Tag : tamil science

Education Space

ஏன் நம்மால் சந்திரனின் மறுபக்கத்தை காண முடிவதில்லை?

Seyon
நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்யப்போகிறோம் என நாசா தொடங்கி சீனா வரை எல்லா நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டிருகின்றன. அதென்ன நிலாவின் இன்னொரு பக்கம். நாம் தான் மாதம் ஒருமுறை அவள் முகத்தை தரிசிக்கிறோமே. அல்லது இதுவரை அவள் காட்டியது முதுகு மட்டுமா. சந்திரனின் மறுபக்க ரகசியங்களை ஆய்ந்தறிவோம் இன்று. எப்படி பூமி தன்னைதானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறதோ அதுபோலத்தான் நிலாவும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டுதான் நம்மை சுற்றி வருகிறது.......
Entertainment Science

ஐந்தாவது விசை – பிரபஞ்சத்தின் இருள் சக்தியா

Seyon
2.0 படத்தின் டிரைலரை கவனத்திருந்தால் “when the Fifth Force Evolves” என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். படத்தின் வில்லானாக தோன்றும் அக்ஷய் குமார் கதாபாத்திரம் ஐந்தாவது விசையை மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட விண்மீங்களையும், வேகமாக விரிந்து கொண்டிருக்கும் அண்டத்தையும் கட்டுப்படுத்தும் இந்த ஐந்தாவது விசையை பற்றி விரிவாக காண்போம். பிரபஞ்சம் ஒரு மாயை. அதன் முழு பரிமாணத்தை இதுவரை யாரும் அறிந்ததில்லை. நாம் அறிந்த பேரண்டத்தில் மனிதன் மட்டுமே......
Science Tech

இனி ரோபோக்களோடு உறவு வைத்துக் கொள்ளலாம்

Seyon
ரோபோக்களின் அசூரவளர்ச்சி கலாச்சார நவீனமாகவும் அறிவுசார் அதிநுட்பமாகவும் பெரும் மாற்றத்தை விதைத்துக் கொண்டிருக்கிறது, அதே நேரத்தில் கனவில் பெண்களுடன் வாழ்ந்து நினைவில் தனிமையில் வாழும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டிருக்கிறது. தொடர்பில்லாத இவ்விரு துருவங்களை இணைக்கிறது செக்ஸ் ரோபோக்கள்.2010 ரோபோ கண்காட்சியில் ராக்சி என்ற செக்ஸ் ரோபோ அறிமுகபடுத்தபட்டது. ஆயினும் இதுவரை முழுமையடைந்த சந்தை ரோபோவாக எதுவும் வெளிவரவில்லை, அதற்கான சாத்திய சுழ்நிலை தற்போது உருவாகியுள்ளது. அறிவியல் பரிணமித்த இந்த......
Featured Mystery

அமலா கமலா | ஓநாய் குழந்தைகள்

Seyon
புகழ்பெற்ற டார்சன் கதாபாத்திரம் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். வனத்தில் எல்லா மிருகங்களுடன் உறவாடி சாகசம் செய்து அசத்துவார். விழுதுகளை பற்றிக் கொண்டு மரம்விட்டு மரம் தாவி கேளிக்கை செய்து நம்மை குதூகலிக்க வைப்பார். குழந்தை முதலே குரங்குகள் தான் அவரை பாலூட்டி வளர்க்கும், மற்ற விலங்குகளும் அரவணைக்கும். ஆனால் நிஜத்தில் கானகத்தில் வளர்வது அவ்வளவு மகிழ்வானதா! மனிதர்களால் தனிமைபடுத்தப்பட்டு வனவிலங்குகளால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பற்றிய கதைகள் உலகெங்கும் ஆங்காங்கே......
Business Education Tech

ஒரு ரோபோ எழுதப்போகும் நாவல்

Seyon
ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன என தெரிவிக்கிறது.......
Science Space

நிலவில் குடியேற வேண்டிய நேரம் இது

Seyon
புது கிரகம் தேடி வாழ்விடம் அமைப்பது நம் எல்லோர் ஆழ்மனதிலும் உறங்கிக்கொண்டிருக்கும் ஒரு கனவு. அதிலும் செவ்வாய் கிரக பயணத்திற்கு நம்மக்கள் ஏற்கனவே தயாராகிவிட்டனர். நாசா விஞ்ஞானிகள் தொடங்கி ஆங்கில திரைப்படங்கள் தொடர்ந்து மக்களின் மனதில் செவ்வாய் குடியேற்ற கனவை மெல்ல மெல்ல பதிய வைத்துவிட்டனர். 2010 ஆம் ஆண்டு முதலே மக்களை செவ்வாய் கிரகத்திற்கு குடியேற்றுவதற்கான திட்டத்தில் தீவிரமாக உள்ளது நாசா, அதிலும் SpaceX என்ற நிறுவனம் 2024......
Featured Medical

அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை

Seyon
இரத்தம் நம் உடல் செயலாக்கத்தின் ஆதாரம். உடலின் ஒவ்வொரு பாகத்தின் செயல்பாட்டிலும் இரத்தத்தின் பங்கு இன்றியமையாதது.எல்லோருக்கும் வாழ்வின் எதோவொரு சமயத்தில் இரத்தம் பெறவோ அல்லது தானம் வழங்கவோ நேரிடும். ஒவ்வொருவரும் தனது இரத்த வகையையும் தங்கள் உடன் சார்ந்தோரின் இரத்த வகையையும் அதன் தன்மையையும் அறிந்திருப்பது பல வகைகளில் நன்மையாக அமையும். Blood Groups : இரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இதில் எந்தவொரு அணுக்களின் அளவு அதிகரித்தாலும்......
Science Space

மார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்

Seyon
முழூ சூரிய கிரகணம்(Total Solar Eclipse) வழக்கமான சூரிய கிரகணத்திலிருந்து வேறுபட்டது. பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது. அந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்பட்டு பூமியின் சில இடங்கள் இருளில் முழ்கும்.அப்போது நிலவின் அளவால் சூரியனை சுற்றி ஒரு வளையம் மறைக்கப்படாமல் தோன்றும், ஆனால் மூழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் மூழுதாக மறைக்கப்படும். மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி முழு சூரிய......
Tech

நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்?

Seyon
Archelis (“நடக்கக்கூடிய இருக்கை” என அர்த்தம்) என்பது வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவ பணியாளர் களுக்காக கண்டுபிடிக்கப் பட்டுள்ள ஒரு அதிநுட்ப ஜப்பானிய படைப்பு.இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம்.   அதிலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல்பொருள் அங்காடி ஊழியர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள், தொழிற்சாலை பணியாளர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும்.......