Image default
Featured Tradition

பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 1

பழமொழிகள் நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்ற அனுபவ குறிப்புகள். ஒவ்வொரு நாட்டிலும் பழமொழிகள் அதன் சமூக பண்பாட்டு பெருமையும் அறிவுத்திறனையும் எடுத்துக் காட்டுகிறது. பொதுவாக பேசும் போது எளிதாக விளங்க, உதாரணம் சொல்ல இவை பயன்படுகின்றன.
நம் செந்தமிழிலும் எத்துணையோ அற்புதமான பழமொழி உள்ளது, அதில் சிலவற்றை வட்டார வழக்கிற்கு மாறி மருவியது என்ற பெயரில் நம்மாளுங்க எப்படி வச்சு செஞ்சிருக்காங்கனு பாக்கலாம்.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் கொடை புடிப்பான்.
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான்.
தன் வாழ்வை அர்பணித்து வாழ்ந்து வரும் மனிதன், யாசகன் கேட்பவன் அர்த்த ராத்திரியில வந்தாலும் கொடை கொடுப்பானாம், அவனையே அற்பனாகிடாங்க.

அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமாட்டான்.
அடி என்பது ஔவையாரின் நாலடி, அதன் தத்துவத்திற்கு இணையாக சகோதரன் கூட உதவ மாட்டான். அதுபோல் அடி என்பது இறைவனின் திருவடி எனவும் சொல்கிறார்கள், எல்லாம் போனதுக்கப்புறம் கடைசியில் இறைவன் தானே.

இன்னொரு பார்வை:
இருப்பினும் ஏற்றுக்கொள்ளமாறு இருப்பது நில அடி தான். அண்ணன் தம்பி கை விட்டாலும் சொந்தமாக சில அடி நிலம் இருந்தால் அது உனக்கு உதவும். அடிதடி இல்ல.

ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன்.
ஆயிரம் வேரை (மூலிகை வேரை) கொன்றவன் அரை வைத்தியன்.
சித்த வைத்திய முறைகளில் மூலிகைகளை தெரிந்து வைக்கிறது மிக அவசியம்.குறைத்தது ஆயிரம் மூலிகைகளின் தன்மை அறிந்தவனே அரை வைத்தியன். பின்ன ஆயிரம் பேர கொன்ன சும்மாவ விடுவாங்க.

களவும் கற்று மற.
களவும் கத்தும் மற.
ஊரில் பலர் தவறு செய்யும் போது சொல்வது அல்லது அவர் நண்பர் சொல்வது.ஆனால் கத்து என்பது தூய தமிழில் பொய் அல்லது கயமை என்பதாய் பொருள். திருடுறதையும் ஏமாற்றுவதையும் மறக்க சொல்லிருக்கு,கத்துகிட்டது அப்புறம் இல்ல.

பசி வந்திட பத்தும் பறந்து போகும்.
அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்கள் பறந்து விடுமாம்.
குறித்து வைங்க. காதல்,குலம்,மானம்.

ஆத்துல ஒரு கால், சேத்துல ஒரு கால்.
அயத்தில் ஒரு கால், செயத்தில் ஒரு கால்.
அயம்னா புத்தி, அதாவது புத்தியில் ஒன்றை வைத்துக்கொண்டு சம்பந்தம் இல்லாத வேறு செயலில் ஈடுபடுவது இரண்டையுமே பாதிக்கும்.

ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்.
அகத்தில் போட்டாலும் அறிந்து போடணும்.
ஆத்துல இப்பெல்லாம் குப்பையை மட்டும் தான் போடுறாங்க, அதெலாம் அளந்தா போட முடியும். அகத்துலனு சொன்னது ஆத்துலனு மாறிவிட்டது. அகத்தில் (aka) மனதில் போகிற வருகிறவர் போகிறவர் சொன்னதையெல்லாம் போட்டு குழம்பாம, தேவையானத மட்டும் சேர்த்து வச்சா போதும்.

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.
எறும்பு ஊற கல்லும் தேயும் பழமொழியோட தங்கச்சி மாதிரி இருந்தாலும் இது அது இல்ல. அம்மி ஆனது அத செதுக்குனவன் ஆராம்பிச்சி வீட்டு பெண்களிடம் தினமும் அடியோ அடி வாங்குது.
எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் ஒருகட்டதுல உடைங்சிருவார் என்பது போல இவளவு அடிவாங்குர அம்மியும் ஒருகட்டதுல தகர்ந்து விடும்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல.
பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல.
அழகான பொண்ணு பக்கதுல உக்காந்தா பழம் நழுவி பாலில் விழந்திருச்சு நினப்போம், அதுவே எலுமிச்ச பழமா இருந்தா, பால் செத்துடும்.

வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை.
வாக்கு தெரிந்தவனுக்கு வாத்தியார் வேலை போக்கு தெரிந்தவனுக்கு போலீஸ் வேலை.
கலகலப்பு படத்தில் சொல்வது போல நாம அடிச்சவன்லாம் யாரு, ஸ்கூல் வாத்தியார்,கோயில் பூசாரி,etc. வக்கிலாமலாயா வாத்தியார் வேலைக்கு வாராங்க, போக்கதவனுக்கு போலீஸ் வேலைனு வெளிய சொல்லிபாருங்க( இரண்டும் அரசாங்க வேலை).
வாக்கு(கற்றல் அறிவு) உள்ளவருக்கு வாத்தியார் வேலை, போக்கு கற்றறிந்தவருக்கு போலீஸ் வேலை உகந்தது என்று தான் சொன்னார்கள். என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா..

கண்டதை கற்க பண்டிதன் ஆவான்.
கண்டு அதை கற்க பண்டிதன் ஆவான் .
ரோட்டில கீழ கடந்ததை எடுத்து படக்கிறவனலாம் பண்டிதன் இல்லை. நல்ல நூல்களை தேடி கண்டுபிடித்து படிக்கிறவனே பண்டிதன்.

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.
அக்காலத்தில் கப்பலில் சென்று பணம் சம்பாதிப்பார்கள். வணிகம் செய்து சேர்த்த அந்த கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே என்பார்கள். கன்னக்கோல் என்பது கள்வர்கள் திருட செல்லும் போது சுவரை துளையிட்டு செல்ல பயன்படுத்தும் கருவி. அரவான் படத்தில் கூட காட்டிருப்பார்கள்.என்ன ஆனாலும் திருட கூடாது என்பதே இதன் பொருள்.

பகையாளி குடியை உறவாடி கெடு.
பகையாளி பகையை உறவாடி கெடு.
பகையாளி கூட அன்பாய் உறவாடி அவனுக்கும் நமக்கும் இருக்கும் பகையை கெடுத்து நல்லுறவை கடைப்பிடிக்க வேண்டும். நம்மாளுக்கு ஒத்து வரமாதிரி மாதிடாங்க அவ்வளவுதான்.

காத்து உள்ளபோதே தூத்திக்கொள்.
உனக்கு இதை உணர்த்தும் பெரியோருக்கு காத்து [உயிர்] உள்ளபொழுதே, அறியாமையை தூத்திக்கொள்ள (போக்கிக்கொள்ள) வேண்டும்.
பெரியார் செத்துட்டாரேனு சொல்லக்கூடாது,அது பெரியோர்.ஆமா இப்ப யார் விட்லதான் காத்து இருக்கு.
வாய்ப்பு அமையும்போதே பயன்படுத்திக் கொள்ளல்.

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி.
(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்.

ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
மனித உடலையும் ஒன்பது துவாரங்களையும் குறிக்கிறது. இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல முடியாது.

தை பிறந்தால் வழி பிறக்கும்
பழங்காலத்தில் சாலைகளெல்லாம் மண் சாலைகளே. சாலை மின்விளக்கும் கிடையாது. இரவில் நல்லா தெரியவேண்டும் என்று வெள்ளை நிற மண் சாலைகள் அமைப்பார்கள்.சாலைகளும் மார்கழி மாத பனியினால் காணமல் போகும். அதனால் நடைசாரிகள் சாலைகள் கடக்க மிகவும் துன்பப்பட்டனர்.
தை மாதத்தில் பனி குறைய தொடங்கும்.எனவே தான் தை மாதம் பிறந்தால் பனியினால் மூடப்பட்ட வழி பிறக்கும்.
இதனையே உழவர்களுக்கும் பொருந்தும். ஏனெனில், தை மாதம் – அறுவடைக்கு ஏற்ற காலம் எனவே தை பிறந்தால் பொருள் ஈட்ட வழி பிறக்கும்.

ஆடிக்காற்றில் அம்மியும் பறந்து போகும்.
ஆடிக்காற்றில் அம்மையும் பறந்து போகும்.
இவற்றில் எல்லாமே சரி என சொல்ல முடியாது, அதனால..,
பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது.

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
பொன் என்பது வியாழன்((ஜுபிட்டர்) கிரகத்தை குறிக்கும். வியாழன் சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோள்.செவ்வாய்க்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் உள்ளது. அளவில் பெரிதாய் இருப்பதாலும் சூரியனிலிருந்து தொலைவில் இருப்பாதாலும் பூமியிலிருந்து சில சமயங்களில் காணக் கிடக்கும்.
அதே சமயம் புதன்(மெர்குரி) கோள் அளவில் சிறியது மேலும் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் அதன் ஒளியின் முன் தெரியவே தெரியாது.அதனால் பூமியிலிருந்து காணும் வாய்ப்பு அரிது.
பொன் தரிசனம் கிடைத்தாலும் கிடைக்கும்.புதன் தரிசனம் கிடைக்காது.(>‿◠)✌


Related posts

தயான் சந்த் – ஹாக்கி விளையாட்டின் மந்திரவாதி

Seyon

விநாயகர் சதுர்த்தி தோன்றிய வரலாறு

Seyon

டெல்டா பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதா? பயங்கர சத்தம் எதனால்?

Paradox

1 comment

sumerian June 30, 2018 at 1:29 am

“கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு…” என்பதே பாடல். விளக்கம் வருமாறு
https://www.facebook.com/search/top/?q=my%20post%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

Reply

Leave a Comment