பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 3 பெண்கள்

முந்தைய பாகத்தில் திரிபு அடைந்த பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 2  வாயில்லா ஜீவன்கள் படும் பாட்டை பார்த்தோம். ஆனால் கவிதை எழுவதாக இருந்தாலும் சரி கரைபுரண்டு ஓடும் நதிக்கு பெயர் வைப்பதாக இருந்தாலும் சரி, பெண்களை பற்றி அவர்களே சிந்திக்காத அளவிற்கு நாமே பல கற்பனைகளை அளந்து விட்டிருப்போம். பழமொழிகளும் அதற்கு விலக்கல்ல. வாருங்கள் பார்க்கலாம்.

சேலை கட்டும் பெண்ணை நம்பாதே
சேலை கட்டும் பெண்ணை நம்பாதே.

(சேல் + ஐ, சேல் என்பது கண் விழியை குறிக்கிறது. எப்போதும் விழிகளை பரபரப்பாய் அலைபாய விடும் குணாதிசயம் உள்ள பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
கல்லான் ஆனாலும் கணவன் , புல்லான் ஆனாலும் புருஷன்.

சொல்றதுக்கு நல்லாருந்தா என்ன வேணுமா சொல்வாங்க. கல்லான்னாக படிக்காதவனாக இருந்தாலும் சரி, புல்லானாக அன்பற்றவனாக இருந்தாலும் சரி அவன் உன் கணவன் (அதனால அடிக்காம பாத்துகணும்) அப்படிங்கறது தானே சரி.

ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைத் தானே வளரும்.

ஊரான் பிள்ளை என்பது மனைவி. அவள் கருவுற்றிருக்கும் போது அவளை நன்றாக கவனித்து கொண்டு ஊட்டி வளர்த்தால் அவள் அவற்றில் வளரும் உன் பிள்ளை தானாக வளரும்.
இத யாரவது சொல்லும் போது கவுண்டர்மணி அண்ணன் போல ஊரான் பிள்ளை ஊட்டில வளரும் உன் பிள்ள கொடைக்கானல வளரும் ..அட போடி..’ என கோவம் தான் வருது.

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.
ஆயிரம் தடவ போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

முன்பெல்லாம் பொண்ணுக்கு மாப்பிள்ளை கிடைப்பது அவ்வளவு சாதாரண காரியம் இல்ல. எப்படியாவது பொண்ண குறிப்பிட்ட வயதுக்குள் கல்யாணம் செய்து வைத்து விட வேண்டும் என பெண் வீட்டுக்காரங்க தீவிரமாக இருப்பாங்க. பொண்ணு பாக்க வந்த மாப்ள கிட்ட எல்லாரும் போய் சொல்லி ஒத்துக்க வைப்பாங்க.மாப்ள சரினு சொல்றது அவளவு கடினம்.
இன்னொரு பார்வை : ஆயிரம் பேரிடம் போய் சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.

நல்லவை ஆவதும் பெண்ணாலே தீயவை அழிவதும் பெண்ணாலே.
இந்த பழமொழி பல சமயங்களில் பெண்களுக்கு எதிராகவே சொல்லப்படுகிறது.ஆனால் இது பெண்மையை புகழ்வது.யாவும் உலகில் பிறப்பது பெண்ணில் தான்.நம்மை சுற்றி நடக்கும் எல்லா நல்ல விசயங்களிலும் ஒரு பெண்ணின் நற்செயல் இருக்கும்.
பொன்னுங்கனாலே பிரச்சினை என சொல்ல எல்லாரும் யோசிச்சி பாருங்க, அந்த பிரச்சினை முடிவுக்கு வரதுக்கும் ஒரு பெண் தான் காரணமாய் இருந்திருப்பாள்.

மாமியார் உடைத்தால் மண் குடம்,மருமகள் உடைத்தால் பொன் குடமா.
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.

பழமொழி காலத்திற்கு ஏற்றது போல மாறுவதற்கு இது உதாரணம். உண்மை பொருள் மாமியார் வயலில் உழைத்தால் அது மண்ணுக்கு உறமாக மாறி விளைச்சலை பெருக்கும்,அதுவே மருமகளும் இணைந்து உழைத்தால் நிலத்தில் பொன்னாகும்
ஆனா இப்ப இருக்குற பழமொழியும் அர்த்தம் நிறைந்த தாகவே உள்ளது.மருமகள் செய்றதெல்லாம் பெரிதாக்கும் மாமியார் இருக்காதன் செய்ராங்க.

சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்.

சஷ்டியில் நாம் விரதம் இருந்தால், அகப்பையான கருப்பையில் கர்ப்பம் நிலைக்கும்.

அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.

அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்.அரச மர காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன.குழந்தைப் பேறுக்கும் நல்லது.
இப்படி அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிக்க மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்.இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள். இப்போ புரியுதா ஏன் அரச மர பிள்ளையாருக்கு இவளவு மதிப்பு என்று.

கோத்திரம் அறிந்து பெண் கொடு,பாத்திரம் அறிந்து பிச்சை இடு.
கோத்திறம் அறிந்து பெண் கொடு,பாத்திறம் அறிந்து பிச்சை இடு.

ஒரு மன்னன் தன் பெண்ணை திறமையுள்ள இன்னொரு அரசனுக்கு ஆராய்ந்து பார்த்து மணமுடித்து தர வேண்டும். அதேபோல் புலவனுக்கு அவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை அளிக்க வேண்டும்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.