Image default
Games

PUBG அப்டேட் : சன்ஹோக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்

90’s கிட்ஸோ அல்லது 2K கிட்ஸோ தற்போது எல்லோரும் நேரம் காலம் பார்க்காமல் விளையாடுவது PUBG தான். சமீப காலமாக பப்ஜி வெறியர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அப்டேட் தாறுமாறாக வெளிவந்திருக்கிறது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆடுகளம், அதிரடி ஆயுதங்கள், ஸ்கூட்டர் உள்ளிட்ட கலக்கும் வாகனங்கள் என தெறிக்க விட இருக்கிறது இந்த புதிய வெளியீடு(PUBG Mobile with the 0.8.0 update). இந்த அப்டேட்டின் சிறப்பசம் என்றால் அது நிச்சயமாக சன்ஹோக் தான்.

சன்ஹோக் XBox, PC பதிப்பில் ஏற்கனவே வெளிவந்து இருந்தது. ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பிலும் பயன்படுத்தும் வகையில் இருந்து வந்தாலும் தற்போதே அதிகாரபூர்வமாக மொபைல் பதிப்புக்கு இப்போது வருகிறது.

சான்ஹோக் மேப்பில் சிக்கன் டின்னர் வெல்வதற்கான டிப்ஸ் பார்ப்பதற்கு முன்னால் புதிய அப்டேட்டில் உள்ள மற்ற சிறப்பம்சங்களை காண்போம்.

Flare gun (call in airdrops if used within the playzone).
QBZ: an automatic rifle.
Muscle car: 4 seater that has both convertible and hardtop.
Bulletproof UAZ wit 4 seats.
Quantities can now be specified in settings.
Improved cheating plug-in recognition
Added report buttons to more pages etc.

Sanhok Map:

எராஞ்ஜல்(Erangel) மற்றும் மிராமர்(Miramar) உடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன்ஹோக் மூன்றாவது கிளாசிக் மேப்பாக இணைகிறது. தெற்காசிய வெப்ப மண்டல மழைக்காடுகளை மையப்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றவற்றை விட அளவில் மிக சிறியது(4×4 KM).

DmYAhmlUcAIYSty.jpg

துவக்க ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை 100 ஆகவே இருக்கும். சிறிய பகுதியில் அதிக நெருக்கத்தால் வீரர்கள் அதீத கவனத்துடன் போரிட வேண்டிருக்கும் அதுவும் விரைவான ஆயுதங்கள்,நவீன வாகனங்கள் உடன். தீவிரமாக சண்டையிட இருப்பதால் போட்டி நேரமும் கணிசமாக குறைந்துவிடும்.

Bulletproof Vehicles:

சில பெரிய வாகனங்களின் வருகையை பப்ஜி சந்திக்க இருக்கிறது. Erangal லில் உள்ள SUV ஜீப் பெரிய வடிவில் துப்பாக்கிகள் துளைக்க முடியாதவாறு(UAZ) வருகின்றன. இது வண்டி பாதுகாப்பையும் வீரரின் செயல்திறனையும் அதிகரிக்கும். playzone க்கு வெளியே மட்டுமே இந்த வாகனம் கிடைக்கும்.

சன்ஹோக் இரண்டு கிளாசிக் வகையில் உள்ள கார்களை பொதுவாக கொண்டிருக்கும். எனவே அதிகளவு இரு சக்கரமும் அடுத்து நான்கு,ஆறு சக்கர வண்டிகளும்(UAZ and VAN) விரைந்து கிடைக்கும்.

அதேபோல் ஹாலிவுட் ஸ்டைல் Muscle கார்களும் தரையிறங்கிறது. ஆட்டோ, ஸ்கூட்டர் போன்ற வண்டிகளும் சன்ஹோக்கில் வரவிருக்கிறது. முக்கியமாக மூன்று பேர் அமரும் பைக் இந்த முறை தவிர்க்க பட்டுள்ளது.

Weapons

இடம் சிறியது என்பதால் ஆயுதங்களை தேடி அலைய வேண்டிய அவசியம் இல்லை. சிறிய கொட்டைகையிலும் கூட முதல்நிலை துப்பாக்கிகள் கிடைக்கும். புதிதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள QBZ துப்பாக்கி AKM , M416 போல தாக்குதல் வகை Gun தான். விளையாட்டின் வழக்கமான 5.5 mm குண்டுகளே இதற்கும் தேவைப்படுகிறது. சன்ஹோக்கில் Scar-L துப்பாக்கிக்கு பதிலாக மாற்றப்படுகிறது.

playzone க்கு உள்ளே மட்டுமே கிடைக்கும் Flare கன்ஸ் பொதுவாக ஆபத்து காலத்தில் சிவப்பு வண்ண புகை எழுப்பும் எச்சரிக்கை அல்லது தேவைக்காக பயன்படுத்தபடும். அதே பயன்பட்டோடு SUV வாகனங்களை அழைக்கவும் ஏர் ட்ராப்ஸ் பற்றி தெரிவிக்கவும் உதவும்.

Blue zone, Red Zone and Safe Zone

நீல வண்ண மண்டலத்தை பொறுத்த வரை ஆரம்பத்தில் மிக மெதுவாக நகருகிறது. வட்டம் எங்கிருந்து என குதிக்கும் போதே தெரிந்துவிடும். ஆனாலும் சிறிய மேப் என்பதால் வட்டம் விரைவாக சுருங்குகிறது.

சிவப்பு மண்டலம் முன்னர் போல தொந்தரவு தருவதில்லை. அது பாதுகாப்பு மண்டலத்துக்கு வெளியே நிகழ்கிறது. எனவே தேவையில்லா ஆபத்தை எளிதில் தவிர்த்து பயணிக்கலாம்.

அடுத்த ஒன்றை மாற்றமாக கருத முடியாது. கேம்முக்குள் நுழையும் முன்னர் வரும் காத்திருப்பு பகுதியில் இருவரை ஒருவர் முகத்தில் குத்தி கொள்ள தான் முடியும் அல்லவா. தற்போது மேலும் கேலித்தனமாக ஒருவர் மீது ஒருவர் ஆப்பிள்களை வீசி விளையாடலாம்.

அதேபோல் செட்டிங்ஸ்ல் எவ்வளவு அம்மோக்களை எடுக்க வேண்டும் என்றும் அளவை நிர்ணயித்துக் கொள்ளலாம். 8X நோக்கம்(Scope) சான்ஹோக் வரைபடத்தில் சாதாரணமாக கிடைக்காது. ட்ராப்ஸ் விழுந்த பின் கிடைக்கும் M24 rifle இனி கிடையாது.

Next PUBG : புதிய சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்

Related posts

PUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்

Seyon

PUBG அப்டேட் : லிவிக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் #LivikMap

Seyon

PUBG அப்டேட் : விகேண்டி மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள்

Seyon

Leave a Comment