பூமி இதுவரை ஐந்து மிகப் பெரிய பேரழிவை சந்தித்திருக்கிறது. கடைசியாக 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பேரிடர் டைனோசர் இனத்தின் தடத்தை அழித்தது.

கடந்த தலைமுறையிலேயே இதை பற்றி தெரிவித்த அறிவியலாளர்கள் தற்போது ஆறாவது அழிவு (Sixth Extinction) நாம் நினைப்பதை விட வேகமாக நிகழந்து கொண்டிருப்பதாக எச்சரித்துள்ளனர்.

இயல்புக்கு மாறான விலங்கினங்களின் அதிகப்படியான அழிவு சரிவிகிதம் மற்றும் புவியியல் மாற்றங்கள் அதனை உறுதிபடுத்துவதாகவே உள்ளன.

ஏற்கனவே பல்வேறு விலங்கினங்கள் காக்கப்படவேண்டிய பட்டியலில் இருக்கும் நிலையில் அவற்றின் வன உயிரியல் நிர்மூலமாதல்(Biological annihilation) சதவீதம் 110 ஆக அதிகரித்துள்ளது.

1990 முதல் இதுவரை 400 மேற்பட்ட கடல்-நில வாழ்பவை முழுவதுமாக அழியும் நிலையை சந்தித்துவிட்டன.
பல்வேறு முதுகெலும்பு விலங்குகள் தங்கள் பிழைக்கும் ஆற்றலை 30-40% மேல் இழந்து வருகின்றன.

மனித குரங்குகள், புலி இனங்கள் தாங்கள் ஆளும் பகுதியில் உயிர்பிழைக்கும் திறன் 20% ஆக சரிந்துள்ளது. விலங்குகளின் அவற்றின் மூன்றில் ஒரு பங்கு குணாதிசயத்தை மெல்ல இழந்து வருகின்றன.

இதனால் உயிர் சங்கிலி பாதிப்படைந்து பல இனங்கள் மறைந்துபோக வாய்ப்புள்ளது.
திடுக்கிடும் இயற்கை மாற்றாத்தால் தங்களது இயல்பை பல விலங்கினங்கள் இழந்துவிட்டன.

இன்றைய நிலையில் 20000 சிங்கங்கள், 7000 சிறுத்தைகள், 1000 பாண்டாக்கள் மற்றும் 250 சுமத்ரா காண்டாமிருகம் மட்டுமே புவியில் உள்ளது.

90% லுமர் இன விலங்குகள் அழிந்துவிடும் நிலையில் உள்ளன. இந்த சூழல் தொடந்தால் 40% ஊர்வன மற்றும் 25% பாலூட்டிகளின் அழிவு நிச்சயம் என சொல்லப்படுகிறது.

இவ்வாறான புவி சுழற்சி இயற்கையாக நடந்தாலும் இந்த ஆறாவது அழிவிற்கான முக்கிய காரணங்களில் எல்லாம் மனித இனம் பின்புலமாக தழைத்திருக்கிறது.

பேரழிவுகள் இயற்கையாக நடக்கும் ஏதாவதொரு தன்னிச்சையான செயல்பாட்டால் ஒரு தொடர்வினை போல அழிவுப் பாதையை நோக்கி நகரக் கூடியவை.

இதுவரை நிகழ்ந்ததிலேயே 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பேரிமியன்-டிராசிக் நிலக்காலத்தில் ஏற்பட்ட ருத்ரம்(Permian-Triassic extinction event) தான் மிக மோசமானதாக எண்ணப்படுகிறது.

96 சதவீதம் கடல் வாழ் மற்றும் 70 சதவீதம் நிலத்தில் வாழ் உயிரினங்கள் மொத்தமாக புவிலிருந்து மாண்டுபோயின. மீண்டும் சமநிலை உண்டாக 10000 வருடங்கள் பிடித்தது.

இதுபோன்றதொரு யுக அழிவுமுதுகெலும்புள்ள விலங்குகளை பெரிதாக பாதிக்கும் மென கருதப்படுகிறது. இயற்கை சூழல் மாற்றியமைவதால் மனித இனம் பாதிப்புக்குள்ளாக வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு பேரழிப்பின் போது பெரும்பான்மையான உயிரினங்கள் அழிந்து பூமி ஒரு மறுசுழற்சியை நிகழ்த்தும். உயிர்பிழத்தவை தம்மை பரிணமித்தக் கொண்டு அடுத்த யுகத்தை தொடங்கும்.

