Image default
Villages

சமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்

கர்நாடகா மாநிலத்தின் சிமோகா நகரத்தின் அருகில் உள்ள கிராம் மக்கள் பெரும்பாலும் அனைவருமே சமஸ்கிருத மொழியை பேசுகிறார்கள். இந்தியாவில் இன்னமும் சமஸ்கிருத மொழி வழக்கில் உள்ள அரிய இடங்களில் மத்தூர் கிராமமும் ஒன்று.

சமஸ்கிருதம் உலகின் பழமையான மொழிகளின் ஒன்று. லத்தீன், கிரீக் மொழிகளோடு ஒப்பிடதகுந்த இந்திய மொழி. இந்தியாவின் புராண இதிகாசங்கள், வேதங்கள் எல்லாம் இம்மொழியில் உருவாக்கப்பட்டது தான். ஆனால் நவீன இந்தியாவில் இந்தி போன்ற வழக்கு மொழிகளால் சமஸ்கிருதம் வழக்கற்று போனது. நடைமுறையில் பயன்படுத்தும் பழமையான மொழிகளில் தமிழ் மட்டுமே உயிர்த்துள்ளது.

இந்திய- ஆரிய நாகரீகத்தின் தாக்கமே சமஸ்கிருதத்தின் உருவாக்கம், மேலும் பல இந்திய மொழிகளுக்கு இதுவே அடிப்படை, தென்னிந்திய மொழிகளுக்கு தமிழ் போல.

sanskrit-class

புராதாண மொழிகளில் ஒன்றான சமஸ்கிருதத்தை இவர்கள் தினசரி பேச்சு வழக்கில் இன்றும் உயிர்ப்போடு வைத்திருப்பாதல் இந்த கிராமம் மொழி ஆர்வலர்களால் பெரிதும் கவனம் பெற்றிருக்கிறது. டெல்லியில் உள்ள சமஸ்கிருத மொழி பாதுகாப்பு மையம் தனது ஒரு கிளையை இங்கேயும் தொடங்கியுள்ளது.

தற்போது உலகில் 1% அள்விலேயே சமஸ்கிருதம் பேசப்படுகிறது, அதுவும் பிராமண பூசாரிகள் பயன்படுத்துவதே. ஜெர்மன்,பிரென்சு போல பள்ளி கல்லுரிகளில் கடினப்பட்டு பயலும் இந்த மொழியை இங்குள்ள பாமர மக்களும் சகஜமாக பேசுகிறார்கள், குறைந்த பட்சம் புரிந்து கொள்கிறார்கள்.

இப்போதும் 35000 சங்க்யிதிஸ் பேசுபவர்கள் உள்ளனர், கேரளா பிராமிணர்கள் பேசும் இம்மொழி இது சமஸ்கிருதம், கன்னடம், தமிழ், தெலுங்கு சேர்த்து பேசப்படுகிறது. அருகாமை கிராமமான கொசஹல்லி இதை ஒத்த ஒரு கிராமம் தான், இருப்பினும் அதுவும் மத்தூர் கிராமத்தோடு சேர்ந்தே அறியப்படுகிறது.

ஜிரி, மொஹத் என ஒரு சில மத்திய பிரதேச கிராமங்களிலும் சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் உள்ளது, ஆனாலும் மத்தூர் சுற்றுபுற கிராமம் அளவிற்கு பரவலாக பயன்பாட்டில் புகழடயவில்லை.

இங்கு பழைய குருகுல முறைப்படி இப்போது சொல்லிதரப்பட வில்லை என்றாலும் சில காலங்களுக்கு வேத வகுப்புகள் அப்படியே இருக்கிறது. ஆனால் எல்லா இடங்களிலும் மறைந்த போதிலும் இங்கு மட்டும் சமஸ்கிருதம் பேசுவது ஏன், அதுவும் தற்போது வழக்கு பயன்பாடற்ற ஒரு மொழியை.

 விஜயநகர பேரரசின் காலத்திலேயே(1512) இந்த கிராமங்கள் வேதத்திற்காக மன்னர்களால் பரிசளிக்கப்பட்டவை. அப்போதிலிருந்தே இங்கிருந்த பிராமணர்கள் குருகுல முறைப்படி வேத, வேதாந்தங்களை சொல்லிதருவதை கடைபிடித்து வருகின்றனர். அதற்கான செப்பு ஏடுகள் கூட தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது.

maxresdefault-3.jpg

தற்போது பல்வேறு சாதி, மதத்தினர் இங்கு வந்துவிட்ட போதிலும் அவை தொடரப்படுகிறது. இந்த இரு கிராமங்கள் மற்றும் அருகிலுள்ள குக்கிராமங்களை இணைத்தால் 5000 குடியிருப்புகளை கணக்கிடலாம். பெரும்பாலனவர்கள் சமஸ்கிருதம் அறிந்தவர்கள். காரணம் அவர்கள் வீடுகளில் கூட இந்த மொழி பேசப்படுவதே.

1980 காலம் வரை இவர்கள் கன்னடமும் தமிழும் தான் பேசி வந்தார்கள். இங்கு குடியேறிவர்களில் பலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழ் பேசுபவர்களும் அதிகம். அதன் பின்னர் உள்ளூரில் மத/ சமஸ்கிருத அமைப்பு சார்பாக 10 நாட்கள் முகாம் நடைபெற்றது.

அதன் பின்னரே உயர் சாதி எனக் கருதப்பட்ட பிராமிணர்கள் மட்டுமல்லாது 3500 மக்களை கொண்ட கிராமத்தின் எல்லா இனத்தினரும் சமஸ்கிருதம் பயில துவங்கினர்.

