க்க வைத்த படம் என்றால் அது மிகையல்ல.
Before Sunrise (1995)
மிக எதார்த்தமான அதே நேரத்தில் மாடர்ன் காதலை அழகியலாக தந்த திரைப்படம். ஒற்றை இரவில் நடக்கும் கதையான இது ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை பற்றி கதாப்பத்திரங்கள் வழியாக நமக்கு விருந்தளித்து இருப்பார்கள். ஹாலிவுட் என்றால் ஆக்சன் மட்டுமா என கேட்பர்வர்களுக்கு இது போன்ற நிறைய படங்கள் இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.
1 comment
[…] மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் த… […]