Image default
Culture Festivals History

ஏன் சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது? வரலாறும் பின்னணியும்

“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு”- சிலப்பதிகாரம்

Origin

சந்திரன், சூரியன், மழை, தீ என இயற்கையை வணங்குவதே தமிழர் பண்பாடாக பன்னெடுங்காலமாக தொடர்ந்து வருகிறது. நமது கலாச்சாரம் நீண்டு வாழ்ந்த ஓர் உயரினத்தின் எச்சம்.

இந்திய துணைக்கண்டத்தில் இருவகையான நாட்காட்டிகள் வழகத்தில் உள்ளன. சூரிய மற்றும் சந்திர நாட்காட்டிகள். தமிழர் மரபு சூரியனையே தொடர்கிறது.

அதன் படி சூரியன் மேச ராசியில் சஞ்சரிக்கும் சித்திரை மாதம் வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இளவேனில் காலமாக இது கருதப்படுகிறது. நெடுநல்வாடை என்ற சங்க இலக்கியத்தில் மேசம் முதல் ராசியாக குறிப்பிட படுவதையே இதற்கு சான்றாக எடுத்துக் கொள்கிறார்கள்.

ஜூலியஸ் சீசர் காலத்தில் ஜியோர்ஜியன் காலண்டர் வழக்கத்திற்கு வரும் முன்னர் ஏப்ரல் மாத இடைக்காலமே புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டது. ஐரோப்பியா தொடங்கி உலகம் முழுதுமே சித்திரை முதல் நாள்தான் புதுவருடமாக அனுசரிக்கப்பட்டது.

பிற்காலத்தில் சர்வதேச அளவில் இன்று வழங்கப்படும் ஜனவரி 1 க்கு மாற்றப்பட்ட பின் பழைய புத்தாண்டு ஆனது முட்டாள்கள் தினமாக மாறிப்போன கதையை அறிய இங்கே செல்க.

Equinox

அறிவியல் முறைப்படி பார்த்தால் சூரியன் நிலநடுக்கோட்டின் மேலே கடக்கும் காலத்திற்கு பின்பு வருகிறது நம் பண்டிகை. ஆங்கிலத்தில் Equinox(சம இரவு நாள்) என்பார்கள். ஒரு வருடத்திற்கு இருமுறை இது நிகழும்.

அதாவது நமது பண்டைய வழிமுறைகள் யாவுமே விவசாயத்தை மையபடுத்தியே அமைந்திருந்தது. நவகிரக வழிபாட்டு முறையில் சூரியன் ஒரு கிரகமாகவே எண்ணப்பட்டது.

அந்த கிரகமே புவியின் ஆற்றலுக்கும் இயக்கத்திற்கும் காரணம் என்பதை முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தினர். எனவே சூரிய சந்திரனின் பாதைகள் மிக உன்னிப்பாக கண்காணிப்பட்டு அதற்கேற்ப விவசாயம் நிகழ்ந்தது.

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்பதே நம் முன்னோர் கல்வி. அந்த வகையில் சூரியன் சரியாக கிழக்கு நோக்கி உதிப்பது புத்தாண்டு மாதத்தில் தான். அதுவே சித்திரை விழா(Vernal Equinox).

பின்னர் குறிப்பிட்ட புள்ளியில் தென் கிழக்காக நகர்ந்து தென் துருவ புள்ளியை அடைவது ஆடிப் பிறப்பு(Summer Solstice). அதே போல் மீண்டும் மையத்தை அடைந்து கிழக்கில் உதிப்பது ஐப்பசி மாதத்தில், கிட்டத்தட்ட தீபாவளி திருநாள் (Spring Equinox).

பின்பு வடக்கிழக்கு துருவ புள்ளியை அடையும் சமயம் தைப் பொங்கல் திருவிழா (Winter Solstice). இந்த சுழற்சி சூரியன் கிழக்கில் துவங்கி இரு திசைகளையும் பயணித்து வருவதை கொண்டு வருடம் கணிக்கப்பட்டது.

