Image default
Tech

விமானம் விபத்தாகலாம், ஆனால் உயிர்சேதம் இருக்காது

சமீப காலமாக விமான விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் அரசையும் மக்களையும் கலங்க வைக்கிறது என்பதும் உண்மை.

 நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது சகஜமாகி வருகிறது.

 இத்தகைய விபத்துகளிலிருந்து தப்பி பிழைக்க உக்ரைன் நாட்டு பொறியாளர் விளாடிமிர் டாடாரென்கோ புதியதொரு தொழிற்நுட்பத்தை உருவாக்கியுள்ளார். இவரின் இந்த கண்டுபிடிப்பு நிச்சயம் உயிரிழப்புகளை கட்டுபடுத்தும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

 மேலே உள்ள வீடியோ விமானம் அவசர சூழ்நிலைகளில் போது எப்படி வேலை செய்யும் என்பதை சரியாக நிரூபிக்கிறது.

 கண்டுபிடிப்பாளர் விளாடிமிர் டாடாரென்கோ மூன்று ஆண்டுகளாக இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இவர் வடிவமைத்துள்ள திட்டம் கிராபிக்ஸ் மூலம் நேற்று(18 Jan) டெமோ செய்து காண்பிக்கப்பட்டது. இதன்படி எதிர்பாராத விமானம் விபத்தில் சிக்கும் போது அதில் தப்பிக்கும் வகையில் பயணிகள் அமரும் கேபின் மட்டும் தனியாக பொருத்தும் முறையை வடிவமைத்துள்ளார்.

detachable-cabin-tatarenko-vladimir-nikolaevich

 கேபினுடன் பாராசூட்கள் இணைக்கப்பட்டிருப்பதால் விபத்து காலங்களில் விமான பகுதியிலிருந்து தனியே கழட்டி விடப்பட்டு பின்னர் பயணிகளோடு பாதுகாப்பாக நிலத்தில் தரையிரங்கும்.ஒரு வேளை கேபின் கடலில் விழுந்தாலும், அது மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த வழிமுறை பயணிகளின் பெட்டகங்களுக்கும் சேர்த்தே திட்டமிடப்பட்டுள்ளது.அதனால் யாரும் தங்களுடைய உடைமையை இழக்கும் நிலையும் வராது.

plane-cabin-diagra_2643705a

சமூக தளங்களின் தற்போது வைரலாக பரவும் இந்த கண்டுபிடிப்பை பலர் பாராட்டினாலும் எதிர்மறையான விமர்சனகளும் நம்மை சிந்திக்க வைக்கின்றன. முதலில் இது நடைமுறையில் சாத்தியமா, அப்படி சாத்தியமானால் விமானத்தில் மீத பகுதி மற்றும் விமானிகளின் நிலை என்ன ஆகும்?

 அது மட்டுமின்றி நிலத்திலோ அல்லது  கடலிலோ விழாமல் மலைகள் மீதோ அல்லது கட்டிடங்கள் மீது இடித்துவிட்டால் கேபினின் நிலை என்னவாகும்? விமானம் தயாரிக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. எனினும் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் பாதுகாப்பான விமான பயணத்திற்கு உத்தரவாதம் உண்டு என வல்லுனர்கள் சான்றளித்துள்ளனர்.

“Of the millions of flights a year, less than 500 people die worldwide a year from plane crashes. seems not terribly cost effective” – Isadora Kali Anne Seney

 எப்படியோ சமீபத்திய சர்வே வெளியிட்டுள்ள அறிக்கை, 95% மக்கள் பாதுக்காப்பான பயணத்திற்காக அதிக விலையுள்ள பயண சீட்டுகளை வாங்க தயாராக உள்ளனராம்.

 

 

Related posts

அனைத்து இந்தியர்களுக்குமான இணையத்தை கொண்டு வரும் கூகிள்

Seyon

ஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்

Seyon

நிழல் விளைவு ஆற்றல் ஜெனரேட்டர் – அறிவியலின் அடுத்த பரிணாமம்

Paradox

Leave a Comment