Games

PUBG சீசன் 4: வெளியீட்டு தேதி & அனைத்து புதிய அம்சங்கள்

மற்ற விளையாட்டுகளை போல் அல்லாமல் மிக யதார்த்த அனுபவத்தோடு தீவிரத்தை அள்ளித்தந்து எல்லோரையும் விருப்ப அடிமையாக்கி வருகிறது பப்ஜி. ஒருபக்கம் வீரர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்க மறுபக்கம் இன்னும் புதிய சுவாரசிய அமைப்புகளோடு பங்கேற்பாளர்களை தன்னிடம் நிலைக்க வைத்திருக்கிறது இந்த விளையாட்டு.PUBG-PC-Update

சில மாதங்களுக்கு முன் வெளியான சான்ஹோக் மேப் உள்ளிட்ட பல புதிய அப்டேட் எல்லோரையும் கவரும் விதமாக இருந்தது. தற்போது சீசன் 3 முடிவடைய போகும் நிலையில் அடுத்த புதிய சீசனில் என்னவெல்லாம் எதிர்பாக்கலாம் என்பதை பற்றியே பதிவே இது.

New Features

அதிகாரப்பூர்வமாக நவம்பர் 20 தேதி புதிய சீசனுக்கான அப்டேட் வெளிவருகிறது. சமீபத்தில் வந்த ஹல்லோவான் அப்டேட், நைட் மோட்(Night Mode) மற்றும் ஆடை வடிவமைப்பில் சில மாற்றங்களை மட்டுமே தந்தது.

புதிய அப்டேட்டில் M762 automatic rifle, சன்ஹோக் மேப்பில் ஸ்கூட்டர் வாகனம் மற்றும் நிலையில்லாமல் மாறிக்கொண்டே இருக்கும் சூழலையும்(Dynamic Weather in Sanhok) முக்கிய மாற்றமாக அறிமுகப்படுத்துகின்றனர். அடிக்கடி மழை வந்து போகும்.

New-characters-skins-and-outfits-in-pubg-mobile-season-4

அது இல்லாமல் புதிய முக உருவ அமைப்புகளும் வரவிருக்கிறது. புதிய ஆடைகள், சிகை வகைகள் உள்ளிட Suicide Squad கதாபாத்திரங்களான Harley Quinn மற்றும் Joker ஆகியோரின் உருவங்கள் மாட்டிக் கொள்ளலாம்.

மேலும் ஆர்கேட் மோடில் Erangel (Hardcode) வெளிவருகிறது. சினைப்பர்க்கு மாற்றாக வரவிருக்கும் இந்த சிறிய மேப் விறுவிறுப்பாக இருக்க போகிறது. ஏனெனில் இந்த எராஞ்சல் மேப்பில் எதிர்கள் நடந்து வரும் காலடி தடத்தை கட்டாது. அதுவில்லாமல் எந்த திசையில் இருந்து துப்பாக்கி சத்தம் வருகிறது என்பதையும் அறிய இயலாது.

PUBG-mobile-hardcore-mode-erangle.jpg

Season 4

முதலில் பருவம் 3 முடிந்து 4 தொடங்கையில் உங்கள் லீடர் வாரியங்கள், ஹால்லோவான் மற்றும் ராயல் பாஸ் ஆகியவை மீண்டும் ஆரம்ப நிலைக்கே வந்துவிடும். அதற்குள் எவ்வளவு முடியுமோ அந்தளவு மிஷன்களை முடிக்க முயற்சி செய்யுங்கள்.

உங்கள் நிலை ஏஸ், டைமண்ட், பிளாட்டினம், கோல்ட் என எதுவாக இருந்தாலும் அதில் இரு நிலை கீழே இறங்கி வர நேரலாம் தவிர மொத்தமாக பாதிப்பு இருக்க வாய்ப்பில்லை. அதாவது Ace வீரர்கள் platinum த்திற்கு கீழே இறங்கி வருவார்கள்.

Pubg rewards

சீசன் முடிவில் ஒவ்வொரு வீரரின் நிலைக்கு ஏற்ப சன்மானம் கிடைக்கும், உயர்மட்ட தரவரிசை வீரர்கள் சிறப்பு ஆடைகள், அரிதான கிரேட் மற்றும் ஆயுத மேனிகள் கிடைக்கும். குறைவாக இருப்பவர்களுக்கு BP,நாணயம் கிடைக்கும்.

எல்லோருக்கும் ஒரே நேரத்தில் ரேங்க் குறைவதால் சில ஆரம்ப கட்ட வீரர்கள் புரோ நிலை வீரர்களை எதிர்கொள்ள நேரிடும். போட்டி கடினமாக இருக்கும் அல்லது ஆட்டத்தின் சுவாரசியத்தை நீங்கள் ரசிக்கலாம்.

Snow map

குளிர்கால வரைபடம்(Dihor Otok) ஒன்று பப்ஜியில் இணைய விருப்பதாக சில மாதங்களுக்கு முன்னமே கிசுகிசுக்கப்பட்டது. குளிர் பிரதேசங்களை போல வெண்பனி அடர்ந்த பகுதியாகவும் மற்றும் சிறுபுல் படர்ந்த சமவெளி பிரதேசமாகவும் இது காட்சியளிக்கும்.

A-new-snow-map-in-pubg-season-4

இந்த வரைபடத்திற்கு அதிகாரப்பூர்வ தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை.
ஒரு புதிய பருவத்திற்கான ஒரு புதிய வரைபடம் கண்டிப்பாக வீரர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் மற்றும் சீசன் 4 க்கு குறிப்பிடத்தக்க துவக்கத்தை வழங்கும்.

ஆதலால் சன்ஹோக் மேப் எப்படி சீசன் 3 க்கு இடையே வெளியிடப்பட்டதோ அதே போல நான்காவது சீசனுக்கு இடையே புதிய குளிர் வரைபடம் வெளிவர விருக்கிறது போலும். அடுத்த பதிவில் ஸ்னோ மேப்பின் சிறப்பம்சங்களை பற்றி விரிவாக பார்ப்போம்

Leave a Comment