Image default
Games

PUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap

90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது. அதுவும் கொரோனா காலத்தில் அதிகம் விளையாடப்பட்ட கேம் ஆக பப்ஜி பரிணமித்துள்ளது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Livik ஆடுகளம், சில அதிரடி ஆயுதங்கள், மான்ஸ்டர் டிரக் உள்ளிட்ட மிராமர் மாய அரண்மனைகள் என தெறிக்க விட இருக்கிறது இந்த புதிய வெளியீடு(PUBG Mobile with the 0.19.0 update). இந்த அப்டேட்டின் சிறப்பசம் என்றால் அது நிச்சயமாக லிவிக் ரகசிய மேப் தான்.

PUBG மொபைல் 0.19.0 புதுப்பிப்பு ஜூலை 7, காலை 5.30 மணி நேரத்திலிருந்து உங்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.வழக்கம் போல அப்டேட் உடனே பிளே ஸ்டோரில் வாறது என்பது உண்மைதான்.ஆனால் அதுவரை காத்திராமல் புதுப்பிப்பு கொண்டுவரும் அனைத்து அம்சங்களை பற்றி பார்ப்போம்.

PUBG-Mobile-update

Livik – The Secret Map:

எராஞ்ஜல்(Erangel) மற்றும் மிராமர்(Miramar) அப்டேட் உடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லிவிக் மேப் மிகச்சிறிய கிளாசிக் மேப்பாக இணைகிறது (2×2 KM). எரிமலை தேசத்தை மையப்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு பருவ நிலைகளை ஒரே இடத்தில் இது கொண்டிருக்கும்.

ஒரு பக்கம் எரிமலை சம்பல், பூத்து குலுங்கும் லில்லி மலர் வனம், கொட்டும் அருவிகள், விகண்டி போன்ற பனிப்பிரதேசம் என எல்லாமே இந்த சிறிய வட்டத்திற்குள்..ஆயுதங்களை பொறுத்த வரை அரினாவில் மட்டுமே கிடைக்கும் P90 SMG துப்பாக்கியும் MK12 burst-fire sniper rifle என்ற புதிய ரக துப்பாக்கியையும் களமிறக்குகிறார்கள்.

EcLRd_DWoAYdZ5_

துவக்க ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை 50 ஆகவே இருக்கும். சிறிய பகுதியில் அதிக நெருக்கத்தால் வீரர்கள் அதீத கவனத்துடன் போரிட வேண்டிருக்கும் அதுவும் விரைவான ஆயுதங்கள்,மறந்திருக்கும் மாஸ்டர் வாகனத்துடன். தீவிரமாக சண்டையிட இருப்பதால் போட்டி நேரமும் வெறும் 15 நிமிடங்கள் தான்.

மேலும் சீசன் 14 ராயல் பாஸ் தொடர்பான சிலைகள் எராஞ்ஜல்(Erangel) மற்றும் மிராமர்(Miramar) கிடைக்கும். அவற்றிடமிருந்து சப்ளை பெறலாம். சீசன் 14 ஆரம்பிக்க இன்னும் சில நாட்கள் உள்ளன. அதுவரை Unranking முறையில் விளைடாடி அடுத்த சீசனுக்கான ரங்கிங்கை இப்போதே அதிகரித்து கொள்ள முடியும். அப்டேட் செய்யவில்லை எனினும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.

PUBG-Mobile-exclusive-Livik-Map

அரியானா(Arena) வில் சில புதிய சண்டை களமும் வரவிற்கிறது. இதில் எதிரியை வீழ்த்துவதன் மூலம் நம் ஆயுதம் பலமடைந்து கொண்டே போகும். இறுதியில் Pan வைத்து இறுதி யுத்தம் நிறைவேறும். Pay Load, Rage Gear போன்றவை வார இறுதியில் மட்டுமே விளையாட கிடைக்கும். Blue Hole முற்றிலுமாக நீக்கப்படுகிறது.

miramar anciet

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எராஞ்ஜல் – 2 (Erangel 2) மற்றும் மிராமர்(Miramar Ancient Pyramid) பிரமிடு வடிவமைப்பு முற்று பெற்ற நிலையில் விரைவில் இந்த சீசனிலே எதிர்பார்க்கலாம் என அதிகாரப்புர்வமாக தகவல் வெளியிடபட்டிருக்கிறது. மேலும் அப்டேட் களுக்கு தொடர்ந்து தளத்தை ஆதரியுங்கள். தகவல் பயனுள்ளதாக இருந்தால் ஷேர் செய்யுங்கள்.

Related posts

PUBG அப்டேட் : விகேண்டி மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்

Seyon

PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்

Seyon

PUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்

Seyon

Leave a Comment