Celebration

சித்திரை முதல் தினமான தமிழ் புத்தாண்டு தமிழகத்தில் மட்டுமல்லாது அச்சாம், மேற்கு வங்காளம், கேரளா, மணிப்பூர், திரிபுரா, பிகார், பஞ்சாப், உத்திர பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் நேபாளம், பங்களாதேசம், மியான்மர், கம்போடியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் மேலும் சிங்களர்களாலும் கொண்டாடப்படுகிறது.

தமிழர்களால் மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, தற்போது கனடா மற்றும் தமிழர் வாழும் நாடுகளில் கொண்டாடப்பட்டாலும் மற்ற தெற்காசிய நாடுகள் இதனை கொண்டாடுவதற்கு சங்க காலத்தில் தமிழ்ப் பண்பாடு ஆதிக்கத்தை பறை சாற்றுவதாக இருக்கிறது.

ஆய்வாளர் குணசேகரம் கருத்துப்படி இலங்கை, கம்போடியா, வியட்நாம் புத்தாண்டு விழா சிந்து சமவெளி நாகரிகத்தில் வழக்கமாக இருந்த தமிழ்ப் புத்தாண்டின் தொடர்ச்சியாக இருக்கலாம். ஞானசூரியன் கருத்துப்படி இடைக்காலத்தில் தெற்காசியாவில் பரவியிருந்த தமிழ் ஆதிக்கமே காரணம் என்கிறார்.

எனினும் புத்தாண்டு ஒரே தினத்தில் அமைந்தாலும் அதன் பெயர்களும் கொண்டாட்டங்களும் சில நாடுகளில் மட்டும் வேறுபடுகின்றன. விசு, உகாதி, வைசாகி, சங்கராந்தி என உள்நாட்டிலும் அழுத் அவுருது(சிங்களம்), Chol Chnam Thmey(கெய்மர்), Songkran(தாய்லாந்து) எனவும் அழைக்கப்படுகிறது.

தமிழகத்தில் சித்திரை திருநாள் அன்று பெரும்பாலும் கோயிலுக்கு செல்வதே சாலச் சிறந்த பண்பாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வீட்டிலும் சிறப்பு படையல் நடப்பதோடு அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் இருக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவால் நகரே விழாக்கோலம் பூண்டிருக்கும். பல்வேறு இடங்களில் உற்சவ மூர்த்தி தேரில் பவனி வருவார்.

வாழ்த்துக்களை பரிமாறி கொள்வது, குடும்பத்தினருடன் இணைத்து ஆசி பெறுவது, வாசலில் கோலமிடுவது புத்தாடை அணிவது, புதிய திரைப்படங்கள் பார்ப்பது(2018 ல் இல்லை) என கலைகட்டும். அதிலும் மாங்காய் பச்சடி செய்வது சிறப்பான ஒன்று. பொதுவாக சித்திரை திருநாள் என வழங்கப்பட்டலும் சில தமிழக மாவட்டங்களில் சித்திரை கனி என்ற’ பெயரில் பழங்களை வைத்தும் வணங்கப்படுகிறது.

இலங்கையில் அத்தோடு நில்லாமல் ரேக்ளா பந்தயம், சக்கர குழியில் வாகனம் ஓட்டுதல், போர்த்தேங்காய் உடைப்பது, வழுக்கு மரம் ஏறுவது, கிளித்தட்டு மற்றும் கூத்துகளும் நடைபெறும். கைவிசேடம் எனும் ஆசீர்வாதம் பெறுவதும் வழக்கம்.

Controversy

பல்வேறு சங்க நூல்கள் சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக் அங்கீகரிக்கின்றன. எனினும் கொண்டாட்டம் என்பதற்காக வலுவான ஆதாரம் இல்லை. பத்தாம் நூற்றாண்டின் பின்னரே குறிப்புகள் நீள்கின்றன. 1600ன் போர்ச்சுகீசிய குறிப்புகளும் தமிழர் புத்தாண்டாக சித்திரையே சொல்கிறது.

