அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி

அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கள் : உலகின் பண்டைய இல்லுமினாட்டி

ஒரு இரகசிய அமைப்பின் வரலாறு இந்தியாவில் அதிகம் அறியப்படாத மர்மக்கதைகளில் ஒன்றாக உள்ளது. அந்த அமைப்பு பரந்த அளவிலான மேம்பட்ட அறிவை கொண்டதாகவும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு அசோக சக்கரவர்த்தியால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்த அமைப்பில் மொத்தம் 9 பேர் இருந்தனர் என்றும் ஒவ்வொருவர்க்கும் ஒரு குறிப்பிட்ட துறையை சார்ந்த அறிவை பாதுகாக்கும் பொறுப்பு தரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக போக்குகளை கையாள்வதில் பரவலாக இவர்களே பங்குகொண்டார்கள். ஆனால் இது போன்ற ஒரு இரகசிய அமைப்பு இருப்பது உண்மையா அல்லது அது வெறும் புராண கதை தானா?

Origin:

இந்திய துணைக்கண்டத்தை ஒருங்கிணைத்த சந்திரகுப்த மௌரியரின் பேரனே அசோகர். தன் முன்னோர்களால் ஆண்ட தேசத்தை கட்டிக்காத்ததோடு நில்லாமல் அதன் எல்லைகளை விரிவுபடுத்தி பாரதம் காணாத சாம்ராஜ்யத்தை நிறுவினார். இதற்காக அவர் கொடுத்த விலைதான் கலிங்கம்(இன்றைய ஒரிசா). கல்கத்தா முதல் மெட்ராஸ் வரை பரவிருந்த கலிங்கத்தின் மீது தன் வல்லமை மிகுந்த படை கொண்டு போருக்கு சென்றார் அசோகர்.

கி.மு.260 ல் மிகவும் ஆக்ரோஷமாக நடந்த போரில் அசோகரின் சக்திவாய்ந்த படைவீரத்தால் 1,00,000 கலிங்க போர் வீரர்கள் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 1,50,000 பேர் சிறைபிடிக்கப் பட்டனர். மாபெரும் சரித்திர வெற்றி பெற்ற பின்னும் போரின் குருதி வெள்ளத்தை கண்டு இனி நான் போர் செய்யவே மாட்டேன் என அசோகர் மனம் மாறினார் என்றால் போரின் உக்கிரத்தை அறிந்து கொள்ளுங்கள்.

அதன் பின் அவர் புத்த மதத்தை தழுவி அமைதியை தேசமெங்கும் நிலைநாட்டினார் என்பதை உலகறியும். ஆனால் இத்தகைய கொடூர செயல்களுக்கு மனிதனின் சிந்தனை ஆற்றலும் கண்டுபிடிப்புகளுமே காரணம் என்றுணர்ந்த அசோகர் பேரழிவுகளை உண்டாக்கக்கூடிய அறிவினை தொகுத்து, அவற்றை தீயவர் கைகளில் கிடைக்காமல் பாதுகாக்க திட்டமிட்டார். அதற்காக உருவாக்க பட்டதே ஒன்பது பேர் அடங்கிய ரகசியக்குழு.

Nine Unknown

கிமு 226(BC) உருவாக்கப்பட்ட அசோகர் அமைப்பு உலகின் மிக பழமையான ரகசிய சமூக அமைப்பாக கருதப்படுகிறது. குழுவில் இருந்த ஒன்பது ஆண்களுக்கும் ஒன்பது வெவ்வேறான துறைகள் கொடுக்கப்பட்டது. இவர்கள் அரசியல் சமுக வாழ்வியலை கட்டுப்படுத்துவதை சரிவிகிதத்தில் வைத்திருப்பத்தில் முக்கிய கவனம் செலுத்தினர்.

