Image default
Devotional Mystery Temple

தலைகீழாக தெரியும் கோவிலின் கோபுர நிழல்

கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி எனும் இடத்தில் விருபாட்சர் கோயிலாகும். இந்த கோயில் கோபுரத்தின் நிழல் தலைகீழாக விழும் அதிசயம் நடந்துவருகிறது. தென்னிந்திய கட்டடக்கலையின் திறமையின் சான்றாக இந்த கோயில் திகழ்கிறது.

பண்டைய காலம் தொட்டே இந்தியர்கள் கட்டிடக் கலையில் சிறந்தவர்களாக இருந்திருப்பதை இந்தக் கோவில்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். ஐநாவின் யுனஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திருக்கோயில் கட்டடக்கலைக்கு மட்டுமல்லாமல் பல மர்மங்களுக்கும் சான்றாக திகழ்கிறது.

பெங்களூரிலிருந்து 350கிமீ தொலைவில் துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோயில் ஹொய்சாலா வம்சத்தினரால் கட்டப்பட்டு விஜயநகர பேரரசால் பராமரிக்கப்பட்டு வந்தது.

விருபாட்சர் கோயில் கோபுரத்தின் நிழல் கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் ரங்க மண்டபத்தில் இருக்கும் சுவரில் தலைகீழாக விழும் மர்மத்தின் காரணம் இன்றுவரை எவராலும் கண்டுபிடிக்க முடியாமல் புரியாத புதிராகவே விளங்குகிறது.

ஒரு நிழல் தலைகீழாக விழவேண்டுமென்றால் பூதக்கண்ணாடி போன்ற ஏதாவது ஒரு போல் இடையில் இருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் கோயில் கோபுரத்தின் நிழல் எப்படி தலைகீழாக விழுகிறது என்பதே இந்த மர்மத்தின் உச்சமாகும்.

கோயிலின் நிழல் தலைகீழாக விழுவது இறைவனின் அருள் என்று பக்தர்களும். இல்லை இது கட்டடக்கலையின் நுட்பம் என்று அறிவியலாளர்களும் காலங்காலமாக விவாதித்து வருகின்றனர். அந்நிய படையெடுப்புகள் பல வந்தாலும் இந்த கோயிலை எதுவும் செய்ய முடியவில்லை என்பது இந்த கோயிலின் மற்றொரு தனி சிறப்பாகும்.

படையெடுப்புகளால் 1565ம் ஆண்டு இந்த நகரமே அழிந்தபோதும் இந்த கோயில் மட்டும் எந்த பாதிப்புமின்றி கம்பீரமாக காட்சி தருகிறது. இந்தியாவில் உள்ள பல முக்கிய திருத்தலங்களில் பல விதமான அற்புதங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் உள்ளன.

அந்த வகையில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ஒரு கோவிலின் நிழல் தலை கீழாக விழும் அதிசயம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோவிலில் நிகழ்கிறது.

🌟 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோவில், கட்டிடக்கலைக்கும், பல மர்மங்களுக்கும் சான்றாக அமைந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும், நிழல் தலைகீழாக விழுவதற்கான காரணம் பற்றியும் தெரிந்து கொள்வோம்…..

🌟 உலகம் வியக்கும் கட்டிடங்களில் ஒன்றுதான் சிறப்புமிக்க விருபாட்சர் கோவில். இந்த புகழ்பெற்ற கோவில், கர்நாடக மாநிலத்தின், பெல்லாரி மாவட்டத்தில், ஹம்பி என்னுமிடத்தில் அமைந்துள்ளது.

🌟 ஏழாம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசால் கட்டப்பட்ட இந்த கோவில் பெங்கள%2Bரில் இருந்து சுமார் 350 கி.மீ தூரத்தில் உள்ள ஹம்பி என்ற இடத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.

🌟 இந்த கோவிலின் ராஜ கோபுரம் சுமார் 165 அடி உயரம் கொண்டது. இதன் நிழல் ஒரு சுவற்றில் இங்கு தலை கீழாக விழுகிறது. இந்த அதிசய நிழலின் ரகசியம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

🌟 நிழலானது தலைகீழாக விழவேண்டுமானால் அதற்கு கண்ணாடி போன்று ஏதாவது ஒன்று நிச்சயம் தேவைப்படும். ஆனால், எதுவுமே இல்லாமல் இந்த கோவிலின் நிழல் எப்படி தலை கீழாக விழுகிறது என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை.

🌟 இந்த கோவிலில் உள்ள மண்டபம் ஒன்றில் 114 தூண்கள் உள்ளன. மற்றொரு மண்டபத்தின் நடுவில் ஒரு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டு அதில் துங்கபத்திரை ஆற்றின் நீர் மடப்பள்ளியை அடைந்து பின் வெளிப்பிரகாரம் வழியாக வெளியேறுகிறது. வடிகால் கால்வாய் முதல் வானளாவிய கோபுரம் வரை அனைத்திலும் மிக சிறந்த கட்டிட கலையின் திறன் காண்போரை பிரமிக்கவைக்கிறது.

🌟 இதை விஞ்ஞானிகள், கோபுரத்திற்கும் சுவருக்கும் இடையே ஒரு துளை லென்ஸ் போல செயல்பட்டு கோபுரத்தின் நிழலை தலைகீழாக விழ செய்கிறது என்று கூறுகின்றனர். இருந்தாலும் அவை நிரூபிக்கப்படவில்லை என்றே கூறப்படுகிறது.

🌟 இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்ததில் இதை சாளுக்யா மற்றும் ஹொய்சாலா வம்சத்தினர் கட்டியதாக தெரிகிறது. ஆனாலும், கிருஷ்ணதேவராயர் காலத்திலும் இந்த கோவிலில் பல பணிகள் நடைபெற்றதற்கான ஆதாரங்களும் அதில் இருக்கிறது.

Related posts

விஜய தசமி – Celebrate Demon-Slaying Goddess

Seyon

தசரா – இறைவியின் கோலாகலம்

Seyon

கடலுக்குள் மூழ்கியவர் மூன்று நாட்கள் கழித்து உயிருடன் வந்த அதிர்ச்சி சம்பவம்

Paradox

Leave a Comment