மறைமலையடிகள் போன்ற சிலர் பழைய இலக்கியங்களை ஆராய்ந்து சூரிய நாட்காட்டியில் புத்தாண்டு என சித்திரை மாதத்தை குறிப்பிடவில்லை என்ற வாதத்தை முன்வைத்தார். பின் மதுரையில் நடந்த தமிழ் மாநாட்டை குறிப்பிட்டு திருவள்ளுவர் ஆண்டு தொடக்கமாக அன்றைய ஆளும் திமுக அரசால் 2008 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தை மாதத்திற்கு மாற்றப்பட்டது.

எனினும் அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக 2011 சித்திரையை நிலைநாட்டி சித்திரை திருநாளே புத்தாண்டாக கொண்டவர முனைந்தது. நீதிமன்ற வழக்காடலுக்கு பின் தற்போது அரசு விடுமுறையாக சித்திரையே நீடிக்கிறது.

Samvastsara

இதற்கு மற்றொரு காரணமாக பார்க்கப்படுவது அறுபது ஆண்டுகள் கொள்கை. வழமொழியில் வராகமிகிரரினால் வழங்கப்பட்ட இந்த அறுவது வருட நாட்காட்டி முறை 14 நூற்றாண்டுக்கு பின்னே சோழ ஆட்சியில் வந்தது. வடமொழி ஆண்டு முறை எதிர்ப்பில் தமிழ்ப் புத்தாண்டை தவிர்க்க வேண்டியதில்லை என்ற வாதத்திற்கு பிறகே தைப்புத்தாண்டு விலக்கப்பட்டது.

வியாழன் கோளை சார்ந்து வரும் இந்த அறுபது ஆண்டு நாட்காட்டி முறை தான் தற்போது சூரிய நாட்காட்டியில் வழக்கத்தில் இருக்கிறது. அதன்படி வாரம், மாதம் போல வருடங்களும் ஒரு சுழற்சிக்கு உட்படும்.

அதாவது இந்து காலக் கணிப்பு முறையில் மொத்தம் அறுபது ஆண்டுகள் கொண்ட ஆண்டு வட்டங்கள் உள்ளன. பிரபவ ஆண்டில் தொடங்கி அட்சய ஆண்டில் முடிவுற்று மீண்டும் பிரபவ ஆண்டு தொடரும்.

2015-16 மன்மத ஆண்டாகவும் 2016-17 துன்முகி ஆண்டாகவும் இருந்தது. 2017-18 தற்போது ஹேவிளம்பி ஆண்டாகும் தமிழில் பொற்றடை என சொல்லப்படும் இந்த ஆண்டு மழை குறைவாகவும் அதனால் உணவு உற்பத்தியும் பாதிப்படையும். விலைவாசி ஏகிரி உயிரழிப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

அரசியல்வாதிகள் போர்க் குணம் கொண்டவர்ளாக மாறக்கூடும் அதனால் அகிலம் போர் சூழலை எதிர்க்கொள்ளவும் வாய்ப்புண்டு என இடைக்காட்டுச் சித்தர் வெண்பா இயற்றியுள்ளார்.

“ஏவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ”

உலகெங்கும் தீ பரவும் என்பது ஏற்றுக்கொள்ளதக்கதே. வனத்தீயா புரட்சித்தீயா என்பது காலத்தின் கையில் மட்டுமில்லை.

Related posts

கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு

Seyon

வியக்க வைக்கும் மாட்டுவண்டி தொழில்நுட்பம். மாட்டின் கழுத்தை பாரம் அழுத்தாத மரபு வடிவம்.

Paradox

காவிரி பிரச்சினை : நேற்று முதல் ஆதி வரை

Seyon

Leave a Comment