அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்
ஒரு தேசத்தின் அடையாளம் அதன் புதுபிக்கப்பட்ட வரலாற்று பதிப்புகளிலும் புதைந்தெழும் தொல்லியல் சான்றுகளிலுமே மேன்மையடைகிறது. ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கீழடி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தபட்ட அகழ்வாய்வுகள் நம் பராம்பரியத்தின் வேரை உலகிற்கு பறைசாற்றியுள்ளது. தற்போது அதனை மிஞ்சும் தொன்மை ஆதாரத்தின் எச்சமாய் திகழ்ந்துக் கொண்டிருக்கிறது அழகன்குளம். சங்க காலத்தில் பாண்டியர்களின் முக்கிய வணிக தலமாக இருந்துவந்துள்ள அழகன்குளம் ராமநாதபுரத்திற்கு அருகே வங்க கடலில் வைகை நதி கலக்கும் பகுதியில்......