செம்பவளராணி – முதல் கொரிய அரசி

கொரிய நாட்டின் கிம் மக்கள் தங்கள் வம்சத்தின் தாயாக கருதும் ஒரு பெண்ணரசியை வணங்க இந்தியா நோக்கிய ஒரு யாத்திரையை வருடா வருடம் மேற்கொள்கின்றனர். இதற்கு காரணமாக இருப்பது கொரியாவின் பண்டைய கயா பேரரசின் முதல் ராணி இந்தியாவில் இருந்தே அங்கு குடியேறினார் என அவர்களின் வரலாற்று குறிப்புகள் கூறுவதே.

ஹியோ ஹியாங் ஓக் (Heo Hwang Ok) என்ற பெயர் கொண்ட அவர்தான் கொரியா நாட்டு வரலாற்றில் முதல் அரசியும் ஆவார். அவருக்கு இந்திய – கொரிய தூதரங்களால் அவரின் தாய் தேசமான அயோத்தில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஆனால் அயோத்திக்கும் அவருக்கும் தொடர்பில்லை, அவள் ஒரு தமிழ் தேச இளவரசி என சமீபத்தில் வரலாற்றாளர்கள் சாட்சியளிக்கின்றனர். அப்படியானல் அயோத்தியில் ஏன் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது என தெரிவு கொள்ள வேண்டியதை பற்றியதே இந்த பதிவு.

இல்யோன் என்ற புத்த துறவி 13 ஆம் நூற்றாண்டில் பண்டைய கால கொரிய தேசத்தின் வரலாற்றையும் புனை சரித்திரங்களையும் தொகுத்து சம்குக் யுசா(SAMGUK YUSA) என்ற மூவேந்தர் வரலாற்றை எழுதினார். அவர் குறிப்பிட்டுள்ள பண்டைய நாயகர்களின் சாகச இதிகாச புராண கதைகளில் தான் இந்த அரசியை பற்றிய பல்வேறு குறிப்புகள் உள்ளன.

கி.பி.முதலாம் நூற்றாண்டில் கொரியாவின் ஒரு பகுதியை சுரோ அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு திருமண வயது நெருங்கியதும் அவையோர் குறிப்பிடும் ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இளவரசனோ என் திருமணம் சொர்க்கத்தில் இறைவனால் தான் நிச்சயயிக்கப்பட வேண்டும் என மறுப்பு தெரிவித்தார். சில காலத்திற்கு பின்னர் அருகிலுள்ள தீவு ஒன்றில் ஒரு மிகப்பெரிய சிவப்பு கப்பல் ஒன்று அயல் தேசத்தில் இருந்து வந்தது(தற்போதைய தென் கொரியாவில்).


அதில் பவளத் தாரகையாய் அழகிய இளவரசியும் அவருடன் இரு கணவன் மனைவி உட்பட சில பாதுகாவலர்களும்(அடிமைகள்) மேலும் தங்கம்,பட்டு, பகோடா கற்கள் என சில பொருட்களும் தரையிரங்கின.

இளவரசனை சந்திந்த அந்த 16 வயது நிரம்பிய தொலைதேச எழிலரசி தான் கண்ட கனவை பற்றியும் கனவுக் காதலனை தேடிய பெருங் கடற்பயணத்தை பற்றியும் அவனிடம் கூறினாள். வானிலிருந்து வரும் அசரீரி போல அவள் சொற்கள் கேட்க சுரோ தன் கடவுளுக்கு மனதால் நன்றி சொன்னான். தானும் இப்படி ஒன்று நிகழ போவதை முன்னரே உணர்ந்தாத கூறி அவர்களின் திருமணத்திற்கு மரகத கொடி அசைத்தான்.

திருமணத்தின் போது சிவப்பு வண்ண பட்டு துணியை அவள் மலைகளுக்கு காணிக்கை அளித்ததாக அக்கதை கூறுகிறது. அதன் பின் கயா பேரரசின், கொரியா வரலாற்றின் முதல் ராணியாக அவர் வாழ்ந்தார். இங்கிருந்து தான் அவள் பின்புலத்தின் சர்ச்சை துவங்குகிறது.

