தல தோனி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக வீடியோ ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். அதில் 1929 மணி நேரத்தில் தான் ஓய்வு பெர்ருவிட்டதாக அர்த்தம் என கூறியுள்ளார்.

அதாவது இந்த ஐபில் முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கேப்டனான தோனி எல்லா வகையாக கிரிக்கெட் போட்டிகளிருந்தும் முழு ஓய்வு பெற விருக்கிறார்.

சற்று நேரத்திற்கு முன்பு வீடியோவை வெளியிட்ட தோனி அவரது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வுகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார். அத்தோடு தனது சக விளையாட்டு வீரர்களான யுவராஜ் சிங், விராட் கோலி மற்றும் பலரை பற்றியும் பேசினார்.

குறிப்பாக அவர் கடைசியாக விளையாடிய 2020 உலகக்கோப்பை அரை இறுதி பைனல் பற்றியும் அவர் பகிர்ந்துக் கொண்டார். அவரது மனைவி சாக்ஷி ஹார்ட்டின் எமொஜி ஒன்றை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் தங்கள் வருத்தத்தை கமெண்டில் பதிவு செய்து வருகிறார்கள்.

சிறுது நேரத்திலே சச்சின் தனது டிவிட்டர் பதிவில் ‘உன்னுடைய பங்கு இந்திய அணிக்கு மகத்துவமானது. 2011 உலககோப்பை வெற்றி தன வாழ்வில் மறக்க முடியாத தினம்’ எனவும் கூறி வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்க்ஸ் க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இத்தோடு தான் முழு மனதோடு தங்களோடு இணைந்து வருவதாக தனது கிரிக்கெட் ஓய்வை ரெய்னாவும் இணையத்தில் அறிவித்திருக்கிறார். சென்னை ரசிகர்களின் ஆஸ்தான நாயகனான சுரேஷ் ரெய்னாவும் தோனி உடன் ஓய்வு பெறுவது கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.

2020 உண்மையிலேயே மோசமான ஆண்டுதான் போல..

Leave a Comment