1947 ல் ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது. இது அனைவரும் அறிந்ததே, நாம் சுதந்திரம் பெற்றது ஆங்கிலேயர்களிடம் இருந்து மட்டுமே. அன்று அவன் நம் நாட்டில் நம்மை அடிமை செய்தான், இன்று நம்மை நம் நாட்டாரே அடிமை செய்யும் சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்கிறோம்.
மக்களாட்சி என்று புத்தகங்களில் பெருமையாய் எழுதபட்ட இந்தியாவில் தன் தனிப்பட்ட கருத்தினை கூற நம்மிடம் ஒரு தயக்கம் இருப்பது ஏன்? மீறி சொற்போரிட்டால் குண்டர் சட்டம் பாயும் நிலை தான் நம்மிடத்தில் உண்டு.
திருடர்கள் கையில் சாவியோடு பெட்டியையும் தந்திருக்கோம். நம்பிக்கை என்ற மடித்த அச்சாணியில் நம் வாழ்வான்து வலம்வர நாம் செய்யும் தவறிது. நல்லவனை நட்டாலும் சூழ்நிலைக்கு மாறும் மானிட உலகம்.
நேர்மை என்ற சொல்லிற்கு பொருளற்று போனது. தனிமனிதன் தடுமாறி போகிறான்.மாறும் மனக்குரங்கை கட்டுபடுத்த தெரிவதில்லை. இதுவே முழு காரணம் நம் நாட்டில் தீமை தலைவிரித்து ஆட.
தனிமனித சுதந்திரம் ஒருபுறம் வழக்காட பெண் சுதந்திரம் மறுபுறம் மடைதிறக்காமல் இருக்கிறது. சமபங்கு என்பது சட்டத்தில் மட்டுமே இருக்கிறது. யதார்த்த வாழ்வில் பெண்ணடிமைத்தனம் இன்னும் மன்னர் காலத்தை விட்டு அகலவே இல்லை.
வேலை இல்லை என்று அடுத்த நாடுகளில் அடிமையாய் வாழும் நம் மக்களுக்கு வேலை என்ற சுதந்திரம் நம் நாட்டில் என்று கிடைக்கும்?
சுதந்திரம் என்ற வார்த்தைக்கு ஒற்றை பொருளை கொண்டு கொண்டாடும் மக்களே சிந்தித்து பாருங்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
12 comments
சாட்டையடி வரிகள்…அருவி….👏👏👏🔥🔥
நன்றி
Super
Thank you sir
Nice
Thnk u
👏👏👌🏻👌🏻
Thnk u sis
ஆங்கிலேயர்கள்
இந்திய அரசியல்வாதிகளுக்கு
சுதந்திரம் கொடுத்து
இந்திய நாட்டு மக்களை
அரசியல்வாதிகளிடம்
அடிமையாக்கி விட்டார்கள்
Ssss it’s true
Ss it’s true
அருமை வரிகள்…👏👏👏👌👌