அவர் தன் தாய் தேசமாக குறிப்பிட்டது ‘அயுத்தா’ என்ற பெயரை. அவர் எப்படி சொன்னார் அவர்கள் அதை எப்படி புரிந்து கொண்டனர் என்பதும் அந்த வரலாறுகள் சீன மொழியில் எழுதப்பட்டதையும் கவனிக்க வேண்டும். அயுத்தா என்ற சொல் வரலாற்றாளர்கள் சிலரால் இந்தியாவின் புராதாண நகரமாக அயோத்தியா என கணிக்கப்பட்டது.

ஆனால் இந்திய சரித்திரத்தில் இவரை பற்றிய வரலாறு எங்கும் பதிவாகவில்லை. அவர் பற்றிய குறிப்புகளின் புரிதல்கள் சரியாக இல்லாததே இதற்கு முக்கிய காரணம்.
சிலரோ அதனை தாய்லாந்து அயூத்யா என்ற இடத்தை குறிப்பிடுவதாக எழுதினார்கள்.

அது ஆரம்பத்திலேயே மறுக்கப்பட்டது. காரணம் அந்நகரம் 15 நூற்றாண்டு காலத்தில் தான் உருவானது. இதனை தமிழ் மரபு ஆய்வாளர்கள் பாண்டிய அரசின் கீழ் ஆட்சி புரிந்த ஆய் நாட்டின் இளவரசி என சுட்டிக் காட்டினர். 2011 பிறகான விக்கிபீடியாவும் அதனை பகிர்கிறது.

இதற்கு அளித்த விளக்கங்கள் நம்ப தகுந்தவையா என்பன கொரியாவின் பாரம்பரியத்தை உற்று நோக்கும் போது புரிதலாகும். மொழி – கொரியாவின் இன்றைய நவீனத்தில் கூட அவர்கள் தன் தாய் தந்தையை ‘அம்மா அப்பா’ என்று தான் அழைக்கிறார்கள்.

அதை தன் தாய் வழி மரபு சொல்லி தந்ததாக சொல்கிறார்கள். புது, புதிய, புல் வெட்டு, தெரு, நாள் என இன்னும் பல சொற்களாகவும் அப்பாடா அச்சச்சோ என உணர்வாகவும் தமிழ் ஆதிக்கத்தை கொரிய மொழியில் இன்றும் காண இயலுகிறது.

தமிழ் மொழிக்கும் கொரிய மொழிக்கும் உள்ள ஒற்றுமை பற்றிய ஒரு பிரெஞ்சு அறிஞர் தான் ஆராய்ந்து கூறினார். இந்தியா சார்பாக முயற்சிகள் எடுக்கப்பட்டால் இன்னும் அரிய தகவல்கள் புலப்படும். உணவு – கொரிய நாடு புத்த மத தழுவலுக்கு பின்னான காலத்தில் மற்ற கிழக்காசிய நாடுகளை போல சீன ஜப்பான் நாகரீகத்தின் ஆதிக்கத்தின் கீழுள்ளது.

ஆனால் சீன ஜப்பான் உணவு பழக்கங்களிலிருந்து வேறுபட்டு நெல் அரிசி உணவை பிரதானமாக கொண்டிருந்தனர். தற்காலத்தில் அதுவும் மாறி வருவது உண்மை. பாண்டிய இளவரசி அங்கு செல்லும் போது அவள் அறியாதவர்களோடு வர மறுத்தார். எனவே அவர்கள் தங்களுக்கென குடிசை அமைத்து கொண்டதாய் தெரிகிறது.

கொரியாவின் பழமையான வீடு கட்டும் முறைகளில் குடிசை அமைத்து வாழ்வது குறிப்பிடதக்கதாக அமைந்துள்ளது. அதன் பின்னரே நெற் விவசாயம் வளர்ந்ததாக தெரிகிறது.

