பழமொழிகளும் அதன் உண்மையான அர்த்தமும் – பாகம் 4 அரசன்

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
அரசன்று கொல்பவன்,தெய்வமே நின்று கொல்லும்.
சிறிய மாறுதலோடு திரிபு அடைந்த பழமொழி. தவறு செய்தவனுக்கு மரண தண்டனை அளிக்கும் போது அங்கு நின்று தண்டிப்பவன் அரசனல்ல, அந்த தெய்வம் தான் வந்து நின்று கொல்கிறது என அர்த்தம்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு.
மரணத்திற்கு கால நேரம் கிடையாது.அது சிம்பு படம் மாதிரி ஆறிலும் வரும் அறுபதிலும் வரும். ஆனா இப்பழமொழி கர்ணனுக்காக எழுதியது போல இருக்கு.
போருக்கு முன் குந்தி தேவி தன் மகனை அழைக்கிறார்.அதற்கு கர்ணன்,தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கெளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி. ஆகவே,ஆறிலும் சாவுதா‌ன்,இ‌ல்லா‌வி‌ட்டாலு‌ம் நூறிலும் சாவுதா‌ன் என்றாராம்.
அதுபோல தர்மம் தலை காக்கும் என்பதும் இவருக்கே பொருந்தும் பழமொழி.

சோழியன் குடுமி சும்மா ஆடாது.
சோழியன் என்பது ஒரு சமூக பிரிவாகும்.முற்காலத்தில் தலையின் முன்புறம் குடுமி வைத்திருப்பார்கள். பாரம் தூக்கும்போது பெண்கள் சேலையை சுற்றி தலை மீது வைத்து அதன் மேல் பாரம் வைத்துக் கொள்வார்கள்.இதற்கு சும்மாடுனு பெயர்.
ஆனால் முன்புறம் குடுமி வைத்த சோழியன் தங்களது முன்புற குடுமியை சும்மாடு ஆக பயன்படுத்த முடியாது. ஆகவேதான் அதை குறிக்க சோழியன் குடுமி சும்மாடு ஆகாது என்று வந்த சொல் வழக்கு இன்று வேறாகி திரிந்து விட்டது.
சோழ நாட்டவர் குடுமி எனவும் சொல்வதுண்டு.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
முக்கியமான பழமொழி. நல்ல சாப்புடறவங்களுக்கு புடிச்ச வரி. இது விடுமொழி போல. விடுமொழினா விடுகதையா இருந்து பழமொழியா மறியிருக்கும். இதுக்கு பதில் கையாம், அதாவது சாப்புடும் போது முன்னாடி போகும், போர் சமயங்களில் வில்லை இழுக்க பின்னாடி போகும். பந்திக்க முந்தும் படைக்கப் பிந்தும்.
பந்திக்க முந்து படைக்கப் பிந்து.
ஆனா இதுல ஒரு உலக தத்துவமே அடங்கி இருக்கு. பந்திக்க என்றால் கல்யாணம் பண்றது, அதை காலாகாலத்துல செய்யனும், படைப்பது என்றால் குழந்த பெற்றுக் கொள்ளல், அத பொறுமையா செய்யனும்.

அரசனை நம்பி புருஷனை கை விட்ட மாதிரி.
அரசன் என்பது அரச மரத்தை குறிக்கும்.அரச மர காற்றை சுவாசிக்கும் போது கருவுற்றிருக்கும் பெண்களுக்கு அவர்களின் கருப்பை தொடர்பான சில வியாதிகள் குணம் பெறுகின்றன.குழந்தைப் பேறுக்கும் நல்லது.
இப்படி அரச மரத்தை அடிக்கடி சுற்றியவள் புருஷனை கவனிக்க மறந்து விட்டு பிள்ளைக்கு காத்திருந்தாளாம்.இதையே அரச மரத்தை சுற்றிவிட்டு அடி வயிறை தொட்டு பார்த்துக் கொண்டாளாம் என்றும் பழமொழியாக சொல்வார்கள்.
இப்போ புரியுதா ஏன் அரச மர பிள்ளையாருக்கு இவளவு மதிப்பு என்று.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
1.ஆடம்பரமாய் வாழும் தாய், 2.பொறுப்பில்லாமல் வாழும் தந்தை, 3.ஒழுக்கமற்ற மனைவி, 4.ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர், 5.சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்.
இவை எல்லாம் கொண்டவன் அரசனா இருந்தாலும் காலி தான்.

கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
கப்பலே கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே.
அக்காலத்தில் கப்பலில் சென்று பணம் சம்பாதிப்பார்கள். வணிகம் செய்து சேர்த்த அந்த கப்பல் கவிழ்ந்தாலும் கன்னக்கோலில் கை வைக்காதே என்பார்கள். கன்னக்கோல் என்பது கள்வர்கள் திருட செல்லும் போது சுவரை துளையிட்டு செல்ல பயன்படுத்தும் கருவி. அரவான் படத்தில் கூட காட்டிருப்பார்கள்.என்ன ஆனாலும் திருட கூடாது என்பதே இதன் பொருள்.

கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி.
(கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.