Image default
Entertainment

மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1

த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் – The Shawshank Redemption (1994)

உலக திரையரங்குகளில் வெளியாகி 25 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் IMDB தரவரிசையில் முதல் இடத்தை சிறை வைத்திருக்கிறது இந்த கைதிகள் பற்றிய திரைப்படம். இரு சிறை வாழ் கைதிகளின் நட்பும் நாயகனின் அசராத சாகச இறுதிக் காட்சி கொடுக்கும் நம்பிக்கையும் நம்மை என்றுமே ஆச்சர்ய படுத்த தவறியதில்லை.

The Shawshank Redemption Tamil

பல்ப் ஃபிக்சன் – Pulp Fiction (1994)

90 களில் வெளியாக மிக முக்கியமான கிரைம் திரில்லர் படம். குவெண்டின் டரண்டினோவின் இந்த படைப்பு அதன் கதை சொல்லும் விதத்திற்காகவே பல்வேறு ஆஸ்கர் விருதுகளை வென்று குவித்தது. பெரும்பாலும் வசனங்களாலே நகரும் இந்த படம் ஹாலிவுட் சினிமாவின் சிறந்த மசாலா கேங்க்ஸ்டர் வகை.

Pulb Fiction Tamil

சிண்டலர்ஸ் லிஸ்ட் – Schindler’s List (1993)

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் பெரும் இன அழிப்பிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட யூதர்களை நாசி படையிடமிருந்து காப்பாற்றிய ஜெர்மானியர் கதை திரைப்படத்தின் கருவாக அமைந்துள்ளது. தீதிலும் நன்மை உண்டென உலகிற்கு உணர்த்திய இந்த நிஜ கதையை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கியுள்ளார்.

த சைலன்ஸ் ஆப் த லாம்ப்ஸ் – The Silence of the Lambs (1991)

சிறந்த படத்திற்கு உட்பட எண்ணற்ற ஆஸ்கர் விருதுகள் வென்ற இதன் திரைக்கதை சைக்கோ சீரியல் கொலைக்காரனை பற்றியது. பெண்களை கொன்று அவர்களது தோலை உறிக்கும் சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க FBI அதிகாரியான நாயகி கைதியாக இருக்கும் மற்றொரு கொளையாளிடம் ஆலோசிக்கிறாள். உளவியல் சார்ந்த பல திகில் காட்சிகளோடு படம் நகர்கிறது.

The Silence of the Lambs Tamil

ஃபாரஸ்ட் கம்ப் – Forrest Gump (1994)

டொம் ஹாங்கின் எனும் அதிசிறந்த நடிகனுக்கு ஆஸ்கர் பெற்றுதந்த திரைப்படம். தனது சிறுவயதில் இருந்து கடந்து வந்த வாழ்க்கை பயணத்தை அவர் பகிர்வது போன்ற கதை திரைப்படமாக பட்டிருக்கும். புத்தி கூர்மை குன்றிய கதாநாயகனின் முதல் காதல், முதல் ஓட்டம் என விவரித்து மேசையில் அமரும் போது ஒரு சிறந்த படம் பார்த்த அனுபவம் கிடைக்கும்.

forrest gump tamil

குட்பெலாஸ் – Goodfellas (1990)

அமெரிக்க மாபியா தலைவன் மற்றும் அவரது நண்பர்களின் வாழ்வியலை பற்றிய கிரைம் சினிமா. கேங்க்ஸ்டர் திரைவரிசையில் என்றுமே இந்த படத்திற்கு ஒரு இடம் உண்டு. நேர்த்தியான திரைக்கதை வழியாக ஒரு உண்மை மாபியா வரலாற்றை நமக்கு விருந்தளித்திருப்பார்கள். இன்றைய பல கிரைம் படங்களுக்கு இதுவே முன்னோடி.

Goodfellas tamil

செவன் – Se7en (1995)

இந்த பட வரிசையில் கொடூரமான திரைப்படமாக இதனை கொள்ளலாம். கொலைகாரன் பெருந்தீனி, பேராசை, சோம்பல், கடுங்கோபம், தற்பெருமை, காமம், பொறாமை போன்ற எழு கொடிய பாவங்களை செய்பவர்களை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்கிறான். அதை கண்டுபிடிக்க வரும் மார்கன் ஃப்ரீமேன், பிராட் பிட் ஆகியோருக்கு என்ன ஆகிறது என்பதே கதை.

Seven Movie Tamil

டாய் ஸ்டோரி – Toy Story (1995)

உலகின் முதல் முழு கணினி அனிமேஷன் திரைப்படம். இதன் கதையே சுவாரசியமானது, ஒரு சிறுவனின் வீட்டில் இருக்கும் பொம்மைகளுக்கு உயிர் இருக்கும் மேலும் அவை ஒரு குழுவாக வாழும். சிறுவனின் பிரிய பொம்மையாக இருக்கும் தலைவனுக்கு போட்டி வந்துவிட அங்கு நடக்கும் சேட்டைகளும் பின்னர் இருவரும் இணைத்து செயல்படும் மிஷன் ரசிக்க வைக்கும்.

Toy Story Tamil

பிரேவ் ஹார்ட் – Braveheart(1995)

தலைச்சிறந்த போர் வரலாற்று திரைப்படங்களின் ஒன்று. புதிதாக திருமணம் செய்துக்கொண்ட தனது காதலி ஆங்கிலேய படைகளால் கொல்லபடவே அன்றைய இங்கிலாந்து அரசரை எதிர்த்து ஒரு மக்கள் புரட்சியை செய்கிறார். அதுவே 12 நூற்றாண்டில் ஸ்காட்லாண்ட் சுதந்திர போராட்டித்தின் வித்தாக அமைகிறது. பிரபல ஹாலிவுட் நடிகரான மெல் கிப்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ஜந்து ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது.

braveheart tamil

The Usual Suspects (1995)

மற்றொமொரு ஆஸ்கர் திரைப்படம். சாதாரணமாக ஒரு குற்றவாளியை விசாரணை செய்வதாய் தொடங்கும் கதை பின்னர் பல்வேறு படிநிலைகளில் டுவிஸ்ட் வைத்து மர்மக்கதையாக நீள்கிறது. இன்றைய பல்வேறு முன்னணி கலைஞர்கள் ஒருசேர இந்த படத்தில் நடித்துள்ளனர்.

The Usual Suspects Tamil

மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2

Related posts

ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா

Seyon

பார்த்திபன் இயக்கத்தில் சிம்பு, இணையவிருக்கிறது கெட்டவன் காம்போ

Seyon

கொரோனா வைரஸை கணித்த ஹாலிவுட் திரைப்படங்கள்

Seyon

1 comment

மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 2 July 20, 2020 at 3:07 pm

[…] Read Part 1 of this List here மிஸ் செய்யக்கூடாத மாடர்ன் கிளாசிக் திரைப்படங்கள் – பாகம் 1 […]

Reply

Leave a Comment