இதில் குழப்பமான நிலையை உருவாக்குவது அயுத்தா என்ற குறியீடு தான். மேலும் அயோத்தியா நகரம் அந்த காலக்கட்டத்தில் சகேதா என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. இதை பல்வேறு வரலாற்றாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். கொரியா சார்பில்லாமல் நமது தமிழ் மரபின் திசையிலிருந்து பார்த்தால் இன்னும் பல தரவுகள் நமக்கு கிடைக்கிறது.

கடல் பயணம் – அந்த புத்த துறவி குறிப்பிட்டிருக்கும் ஆண்டு கிபி 45. அதாவது சரியாக நமது சங்க காலம். அப்போது பாண்டியர்கள் வளமையாக வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உலகெங்கும் பரவி கிடக்கிறது. பாண்டியர்கள் ரோம், கிரேக்கம் என கடல் கடந்து வணிகம் செய்ததற்கான அடையாளங்கள் நமது கடற்கரையோரமாக கிடைக்கும் ரோமானிய நாணயங்களே சாட்சி.

அழகன்குளம் அகழாய்வு – பாண்டியரின் புதையல்

ஆனால் அவர்கள் கடல் கடந்து திருமண உறவுகளை மேற்கொண்டார்களா என்பது ஆய்வுக்கு உட்பட வேண்டியது. அதன் பின்னான காலத்தில் பல சான்றுகள் பதிந்துள்ளன.

நமது ஆய்வாளர்கள் அவள் பெயரை செம்பவள ராணி என கருதுகிறார்கள். அவரது கொரிய பெயரின் அர்த்தமும் அவ்வாறாகவே இருக்கிறது. அவர் பெயரில் வரும் ஹியோ, கோ என்ற சொல்லில் இருந்து வந்திருக்கலாம். அதாவது அதிகார பதவியில் உள்ளவர் எனப் பொருள் கொள்வது.

நமது தமிழகத்தில் சங்க காலத்திலே பவள தொழிற்சாலைகளே இருந்துள்ளன என்பது குறிப்பிடதகுந்தது. செம்பவள ராணி அங்கு சென்ற போது தான் இரு மாதங்களுக்கு பின்னர் அங்கு வந்து சேர்ந்ததாக சொல்கிறார்.

முதலில் உத்திர பிரதேசத்தில் உள்ள அயோத்தியா ஒரு கடலோர நகரமே இல்லை. சங்க காலத்தில் வானியலிலும் அவர்கள் பெரும் ஞானத்தை பெற்றிருக்கவில்லை. ஆனால் தமிழ் சமூகம் ஆமை வலசை பாதை பயன்படுத்தி விரைவான கடல் வழி பயணத்தை மேற்கொண்டுள்ளனர். கிழக்கையும் மேற்கையும் இணைத்ததில் தமிழக பங்கு பெரும்பான்மை என்பது வரலாறு மறுக்க இயலாத நிதர்சனம்.

இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் ஆமை முட்டை இடும் கடற்கரை பகுதிகளுக்கு தமிழ் பெயர்கள் மறுவி உள்ளதாக நம்பப்படுகிறது. மேலும் இடப்பெயர்வு அல்லாது கலாச்சார பதிவிடங்களும் அவர்களின் வம்ச விருத்தியும் சில விளக்கங்களை நமக்கு அளிக்கிறது.

அந்த தம்பதிகளுக்கு 12 பிள்ளைகள், அதில் 8 பெயரை பெளத்த மதத்திற்கு மாற்றியுள்ளார் அந்த அரசி.
மதம் – கொரியாவில் 4ஆம் நூற்றாண்டு காலத்திலே புத்த மதம் கோலோச்ச துவங்கியது, தமிழ் சங்க காலத்திலோ பெளத்த மதம் சார்ந்த மடலயங்கள் தமிழகத்தில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது.

புத்த மதம் பரவிய பட்டுபாதை வழியாக சீனர்கள் சகஜமாக இங்கு கடல் வணிகம் செய்துள்ளனர். 15 நூற்றாண்டு வரை சீன யாத்ரீகர்களுக்கு விடுதிகள் இருந்துள்ளன. செம்பள ராணி தமிழினமாயினும் இளவரசியாதலால் சீன மொழியை கற்றுத் தேர்ந்தவராக இருக்கவும் வாய்ப்புண்டு.