இவர்கள் அறிந்த கோட்பாடுகள் மிகவும் ரகசியமாக காக்கப்பட்டன. முதலில் பாதுகாக்க மட்டுமே உருவாக்கப்பட்ட அமைப்பு பின்னாளில் மனித குலத்திற்கு தேவையான ஆய்வுகளையும் மேற்கொண்டது. தங்கள் மரணத்துக்கு பிறகு அந்த துறையை வளர்க்க ஒரு சீடரை உருவாக்கவும் ஆணை இடப்பட்டது.

அமைப்பினை சார்ந்தவர்கள் இயற்கை அறிவியல் முதல் பிரபஞ்ச விஞ்ஞனம் வரை எல்லாவற்றையும் தொகுக்க ஆரம்பித்தனர். சாதாரண மனிதர்களுக்கு இந்த வகையான படைப்புகள் கிடைத்தால் அவை பேரழிவை உண்டாக்கும் என கருதி அத்தகைய தொழிற்நுட்பங்களை ரகசியமான பேணி காத்தனர். இவர்கள் ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட கோட்பாடுகளை கொண்ட ஒன்பது புத்தகங்களை தொகுத்தார்கள். அவை பினவருமாறு:

1) Propaganda & Psychological Warfare:

அதாவது உளவியல் தொடர்பான ஆபத்தான அறிவியல் கட்டுபடுத்துவது. ஒருவரின் உடலை எதிர்கொள்ளாமல் மனதின் சக்தியை வைத்து அவர்களை வசியபடுத்த இயலும். பேச்சாற்றல் மற்றும் கலைகளை பயன்படுத்தி மக்களை அடிமைபடுத்துதல் வரலாற்று கதைகளில் நிறைய உண்டு.

2) Physiology:
அதாவது உடலியல் சார்ந்த மர்மங்களை பேணுவது. ஆராய்ச்சிகள் வழி உடல் பளுவை அதிகரிப்பது, மேலும் ஒரே தாக்குதலில் ஒருவரின் உயிரை பறிக்கும் வகையிலான வர்மக்கலைகள் பயன்படுத்துவது, நரம்பு மண்டலத்தை தாக்கி எப்படி ஒருவரை அழிக்கமுடியும். ஜூடோ கலையை வளர்த்தது இவர்கள் தான் என்றும் கூறப்படுகிறது.

3) Microbiology:
மூன்றாவது துறை நுண்ணுயிரியல். கண்ணுக்கு தெரியாத இந்த நுண்ணுயிர்களால் மனிதனுக்கு உள்ள நன்மைகளும் தீமைகளும் பற்றி ஆராய்வதே இந்தத்துறை. மருத்துவ துறைச் சார்ந்த உலக அழிவை உண்டாக்கும் கிருமிகளை பற்றி ஆராயவும் செய்தது.

4) Alchemy:
மனித இனத்தின் மிகப்பெரிய ஆராய்ச்சி பண்டங்களில் ஒன்றான ரசவாதம் பற்றியதே இந்த துறை. அதாவது எந்த ஒரு உலோகத்தையும் தங்கமாய் மாற்றும் தொழிற்நுட்பத்தை கண்டறியும் ஆய்வு.

5) Communication:
தொலைத்தொடர்பு என்றவுடன் வெறும் பிற நாட்டு மொழிகளுடனானது என்று எல்லை விதிக்கமால் வேற்று கிரக வாசிகளின் சமிக்ஞைகளை ஆராய அமைக்கப்பட்டது. வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு கொள்ளுவது எப்படி என்றும் ஆராய்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

இந்தியாவின் மர்ம ஏலியன் தளம் பற்றி அறிய இங்கே கிளிக்கவும்.

6) Gravitation:
புவியின் ஈர்ப்பு விசை பற்றியான இந்த ஆய்வு அதனை மேலிட்டு விண்வெளியில் பறப்பது பற்றியது. 4 ஆம் பரிணாமம் பற்றியும் விமானங்கள் அமைப்பது தொடர்பான துறை. ராமாயணம் துவங்கி பல வேத இதிகாசங்களிலும் புஷ்பக விமானத்தின் குறிப்புகள் உள்ளன.

