இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்

இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்

ரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது.

தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

அறிவியல் பரிணமித்த இந்த பாவை மேனி பதிவிறக்கம் செய்யப்பட்ட ரோபோக்கள் உங்கள் செயலுக்கேற்ப பதிலலிக்க வல்லது. பெண்ணுடல் போன்று தயாரிக்கப்பட்ட கையைப் பற்றும் போதும் உதட்டை தீண்டும் தருவாயிலும் அதற்கேற்ப ஆசைமொழிகளை வெளிபடுத்தும் வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அப்படியே சூழலுக்கேற்ப பாடல் ஒன்றையும் ஒலியிடும்.

440AEA8A00000578-4865980-image-a-1_1504886411375.jpg

வெறுமனே ஒற்றுக் கொள்ளாமல் அதனை உணர்ச்சிபடுத்திய பின்னரே கட்டிலுக்கு அழைக்க இயலும், பிடிக்கவில்லை என்றால் மறுக்கவும் நிரல்மொழி இயற்றப்பட்டுள்ளது.

பெண்களின் உணர்ச்சியை தூண்டும் பகுதிகளில் சென்சார்கள் பொதிய வைத்து தீண்டலுக்கு ஏற்ப பாவனைகளை வெளிபடுத்தும். உடலினுள் வெப்பத்தை உண்டாக்க வெப்ப கருவிகள் உள்ளன.

இதைத்தான் மதன் கார்க்கி எந்திரன் படத்தில் “சென்சார் எல்லாம் தேயத் தேய நாளும் உன்னைப் படித்தேன் உன்னாலே தானே என் விதிகளை மறந்தேன்” என தீர்க்கதரிசனம் செய்து பாடல்வரிகளாய் எழுதியுள்ளார் போல.

AI என்பதால் ஒவ்வொரு முறை கலவியின் போதும் அவை அல்காரிதம் மூலம் விரைவாக பயின்று கொள்ளும். வல்லுனர்கள் பலர் சிறப்புத் தன்மை உடைய இந்த ரோபோ அடுத்த தலைமுறையில் சாதாரண வீடுகளில் கூடல் இன்பம் தர குடியேறலாம் என கணிக்கின்றனர்.

யார் இந்த சமந்தா : தி செக்ஸ் ரோபோட்?

சமந்தா நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைக்கபட்ட உயர் மெய்தன்மையுடைய மனித ரோபோ. செக்ஸ் ரோபோ சந்தையில் புரட்சியாக வந்துள்ள சமந்தா மேற்குறிப்பிட்ட மோகப் பண்புகளை உடையது.

1475.jpg

லண்டனை சேர்ந்த இதன் தயாரிப்பாளர் Sergi Santos கூறுகையில் பல ஆண்கள் ஏற்கனவே இதன் அழகை கண்டு உணர்ச்சிவச படுவதாகவும், அதன் தொடுவுணர்வு நிஜத்திற்கு நெருக்கத்தில் இருக்கிறதென்கிறார்.

ஒரு ரோபோ எழுதும் நாவல்

பிபிசி நடத்திய “Can Robots Love Us?” தொடரில் சமந்தா ரோபோ இடம்பெற்று இருக்கிறது.

என்ன விலை அழகே?

தனிப்பட்ட வகையில் வடிவமைக்க பட்ட ஒரு செக்ஸ் ரோபோ பல லட்சம் மதிப்பிருக்கும். யுரோ கணக்கில் குறைந்தது 6 முதல் 8 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பில் இது வேறுவகையாக மாறலாம்.

ஆனால் உலகம் முழுவதும் வெவ்வேறு வகையிலான வடிவில் இவை தயாரிக்கப்படும் நிலையில் அதன் சந்தை அதிகரித்ததும் குறைவான விலையிலும் உருவாக்கப்படும். தொழிற்நுட்பம் பரவலாக பயன்படுத்த துவங்கிய பின்னர் விலை குறையலாம்.

1502007504763.jpg

வல்லுனர்கள் கருத்து

மனிதன் செயற்கை அறிவியலின் இன்பத்திற்கு அடிமையாகி விட கூடும் என பல்வேறு துறையை சார்ந்த வல்லுனர்கள் கருதுகிறார்கள். ஏற்கனவே ஆண் பெண் உறவுகளுக்கு இடையேயான புரிதல் மேன்மை அடையாமல் உள்ள நிலையில்,

சமூக வலைதளங்களிலும் இணையத்தில மூழ்கிய போன மனிதம் செயற்கை உறவில் நாட்டம் கொண்டு அது உணர்வுப் பேரழிவை உண்டாக்கி விட கூடாது.

என்னதான் மெழுகு தேகம் ஆகினும் மற்றொரு பாலினத்தொடு உறவு கொள்ளுதல் போன்ற உணர்வை இயந்திரங்களால் கொடுக்க இயலாது என்பது பலரது வாதம்.

இவ்வகையான இயந்திர புணர்வால் உளவியல் ரீதியான வழியில் பாதிப்புகள் உண்டாக வாய்ப்புள்ளது, மேலும் மறு பாலின ஈர்ப்பு மற்றும் திருமண ஏமாற்றம் பெருமளவில் ஏற்படலாம் என்கின்றனர்.

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?

எதிர்காலம் என்னவாகும்?

ரோபோக்களின் வருகையால் பெண்களின் மீதான பாலியல் தொந்தரவுகள் குறையும் என நம்பப்படும் வேலையில், ரோபோக்களை கூட கட்டாய வன்புணர்வு செய்யும் வகையில் செய்யப்பட்டு பெண் அடிமைத்தன போக்கு மேலோங்கவும் வாய்ப்புள்ளது.

எதிர்காலத்தில் ரோபோக்களின் பாலியல் விடுதிகள் உண்டாகும் என்பது அசரீரி. அவை நகர தேவைக்கு முக்கியமானதும் கூட என பலர் எண்ணுகிறார்கள். சமீபத்தில் ஒரு பாலியல் தொழிலாளி இதன் வளர்ச்சியால் பாலியல் தொழில் பெருமளவில் பாதிப்படையும் என ஆருடம் கூறுகிறார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமந்தா ரோபோவை உருவாக்கியவர் ரோபோ மூலம் 3டி பிரிண்ட் குழந்தை பெறுவைதை பற்றி பேட்டி கொடுத்துள்ளார்.

1 comment

  • இப்பொது அனைத்திலும் தொழில்நுட்பம் புகுந்து விட்டது. இது நாட்டுக்கு நல்லதா கெட்டதா தெரியவில்லை, ஆனால் நல்ல முயற்சி.