அவர் ஒரு பெண் என்பதால் அக்காலத்தில் பெண்கள் கடற்பயணத்தில் ஈடுப்பட்டார்களா என்பது பற்றிய தெரிவு தேவை. அதே சமயம் மணிமேகலை கடற்பயணம் செய்ததாக குறிப்புகளும் உள்ளது.
இளவரசி பயணத்தின் போது கடல் ஆபத்துகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள அவர்கள் குழு சில கற்களை கொண்டு சென்றுள்ளது.

அந்த கற்கள் இன்னமும் கொரியாவில் அவரது நினைவிடத்திற்கு அருகில் உள்ளது(ஒரு சூலமும் இருக்கிறது). சற்று வித்தியாசமான அந்த அடுக்கு கற்கள் இளவட்ட கற்கள் போல் தோற்றமளிக்கின்றன.


அப்படியான வழக்கம் அயோத்தியா மற்றும் மற்ற கிழக்கு ஆசிய நாடுகளில் அதுவரை இருந்ததில்லை.
மேலும் அவர்கள் அங்கு செல்லும் போது பன்னிரண்டு நரம்புகள் கொண்ட இசை வாத்தியத்தையும் அவர்களோடு கொண்டு சென்றனர்.

12 நரம்பு இசை வாத்தியங்கள் தமிழ் பண்பாட்டிலேயே இருந்து வந்தது. கொரியா நாட்டினரின் கலை நிகழ்ச்சிகள் தமிழகத்தில் அரங்கேறிய போது நம் கூத்து இசைக்கும் அதற்கும் பல ஒற்றுமைகளை காண முடிந்ததாக தெரிகிறது.

இசை, மொழி, உணவு உட்பட பல்வேறு கலாச்சார ரீதியான தொடர்புகளை தவிர்த்து விட்டு நிற மற்றும் இதிகாச நகர பெயருக்காக வரலாற்றை ஆய்வில்லாமல் திரித்தி எழுவது அனர்த்தம்.
நம் கண்ணெதிரே நமது வரலாற்றை மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கொரிய அரசு அயோத்தியை பற்றி சொன்ன போது,

அதை பற்றி முறையான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படமால் இந்திய வரலாற்றில் இல்லாத ஒரு இடத்தை பயன்படுத்தி தமிழ் பண்பாடு மறுக்கப்படுவது நேரடி சாட்சியாகி உள்ளது.
அங்கு மணிமண்டபத்தை கட்டியதுடன் அதனை சர்வதேச கலைச் சின்னமாக அறிவிக்க அம்மாநில அரசு முயற்சி செய்து வருகிறது.

இன்றைய காலத்தில் கிட்டதட்ட 6 மில்லியன் மக்கள் அவரது கிம் வம்சத்தில் வந்தவர்களாக அந்நாட்டில் உள்ளனர். கிம், ஹியோ வம்சங்களுக்கு அவளே தாய். அதற்காகவே அவர்கள் பல கோடி செலவு செய்து இந்தியாவில் தவறான திசையில் மணிமண்டபம் கட்டியிருக்கிறார்கள்.

இதை பற்றி நா.கண்ணன்,ஒரிசா பாலு , நாகராஜன் என சிலர் பல்வேறு மின்னிதழில் ஆய்வுகள் மூலம் பல்வேறு தகவல்களை வெளிபடுத்தினர். அது 2014 ஆண்டு இந்து நாளிதழிலும் வெளிவந்தது.
ஆனால் இப்படி ஒரு வரலாற்றை பற்றிய அறிதலை கூட நமக்கு அளிக்காதது யார் தவறென தெரியவில்லை.

References:

கொரியாவின் கயா அரசி – Google Groups
http://www.thehindu.com/news/cities/chennai/words-that-speak-of-an-enduring-link-between-tamil-and-korean/article7853212.ece

1 comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.