7) Cosmology:
பிரபஞ்ச பேரண்டத்தை பற்றியது. விண்வெளியில் இருந்து வரும் கதிர்களையும் அவை புவியில் ஏற்படுத்தும் விளைவுகளையும் இந்த துறை ஆய்வு செய்தது. கிரகங்கள், விண்மீன்கள் பற்றிய குறிப்புகள் எழுதப்பட்டன.

8) Light:
ஒளி பற்றிய துறையே இது. ஒளியின் வேகத்தை அதிகரிப்பது, குறைப்பது எப்படி, ஒளியை ஆயுதமாக பயன்படுத்துவது எப்படி என்று இந்த துறையை சேர்ந்தவருக்கு தெரியும் என்று சொல்லப்படுகிறது.

9) Sociology:
சமுகம் பற்றியும் அது உருவாவது எப்படி, வீழ்வது எப்படி போன்றவற்றை ஆராயும் துறை இது. போர் முறையும் அரசாட்சி விதிமுறைகளும் வகுக்கப்பட்டிருந்தன.

Popular Media

1923 ஆம் ஆண்டு டால்போட் முண்டி என்ற ஆங்கிலேய எழுத்தாளர் அட்வெஞ்சர் என்ற பத்திரிகையில் அசோகரின் ஒன்பது ரகசிய மனிதர்கர் பற்றி தொடராக எழுதினார். இதுவே இந்த ரகசிய அமைப்பினை முதலாவதாக வெளியுலக அடையாளப்படுத்தியது.

ஒன்பது தெரியாத ஆண்கள் என்ற கருத்து லூயி பாவ்வெல்ஸ்(Louis Pauwels) மற்றும் ஜாக்ஸ் பெர்கீயர்(Jacques Bergier) ஆகியோரால் 1960 ஆம் ஆண்டு த மோர்னிங் ஆஃப் த மஜீஷியன்ஸின் புத்தகத்தில் பிரபலப்படுத்தப்பட்டது.

இந்த அமைப்பு உண்மையானது என்றும் இந்திய பேரரசர் அசோகரால் நிறுவப்பட்டது என்றும் அவர்கள் கூறினர். மேலும் போப் சில்வெஸ்டர் II (Silvester II) அவர்களை சந்தித்ததாகவும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு காலனித்துவ நிர்வாகியும் எழுத்தாளருமான லூயி ஜாகோலியட் அவர்களது இருப்பை உறுதிப்படுத்தினர் என்றும் அவர்கள் கூறினர்.

இல்லுமினாடி அமைப்பினை போல உலகினை பின்னிருந்து கட்டுப்படுத்தும் நபர்கள் என இவர்கள் கருதப்படுகிறார்கள். சாத்தியமில்லாத கண்டுபிடிப்புகளும் அறிவியலும் இவர்கள் உதவியால் தான் நிகழ்ந்தது என ஓர் கூட்டம் நம்புகிறது.

இந்திய அறிவியல் வளர்ச்சியிலும் இவர்கள் பங்கு இன்றியமையாததாக அறியப்படுகிறது. சிவி ராமன், விக்ரம் சாராபாய், ஹோமி பாபா போன்றோர் இவர்களை சந்தித்ததாகவும் சொல்லப்படுகிறது.

Myth

இவற்றை முற்றிலுமாக நாம் தவிர்க்க இயலாததற்கு காரணம் அன்றைய இந்திய தேசத்தின் பல்துறை வளர்ச்சி. சரித்திரத்தின் சிறந்த ஆளுமையாளராக கருதப்படும் சாணக்கியர் அசோகரின் தாத்தாவான சந்திரகுப்த மௌரியரின் ஆலோசராக இருந்தவர். அர்த்த சாஸ்திரங்கள், வானியல் போன்றவற்றை கணிப்பதில் இவர் காலம் சிறப்புற்றிருந்தது.

