சமீபத்திய யூடியூப் சேனல் பேட்டி ஒன்றில் பாரத்திபனிடம் சிம்புவை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த பார்த்திபன் சிம்பு ஒரு சுயம்பு என்றும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞன் அவர் என்றும் கூறினார்.மேலும் அவர் விரைவில் அதிரடி நட்சத்திரமாக வலம் வருவார் எனவும் நபிக்கையாக சொன்னார்.
இந்த காணொளி சிம்பு பார்வைக்கு போக அதை கண்டு பூரித்த சிம்பு உடனே ஒரு பூங்கொத்துடன் சாக்லேட் பாக்ஸ் பரிசு ஒன்றை தனது உதவியாளருக்கு மூலமாக கொடுத்து அனுப்பினார். பின்னர் தொலைபேசியில் பேசிய இருவரும் நிறைய நினைவுகளை பற்றி பேசிக் கொண்டனர்.
விக்னேஷ் சிவன் நானும் ரவுடி தான் படத்திற்கு சிம்புவிடம் பேசிய போது வில்லன் கதாபாத்திற்கு பார்த்திபன் தான் பொருத்தமாக இருக்கும் என நான் தான் சொன்னேன் என சிம்பு சொல்ல, நானும் உங்களை வைத்து படம் இயக்க எண்ணினேன் என பார்த்திபன் ஒரு போடு போட்டார்.
அதாவது சிம்புவின் கெட்டவன் படத்திற்கு முன்பாகவே பார்த்திபன் கெட்ட்டவன் என ஒரு படம் என எண்ணியதாக சொன்னார்.
நாம் இப்போதும் படம் எடுக்கலாம் என சிம்பு சொல்ல அதற்கு பார்த்திபனும் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். விரைவில் இருவரும் இணைத்து ஒரு திரைவிருந்தை நமக்கு அளிக்க இருக்கிறார்கள்.