தாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்

தாஜ்மகாலை விற்ற மோசடி மன்னன்

உங்களிடம் ஒருவர் வந்து நான் தாஜ்மஹாலை விற்கிறேன் வாங்கிக் கொள்கிறீர்களா என்றால் என்ன சொல்வீர்கள், சொன்னவரை ஏற்ற இறக்கமாக பார்ப்பீர்கள். சட்டென சிரிப்போ, சுள்ளென வெறுப்போ, அலட்சிய பார்வை அனிச்சையாக வந்து சேரும்.

ஆனால் ஒரு முறை அல்ல மூன்று முறை ஒருவர் தாஜ்மஹாலை விற்றிருக்கிறார் என்றால் நம்புவீர்களா?

பீகார் மாநிலத்தின் பங்காரா என்ற கிராமத்தில் பிறந்த நட்வர்லால் மோசடி தொழிலுக்கு வரும் முன்பு வழக்கறிஞராக இருந்துள்ளார். மாறு வேடத்தில் கில்லாடியான இவர் நூற்றுக்கும் மேற்பட்டோரை திறமையாக ஏமாற்றி கோடிக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து  50 க்கும் மேற்பட்ட புனைப் பெயர்களில் குற்றங்கள் புரிந்துள்ளார்.

பல வெளிநாட்டவர்கள், பிரபலங்கள் போல ஒரு முறை பார்த்தாலே கையெழுத்திடும் திறம் கொண்டவர். இந்தியாவின் மிகச்சிறந்த ஏமாற்றுக்காரன் அல்லது மோசடிக்காரனான மிதிலேஷ் குமார் ஸ்ரீவத்சவாவை உலகம் நட்வர்லால் என்றே அறிகிறது.

இந்தியாவின் புராதணங்களான தாஜ் மகாலை மூன்று முறையும், ரெட் போர்ட்டை இரண்டு முறையும் , இராஷ்டிரபதி பவன் மற்றும் இந்திய பார்லிமெண்ட் டினை 545 உறுப்பினர்களோடு சேர்த்து முறையே ஒரு முறையும் விற்றுள்ளார்.

Sign of natwarlal.png

மேலும் இவர் பல தொழில் நிறுவனங்களை லாவகமாக ஏமாற்றியுள்ளார். டாடா, பிர்லா, அம்பானி என பலரும் இதில் அடக்கம். சமூக ஆர்வலர் போல் நாடகமிட்டு பெரிய அளவிலான தொகையை இவர்களிடமிருந்து கொள்ளையடித்து சென்றுள்ளார்.

கடை முதலாளி போன்று நடித்து போலியான காசோலை மூலம் அவற்றை லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்றிருக்கிறார்.

பிறந்தது பீகார் என்றாலும் 8 மாநில காவல்துறை இவரை 100 க்கும் மேற்பட்ட குற்றங்களுக்காக தேடியது.பிடிப்பட்டால் 113 வருட சிறைத்தண்டனை அளிக்கவும் அரசு காத்திருந்தது.பல முறை அவரை கைதும் செய்தது.

ஆனால் நட்வர்லாலோ தன் வாழ்வில் வெவ்வேறான சிறைகளில் இருந்து மிக துணிச்சலாக எட்டு முறை தப்பி சென்றுள்ளார்.

ஒரு முறை கான்பூர் சிறையிலிருந்து சப்-இன்ஸ்பெக்டரின் ஆடையை (கடத்தி) அணிந்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.அங்கிருந்த பாதுகாவலர்களுக்கு பணப்பையை கொடுத்து விட்டு அவரசரமில்லாமல் டாக்ஸில் ஏறி தப்பித்து சென்றுள்ளார்.

natwarlal-2
Possibly this is the only taken picture of Mithilesh Kumar Srivastava aka Natwarlal

சுவாரசியம் என்னவென்றால் 1996 ஆம் ஆண்டு இவர் ஒன்பதாவது முறையாக கைது செய்யப்பட்டு தப்பித்த போது அவர் வயது 84.

சக்கர நாற்காலியில் வைத்து கான்பூர் சிறையிலிருந்து டெல்லி AIIMS மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது காவல் அதிகாரிகளை ஏமாற்றி விட்டு டெல்லி ரயில் நிலையத்தில் காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவரை யாரும் பார்க்கவில்லை(Last seen June 24,1996).

வாழ்ந்த இவனைப் போல என்பது மாதிரி செத்தாலும் இவரை போல சாகனும். ஜுலை 25,2009 ஆம் ஆண்டு நட்வர்லால் இறந்து விட்டார் எனவும் ஆகவே அவர் மீதுள்ள 100க்கும் மேலான குற்றங்களை தள்ளுபடி செய்யுமாறும் அவரது வழக்கறிஞர்  நீதிமன்றத்துக்கு கோரிக்கை செய்தார்.

அதே சமயம் நட்வர்லாலின் சகோதரர் கங்கா பிரசாத் ஸ்ரீவஸ்தவா 1996 லேயே தான் அவர் உடலை தகனம் செய்ததாக வாதடினார். ஆனால் இன்றுவரை அவருடைய நிச்சய இறப்பு தேதி பதிவு செய்யப்படவில்லை.