மேலும் பூஜ்யத்தை அறிமுகபடுத்திய ஆரியபட்டா மௌரிய பேரரசின் காலத்தை சேர்த்தவர் என்றே கருதபடுகிறது. உலகின் முதல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுஸ்ருதர் இதே காலகட்டத்தை சேர்ந்தவரே.

இவை அக்காலத்தில் மக்களின் மத்தியில் அறிவியல் துறை எத்துணை அளவிற்கு முற்போக்காக இருந்தது என்பதற்கும் புவியின் மற்ற பாகங்கள் சிந்திக்க இயலாத அதிதொழிற்நுட்ப சக்தியை இந்திய பெற்றிருந்தது என்பதற்கும் சான்றாக இருக்கிறது.

அசோகர் மட்டுமல்லாது அக்பர், விஜயநகர மன்னர்கள் ஆட்சியிலும் நவரத்தினங்கள் எனப்படும் அமைச்சரவை இருந்துள்ளது. இந்த வழக்கம் உண்மையான அசோகரின் ஒன்பது மர்ம மனிதர்கள் அடங்கிய குறிப்புகளின் தொடர்ச்சியாக இருந்திருக்கலாம்.

இதனை கட்டுபடுத்த இப்படி ஒரு சமூகம் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எதிர்காலத்தை கணிக்கும் சோதிடம் கலையின் வழியே பாரதம் அந்நிய ஆக்கிரமிப்புகளால் அச்சுறும் வாய்ப்பு இருப்பதால் அவை எதிர்நாட்டு கைகளுக்கு கிடைக்காமல் தகவல் நுட்பங்களை பாதுகாக்க எண்ணிருக்கலாம். இதனாலே முகலாய ஆங்கிலேய காலத்தில் இந்திய அறிவியல் பெருமளவில் மேம்படாததற்கு காரணமாக இருக்கலாம்.

மேலும் புத்த சமயத்தில் மறுபிறவி பெரும் நம்பிக்கை சார்ந்த விஷயமாக இருந்து வந்தது. 2000 வருடங்களுக்கு பிறகு புத்தர் மீண்டு வருவார் என்றும் அப்போது அந்த ஒன்பது நபர்கள் அவரை கண்டுபிடித்து வழிநடத்துவார்கள் என்றும் நம்பப்படுகிறது.

ஆனால் பெரும் சக்திகளை ரகசியமாக வைத்திருந்த இந்த அமைப்பு ஏன் இந்தியாவை அடிமைப்பட்டத்திளிருந்து காக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதே சமயம் நவீன அறிவியல் துறை கண்டுபிடுப்புகள் எல்லாமே ஐரோப்பிய அமெரிக்க நாடுகளிலியே அதிகம் காணபடுகின்றது.

இந்தியர்கள் அதன் அங்கமாய் இருப்பினும் அவர்கள் உபகரண ஆய்வு வசதிகளுக்காக வெளிநாட்டில் குடியேறி விடுகிறார்கள். பெரும் அறிவாற்றல் பெற்றிருந்த சமூகம் எப்படி இவ்வாறு அழிவு நோக்கி போனது. ரகசிய ஒன்பது மனிதர்கள் ஏன் இந்தியாவை வல்லரசு ஆக்கவில்லை என அடுக்குகிறார்கள்.

மேலும் சிலர் இல்லுமினாட்டி, டெம்ப்ளரஸ் போன்ற கற்பனை மர்மக்கதைகள் மட்டுமே இவை. அதனை அவ்வாறே விட்டுவிடுவதே சிறப்பு என கருதுகிறார்கள்.

உலகின் பேரழிவுகளில் இவர்கள் எங்கே சென்றார்கள் என கேள்வி எழுப்பும் சிலர் இவற்றை வெறும் கட்டுக்கதையாக மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்கள். நீங்கள் எப்படி?

Add comment