அலுவலகம் முதல் அட்வென்சர் வரை காலணிகள்(Shoes) இன்றியமையாத தாகிவிட்டன. நம்மை போன்ற நாடுகளின் தட்வெப்ப நிலைக்கு அவை ஏற்றதாய் இல்லையெனினும் பாதுகாப்புக் காகவும் சுத்தம் கருதியும் நாம் அவற்றை ஏற்றுக்கொள்கிறோம்.
இதற்கெல்லாம் ஒரு விடிவு காலமாக சுவிஸ் நிறுவனம் ஒன்று இரும்பை விட 15 மடங்கு வலுவான டைனினா(Dyneema) இழைகளைக் கொண்ட காலுறை (Socks) ஒன்றை கண்டுபிடித்துள்ளது. Dyneema நீரில் மிதக்கும் ,UV கதிர்வீச்சு மற்றும் ரசாயன விளைவுகளை எதிர்க்கொள்ளும்.
வலிமையானதாய் இருப்பதால் காலணிகள் அணியாமலே இவற்றை பயன்படுத்தலாம் FYF(FreeYourFeet).”அதே சமயம் நீர் உட்புகாத இந்த காலுறைகள் இலகுவாகவும் வெறுங்கால்களுடன் நடப்பது போன்ற உண்ர்வை தரவல்லது”.
மலை ஏற்பவர்கள், தடகள வீரர்கள் மற்றும் பலரைக் கொண்டு சோதனை செய்துள்ளனர். முக்கியமாக நீச்சல் வீரர்கள், தற்காப்புக் கலைஞர்களுக்கு இது மிகவும் ஏற்றதாய் அமையும் என்கின்றனர்.
இருப்பினும் கூர்மையான கத்திகள், ஊசிகள், காட்டு முட்கள் இதன் விதிவிலக்குகள். நம் நாட்டிற்கு வரும்போது தெரியும் மீதமானவை.
1 comment
It’s like a abstract..You try different..increase Your skill and invoation..all the best shan..