சொம்பு தூக்கி

இப்போ அதிகமா பயன்படுத்துற வார்த்தையாக மாறிவிட்டது.. இதனால் ஏற்படும் சில மன ரீதியான சிக்கல் சில…

சொம்பு என்பது தகுதியே இல்லாத ஒரு விஷயம் அல்லது ஒரு நபருக்கோ அதிகமாக புகழ்பாடுவது ஆனால் இங்கே யாரையும் புகழ்ந்தாலே உடனே சொம்பு என்று கிண்டல் செய்ய ஆரம்பிச்சுடுறோம்.

இதனால் சிலர் சிறப்பான விஷயம் செய்தாலும் எங்கே பாராட்டினால் உடனே சொம்பு அடிக்கிறான்னு சொல்லிடுவாங்களோன்னு பாராட்ட தயங்குகிறார்கள்.

புகழ்ச்சி என்பது ஒருவனை அடுத்த நிலைக்கு அவனை முன்னேற செய்யும் அற்புதமான செயல் அதை கண்டிப்பாக எல்லாரும் செய்யணும்.

தகுதியான விஷயத்துக்கு கண்டிப்பா பாராட்டுங்கள் ஆனால் தவறான விஷயமா இருந்தா அவரின் மனம் கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பாராட்ட ஆரம்பித்தால் அவரை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் என்பதை நாம் உணர வேண்டும்

காசா பணமா முடிந்த வரைக்கும் நல்ல விஷயங்களுக்கு பாராட்டி பழகுங்கள் அது எந்த அளவு பாராட்ட வேண்டும் என்று கருத்திலும் கொள்ள வேண்டும் ..

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.