இங்குள்ள குழந்தைகளுக்கு வேத நூல்களை பயிற்றுவிக்கப்படுகின்றன. வேத வாக்கியங்கள் உச்சரிக்க சொல்லித்தரப்படுகின்றன, குழந்தை பாடல்கள், சமஸ்கிருத நடைகள், அம்புலிமாமா கதை கூட சமஸ்கிருத மொழியிலேயே கற்றுதரப்படுகிறது. நாளடையில் சாதரணமாக சமஸ்கிருதம் பேச இவர்கள் தயாராகி விடுகின்றனர்.

ஆரம்ப பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை சமஸ்கிருதம் கட்டாய மொழிப்பாடமாக இங்குள்ளது. அதற்கு மேல் முதன்மை கன்னடம் தமிழுடன் சமஸ்கிருதம் விருப்ப பாடமாக வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் காலை 4 மணிக்கு எழுந்து குளித்து வேதங்கள் படிக்கின்றனர். வேத சுலோகங்கள் கூறி பிராத்திக்கின்றனர். பாக்கும் தென்னையும் இங்கு முக்கிய விவசாயம்.

_79684404_79684403

இங்கு பாடம் சொல்லி தருபவர்களும் சமஸ்கிருதத்தை எளிமையாக கற்கின்றனர். மாணவ/ மாணவிகள் நாங்கள் தமிழ் அல்லது கன்னடம் பேசினாலும் சமஸ்கிருதம் எங்களுக்கு புரிகிறது, அது எங்கள் மொழியோடு கலந்தே உள்ளது என்றனர்.

Maarge swachchataya virajate, grame sujanaha virajante (Cleanliness is as important for a road as good people are for the village).

நவீனமாகிவிட்ட இக்காலத்தில் இதெல்லாம் எதற்கு என யாரேனும் கேட்டாலும் அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை. வேதத்தை சமஸ்கிருத மொழியில் பயில்வதை தங்கள் கலாச்சார நெறியாக கடைப்பிடிக்கிறார்கள். இது கேள்வியை சார்ந்ததல்ல எங்கள் நம்பிக்கையை சார்ந்தது என அவ்வூரின் பெரியவர்கள் கூறினர்.

உண்மையில் இந்த மொழிதான் அவர்கள் கிராமத்திற்கு ஒரு தனி அடையாளத்தை தந்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் முழுமையாக LED விளங்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக ஒரு பிரபல அமைப்பு இதனை மாற்றியுள்ளது. விரைவில் சூரிய ஒளி திட்டமும் கொண்டுவரப்படவுள்ளது. காரணம் இதன் தனித்தன்மை.

தொலைபேசி, தொலைகாட்சி எல்லாம் இந்த கிராமங்களில் மிகக் குறைவு. இவர்கள் வீட்டிலும் சமஸ்கிருதம் பேசி படிப்பதால் அது இவர்கள் வாழ்வோடு சுலபமாக ஒன்றிவிடுகிறது.

தொன்மை மொழியை கொண்டுள்ள போதிலும் இவர்கள் நவீன தொழிற்நுட்பத்திலும் பின்னி எடுக்கிறார்கள். வீட்டிற்கு ஒருவராவது தகவல் தொழிற்நுட்ப துறையில்(IT Professionals) பணி செய்கிறார்கள். கணினி சாப்ட்வேர் துறை மட்டுமல்லாது சமஸ்கிருதம் பயில்விப்பவராக உள் மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களிலும் பணியாற்றுகின்றனர்.

mathur2_jpg_1417309g.jpg

சமஸ்கிருதம் கணினி நிரலாக்கத்திற்கு சிறந்த மொழியாக இருக்கும் என பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை ஒருமுறை கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். வேதங்களில் உள்ள கணித அறிவியல் இவர்களுக்கு உதவுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்கள் கிராமத்திற்கு சென்றாலே ஒரு புதுவித உணர்வு கண்டிப்பாக ஏற்படும். சுப்ரபாத் என தொடங்கி தெருக்களின் சுவரகளிலும் சமஸ்கிருத வாக்கியங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். சுஷ்மா சுவராஜ் இங்கு வந்த போது இங்குள்ள மக்களிடம் தொடர்ச்சியாக அவர்கள் மொழியிலேயே பேசினாராம்.

இதன் துணைகிராமமான கொசஹல்லி ஹமக்கா/ஹமக்கம் எனப்படும் கர்நாடகாவின் பண்டைய பாரம்பரியமான கலையை வளர்ப்பதில் புகழ்பெற்றது. பாடல் வகையில் இசையோடு கதைகளை சொல்லுதலே இந்த கலை.

இந்த கிராமம் ஒரு அக்ரகாரம் போல அமைக்கப்பட்டு மத்தியில் கோவில் உள்ளது. இங்குள்ள பாடசாலைகளில் இவர்கள் ஐந்து வருட சிறப்பான பயிற்சியை பெறுகிறார்கள். தங்கள் மொழியை கணினி வடிவில் மாற்றவும் செய்கின்றனர்.

சமஸ்கிருதம் இங்கு மரபாக பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு கடத்தப்படுகிறது. இதை அவர்கள் தங்கள் கௌரவாகவும் அடையாளமாகவும் கொள்கின்றனர். தமிழுக்கு இது போன்றொரு நிலை வராதவரை ஆனந்தமே.

 

Related posts

கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு

Seyon

பனி பொழியும் தென்னிந்திய கிராமம்

Seyon

கதவுகளே இல்லாத இந்திய கிராமம்

Seyon

Leave a Comment