எரிகற்களால் அழிவுற்ற டைனோசர் காலத்திலும் சில விலங்குகள் தப்பிப் பிழைத்தன. பிற்கால ஆர்டோவிசியன் நிலகால அழிவில் நாய்களை விட பெரிய விலங்கினங்கள் உயிர் வாழ்ந்தன.

பேரிமியன் கால அழிவை தவிற மற்ற அனைத்திலும் சில பூச்சி வகைகள் தப்பித்துள்ளன. உயிர் பிழைத்தவை பருவ நிலைக்கு ஏற்றவாறு தம்மை தகவைமத்துக் கொண்டு இன்று வரை உள்ளன.

இன்று காணாமல் போன பல உயிரினங்கள் அனைத்தும் தாமாக மறைந்து போகவில்லை. மனிதனின் பங்கு அவற்றில் இழப்பில் அதிகம்.
விலங்கினங்கள் இடப்பெயர்வு அவற்றின் பல்பெருக்கத்தை பாதித்துள்ளது.

குளிர் பிரதேசத்தில் வாழும் ஒரு நாயை கொண்டுவந்து வெப்ப நாடுகளில் வளர்க்க மனிதனால் மட்டுமே முடியும்.

இது அங்கு சமச்சீர்மை குலைத்ததுடன் பல்லுயிர் வலையத்தையும் மாற்றியமத்துள்ளது. பல்வேறுபட்ட பறவை இனங்கள்,மீன்கள், விலங்குகள், ஊர்வன மனித முயற்சியால் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு அழிவுற்றுள்ளன.

வேட்டையாடுதல் உயிர் பிழைக்கும் யுக்தி என்று நம்மை ஏமாற்றிக் கொள்ளும் நாம் தோலுக்காக, ஆயுத்திற்காக, காட்சிபொருளாக வேட்டையாடிய பல விலங்குகள் இன்று புதைந்து போய்விட்டன.

நில ஆக்ரமிப்பால் 2000 வருடத்தில் 1800 வகையான பறவை இனங்கள் தொலைந்து விட்டன. 10000 வருடங்களுக்கு 2 என அழிந்துகொண்டிருந்த பாலூட்டி இனங்கள் தற்போது வருடத்திற்கு 2 ஆகியுள்ளது.

டோடோ பறவை, இந்திய புலிகள், பிரிட்டன் ஓநாய்கள், சுமத்ரா யானைகள், அட்லாண்டிக் கோலியாத் மீன்கள், ஐபிஸ் கோழிகள் போன்றவை பாதுகாக்கபட வேண்டிய பட்டியலில் இணைந்துள்ளன.

தெற்கு சீன புலி இனம் அழிந்துவிட்டது. கருப்பு காண்டாமிருகங்கள் மிருகக்காட்சி சாலையில் மட்டுமே உள்ளன. ஓடிற்காக வேட்டையாடப்படும் ஆமைகள் அபாய எண்ணிக்கையில் உள்ளன.

உணவு மற்றும் மருத்துவ துறையில் பயன்படும் சீன எறும்புத்திண்ணி 94% வேட்டையாடப்பட்டுள்ளது. டால்பின்கள், சுறாக்கள் இப்பட்டியலில் சில வருடங்களில் இணைந்துவிடும்.

இரண்டு தலைமுறைக்கு முன் வாழ்ந்த சிறுத்தைகள், சிங்கங்கள், ஒட்டகச் சிவிங்கிகள் பாதுகாப்பாக இருந்துள்ளன.

மனித இனப்பெருக்கம் புவியின் சமநிலையை தகர்த்துள்ளது.
எதிர்வரும் காலத்தில் வெப்பமயமாதல், உயிர்பிழைக்கும் திறனிழப்பு, படையெடுப்பு, உணவு பாற்றாகுறை, புவியியல் மாசுபாடு, வேட்டையாடுதல் ஆகியவையே விலங்கினங்கள் நிர்மூலமாதலுக்கு காரணமாக இருக்கும்.

பல்வேறு விலங்கின பாதுகாப்பு அமைப்புகள் பல முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

அழிந்துவரும் இனங்களை வனயுரியல் பூங்காக்களில் பிழைக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நம்மோடு இவ்வுலகை பகிர்ந்து கொண்ட உயிரினங்கள் இன்று மெல்ல அழிவு நிலையை எதிர்நோக்கி உள்ளன. இத்தருணம் மனித இனத்தை பாதிக்கும் காலம் நீங்கள் நினைக்கும் அளவிற்கு வெகு தொலைவில் இல்லை.

Leave a Comment