PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்

PUBG : சன்ஹோக் மேப் வெற்றி தந்திரங்கள்

இறுதியாக பப்ஜி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த சன்ஹோக் மேப் அப்டேட் வெளிவந்து விட்டது. இப்போதும் எல்லோரும் அப்டேட் செய்து புதிய வரைபடத்தை அலச ஆரம்பித்து விடுவோம். முதல் சில ஆட்டங்கள் கொஞ்சம் மோசமாகத்தான் போகும்.எந்த இடத்தில் அதிகளவு கொள்ளை அடிக்கலாம் என்பது விளங்க சற்று தாமதமாகும்.

இந்த பதிவில் சன்ஹோக் மேப்பை புரிந்து சாதகமாக பயன்படுத்திக் கொண்டு சிக்கன் டின்னர் சாப்பிட்ட தந்திரங்களை காணலாம். புதிய அப்டேட், கார், துப்பாக்கிகள் பற்றிய விரிவான அறிமுகத்தை அறிந்து விட்டு வந்துவிடுங்கள். இங்கே கிளிக்க
PUBG அப்டேட் : சன்ஹோக் மேப் மற்றும் புதிய சிறப்பம்சங்கள் முழுவிவரம்

எந்த இடத்திற்கு போகலாம்

பார்ப்பதற்கு பெரிதாக தெரிந்தாலும் சன்ஹோக் பகுதி மற்றவற்றை விட அளவில் பாதி சிறியது. எனவே விமானத்தில் இருந்து குதிக்கும் போதே தயராக எங்கே போகலாம் என திட்டமிட்டு கொள்ளலாம். விமானம் செல்லும் திசையை கருத்தில் கொண்டாலும் பொதுவாக ஒரு மையத்திலேயே அது பயணிக்கும், எனவே தொலைதூரமாக குதித்து தனியாக கொள்ளை அடியுங்கள்.

வட்டத்திற்குள் ஓடுங்கள்

பொதுவாக எராஞ்ஜல் மற்றும் மிரான்மர் பகுதியில் குதிக்கும் போது நீல மண்டல வட்டம் வருவதற்கும் அடுத்தடுத்த பாதுகாப்பு வட்டத்திற்கும் 1,2 நிமிடங்கள் அவகாசம் இருக்கும். ஆனால் சன்ஹூக்கில் ஒவ்வொரு வட்டத்திற்கும் உள்ள இடைவெளி 20-30 நொடிகள் மட்டுமே. ஆதலால் இறங்கிய உடனே கொள்ளை அடித்து ஓட தொடங்கி விடவும்.

சிறிய வீடுகள்

சிறியதாக இருக்கும் கொட்டகை போன்ற இடங்களே இங்கு முக்கியம். மிக குறைந்த நேரம் இருப்பதால் பெரிய வீடுகளில் சென்று அலைவதை விட விரைவாக சிறிய வீடுகளுக்கு செல்லுங்கள், ஒருவேளை தொலைவாக சென்றிருந்தால் பரவாயில்லை. அதிகளவிலான லூட் என்பதை விட நெரிசலான பகுதியில் பிழைத்திருக்க சிறிய வீடுகளே முக்தி. முந்தைய பதிவில் சொன்னது போல சன்ஹோக்கில் துப்பாக்கிகள் எளிதாக கிடைக்கும்.

பாதுகாப்பு வட்டம்

ஆட்டத்தின்முடிவில் நீங்கள் மிக வேகமாக ஓட வேண்டிருக்கும். ஆனால் துவக்கம் அதற்கு தலைகீழாக இருக்கும். நீல வளையம் மிக மெதுவாகவே வரும். எனவே அது உங்கள் அருகில் வந்தபின்னர் ஓடினால கூட பாதுகாப்பு வட்டத்திற்குள் நுழைந்து விடலாம். தேவைபட்டால் வெளியே இருந்துக் கொண்டு எதிரை கண்காணித்து பிட்டு செல்லும் அளவிற்கு வாய்ப்புள்ளது.

சிவப்பு மண்டலம்

வட்டத்திற்குள் சென்ற பின்னரும் கூட ரெட் ஸோனில் அடிப்பட்டு சாகும் நிலை பலருக்கும் வந்திருக்கிறது. இந்த தொல்லை சந்ஹோக்கில் இல்லை. இங்கும் சிவப்பு மண்டலம் வந்தாலும் அது பெரும்பாலும் பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே மட்டுமே வருகிறது. அதனால் வட்டத்திற்குள் சென்று விட்டால் ரெட்டை பற்றி கவலை கொள்ள வேண்டியில்லை.

இது மட்டுமின்றி வாகனங்கள் அதிகமாக இருப்பதை அதில் அடிபடாமல் தப்பித்து செல்லுங்கள். அதேபோல் இங்கு ஆறுகளை கடப்பது முக்கியம். எராஞ்ஜல் போலல்லாது இங்கு ஆறுகள் கடக்கும் அளவிற்கு சிறியது தான். அதனையும் மீறி பாலத்தை தாண்டி தான் செல்வேன் என்றால் அது அவ்வளவு பாதுகாப்பு இல்லை. விமானம் அந்த வழியாக சென்றிருந்தால் அங்கே ஆட்கள் இருக்க வாய்ப்புண்டு. காரில் செல்வது சிறப்பு.

இன்னும் பல தந்திர செயல்களை கண்டறிந்தால் கமெண்டில் பதிவிடவும்.

மேலும் பப்ஜி அப்டேட்களுக்கு பாலோ செய்யவும்.

Add comment