அமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்

அமெரிக்க வேலையை விட்டுவிட்டு மக்கும் கேரிபேக் தயாரிக்கும் திருப்பூர் இளைஞர்

நாம் தினசரி வாழ்வில் சர்வமாக பயன்படுத்தும் கேரிபேக் எத்தனை பயங்கரமான விளைவுகளை உண்டாக்க வல்லது என்பது பற்றியான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் சொற்பமாகவே உள்ளது. உலகில் தயாரிக்கப்படும் 50% நெகிழி பைகள் பெருமளவில் நம்மால் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபடுகின்றன. ஆனால் அவை மண்ணில் மக்கி அழியவோ 500-1000 வருடங்கள் ஆகின்றன.

இந்தியாவில் மட்டுமே 500 கோடி, உலகளவில் 500000 கோடி எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் பைகள் கடந்த வருடம் உபயோகபடுத்த பட்டிருக்கின்றன. அதாவது ஒரு நொடி பொழுதில் ஒன்றரை லட்சம் பைகள்.

புள்ளிவிவரங்கள் ஒருபுறம் இருப்பினும் அன்றாட வாழ்வை சமாளிக்கும் நம்மால் சுற்றுசூழலை பற்றி சிந்தித்து சட்டென கேரிபேக் உபயோகத்தை குறைக்க முடியாது, ஆனால் மக்களுக்கு ஒரு மாற்று வழியை தந்தால்,

அதைத்தான் ரஜினோ நிறுவனத்துடன் இணைந்து சிபி செல்வன் என்ற இளைஞர் செய்து வருகிறார். ஊட்டியில் பள்ளி கல்வி சென்னையில் கல்லூரி முடித்து அமெரிக்காவில் பொருளாதார பட்டம் பெற்ற இவருக்கு சொந்த ஊர் திருப்பூர். அமெரிக்காவில் சில வருடங்கள் பணிபுரிந்த இவர் கேரிபேக்குக்கு மாற்றான பையை இயற்கை முறையில் தயாரித்து பரிசோதனைகள் செய்திருக்கிறார்.

இவர் தயாரித்து இருக்கும் கேரி பேக்குகள் மூன்றே மாதங்களில் மக்கிவிடும், நெருப்பினில் உருகாமல் பொசுங்கி சாம்பலாகும் தன்மை கொண்டது, மேலும் சூடான நீரில் கரைந்தும் போய்விடும். மக்காச்சோளம், காய்கறிகள், காகித கழிவுகள் ஆகியவற்றிலிருந்து இந்த இயற்கை பைகள் தயாரிக்கப்படுகின்றன.

2016 ல் இந்தியா வந்த சிபி ஒருவருடம் அப்பாவின் டெக்ஸ்டைல் பணியில் உதவியவாறே இதனை எப்படி தொழிமுறையில் அணுகுவது என்பதை பற்றி ஆராய்ந்தார். தொடங்கி ஆறு மாதங்களே ஆன ரஜினோ நிறுவனம் தற்போது குறிபிடத்தக்க நிலையில் வெற்றி கண்டுள்ளது.

சிபி பேசுகையில் “எங்கள் பைகள் மக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை வழக்கமான பயன்பாட்டிற்குப் பிறகு குப்பை தொட்டிப் பைகளாக பயன்படுத்தலாம்.பிளாஸ்டிக் பைகள் ஒரு முறை பயன்பாட்டிற்கு பிறகு ஏற்படும் தீமைகள் பற்றி பெரும்பாலானோர் உணரவில்லை, துப்புரவு பணி உட்பட பல்வேறு செலவினங்களும் இதனால் உண்டாகிறது.”

இவரது கேரி பேக்குகள் நல்ல முறையில் தயாரிக்கப்பட்டதுடன் தமிழக அரசு நிர்ணயித்த 40 மைக்ரான் அளவிற்கு குறைவாக உள்ளதால் கோயம்புத்தூர் மாநாகராட்சி ‘சிம்ப்ளி சிட்டி’ என்ற திட்டம் வழியாக இதனை அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த துவங்கியுள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவில் பெங்களுருக்கு அடுத்த பயோ பேக் பயன்படுத்தும் இரண்டாவது நகரமாக கோவை மாறியுள்ளது. விரைவில் தமிழகம் முழுதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார்கள்.

References:

Regeno – Official Website

man quit a high-paying job in the US to make bio bags from maize, vegetables, paper

நீரில் கரையும் கேரிபேக்குகள்!

கடல் சிறகுகளை காப்போம்

Add comment