13 வருட இடைவெளியில் இருமுறை இறந்து இன்றும் வாழும் சரித்திர நாயகனாய் இருக்கிறார் நட்வரலால்.

இறந்தும் அழிவில்லாமல் வாழும் இவரை பல கொள்ளக்காரர்களும் மோசடி செய்பவர்களும் மரியாத்தைக் குறிய ‘X‘ என அழைக்கிறார்கள். மோசடி தொழிலுக்கு வரும் பலருக்கு இவர் முன் உதாரணமாக(நாயகனாக) திகழ்கிறார்.இன்று ஏமாற்றுவதில் சிறந்த கில்லாடிகள் நட்வர்லால் என்ற பெயரோடு அழைக்கப்டுகிறார்கள்.

சமீபத்தில் கூட 21 வயது இளைஞர் ஒருவர் இந்திரபிரஸ்தா ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி போல வேடமிட்டு 19 லட்சத்தை அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துள்ளார். தன் பள்ளி வயதில் பார்த்த திரு.நட்வர்லால் படத்திற்கு பெரிய ரசிகரான இவர் குரு பாணியை கையாண்டுள்ளார்.

catchme-quote2

  • நட்வர்லாலின் மருமகன் ராணுவத்தில் பணிபுரிகிறார்.

  • இவரது சொந்த கிராமத்தில் இவர் நினைவாக அவர் ஒருகாலத்தில் வாழ்ந்த இடத்தில் அவருக்கு சிலை வைத்துள்ளார்கள்.

  • Aaj Tak தொலைக்காட்சி சேனலில் வெளியான Jurm(2004) என்ற  நிகழ்ச்சி இவர் வாழ்க்கைக் கதையை 9 தொடர்களாக ஒளிபரப்பியது.

  • கனடா நாட்டு எழுத்தாளர் Rohinton Mistry-ன் புகழ்பெற்ற புத்தகமான “Such a Long Journey” ல் மிதிலேஷ் குமாரின் மோசடிகள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

  • அமிதாப் பச்சன் 1979 ல் நடித்து வெளியான Blockbuster திரைப்படமான Mr.Natwarlal மற்றும் சமீபத்தில் இம்ரான் ஹஷிமி நடிப்பில் வெளியான Raja Natwarlal ஆகிய படங்களுக்கு இவரை மையப்படுத்தியே பெயர் வைக்கப்பட்டன.

இந்தியாவின் தலைச்சிறந்த ஏமாற்றுக்காரராய்(Greatest conman of India) இவர் வரலாற்றால் காணப்படுகிறார்.ஒரு ஏமாற்றுக் காரராய் இருப்பின் அவர் ஒரு சிறந்த தந்திரவாதி என்பதை எவராலும் மறுக்க முடியது. தன் வல்லமையால் இந்திய சரித்திரத்தில் தன்னிகற்ற ஒரு இடத்தில் வாழும் மரியாதைக்குரிய மோசடி மன்னன் நட்வர்லால்.

இவரை போல :

நடவர்லாலின் தனித்தன்மை வாய்ந்த தந்திர வழிமுறைகள் அவரை Frank Abagnale மற்றும் Victor Lustig ஆகியோரோடு ஒப்பிட வைக்கிறது. இவர்களுக்குள் பல ஒற்றுமைகள் உள்ளன. Frank Abagnale தன் இளம் வயதிலேயே மருத்துவர், விமானி,வழக்கறிஞர் என பலவகையான ஆள்மாறட்டத்திற்கு பெயர்பெற்றவர்.

இலவசமாக உலகம் சுற்ற நினைத்த இவர் ஒரு விமானி போல வேடமிட்டு விமான நிறுவனம் செலவிலே 1,600,000 km ஐ 250 விமாங்களில், 26 நாடுகளுக்கு பயணித்துள்ளார். இதில் ஒருமுறை விமானத்தை ஓட்டுவதற்கு பணிக்க Auto Pilot on செய்துவிட்டு அமைதியாய் இருந்து விட்டார்.நல்லவேளை 140 பயணிகள் வேறு அமர்ந்து இருந்தனர்.

இப்போது அவரது மனைவியை போல இவருடைய ஒரு மகனும் FBI-ல் பணிபுரிகிறார்(?) . 2002 ல் Steven Spielberg இயக்கி Leonardo DiCaprio நடித்த Catch Me If You Can படம் இவருடைய வாழ்க்கை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

cover

Victor Lustig என்வர் முதல் உலகப்போர் முடிவுற்ற தருணத்தில் பாரிஸ் நகர ஈபிள் கோபுரத்தை(Eiffel Tower) இரு முறை விற்றுவிட்டு தப்பித்து விட்டார்.இவருடன் ஒரு கூட்டமே இணைத்து இதுபோல பல வேலைகள் செய்துள்ளது. வாழ்விற்கு தேவையான இவர் வெளியட்ட பத்து கட்டளைகள் புகழ்பெற்றவை(!)

http://shantraveller.com/2016/08/dhyan-chand-four-hand-magician/

 

References:

Add comment