Image default
Villages

கஞ்சா வளர்க்கும் இமயமலை கிராமங்கள்

இமயமலை வெண் அழகாக ரசிக்கப்படுகிறது. இயற்கையின் பிரமித்த படைப்பாற்றலின் அடையாளமாகவுகம் அதிசயிக்கப்படுகிறது. ஆனால் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்கள், சர்ச்சைகள் உலவுகின்றன. அதில் பல நாம் முற்றிலும் அறியாதவை.

ஆப்பிளும் தேயிலையும் வளரும் அதே இமயத்தில் கஞ்சா போன்ற கன்னாபீஸ்(Cannabis) செடிகளும் வளர்கின்றன. இந்த போதை பயிர்கள் இயற்கை வாழ்விடம் கொண்டவையாயினும் அவை அரசால் தடை செய்யப்பட்டவை.

அதே சமயத்தில் இமாலயத்தின் சிறிய கிராமங்களில் வாழும் பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு இது கலந்திருக்கிறது. கஞ்சா செடிகளின் மூலம் தங்களது அஸ்திவார வாழ்வாதரத்தை இவர்கள் அமைத்துக் கொண்டுள்ளனர்.

02cannabis_farmers-ngsversion-1454355000674-adapt-536-1

9000 அடி உயரமுள்ள இவ்வகை கிராமங்களை நடந்து சென்று மட்டுமே அடைய முடியும், வாகனங்களுக்கு வாய்ப்பில்லை. இவற்றில் ஏறவே மூன்று மணி நேரத்திற்கு மேலாகும்.

அவ்வப்போது காவலர்கள் வந்து இந்த தாவரங்களை வெட்டி வீழ்த்துவார்கள், அது கடலில் ஒரு துளி அளவிற்கே சமமாகும்.

கஞ்சா இந்திய இமாலய காட்டு பகுதிக்குள் கொழுந்து விட்டு வளர்கிறது. மேலும் சட்டத்திற்கு புறம்பான இந்த மலை கலாச்சாரத்தை அழிப்பதென்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத செயல்.

05cannabis_farmers-adapt-536-1

அறுவடைக்கு பின்னர் மணிக்கணக்கில் விவசாயிகள் கஞ்சா செடிகளின் பூவினை தெய்த்து பிசின் எடுக்கின்றனர். இது அவற்றை விதையிட பயன்படுகிறது. அதன் வகையில் உலகின் சிறந்ததாக இது கருதப்படுகிறது.

அதாவது மேற்கத்திய நாடுகளில் ஒரு கிராம் மட்டுமே 20 டாலர்கள்(1300 ரூபாய்) வரை விலை போகும். தடை செய்யப்பட்டிருப்பினும் தங்களது பொருளாதார காரணத்திற்காக பல விவசாயிகள் கஞ்சா பயிரிடுபவர்களாக மாறி வருகின்றனர்.

கஞ்சா பொதுவாக எல்லா வகையாக நிலங்களிலும் வளரும் தன்மையுடையது, அதன் விதைகள் தூவினால் போதும். அரச விரதோமாக வளர்ப்பதால் உகாண்டா, ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலும் ரகசியமாக வளர்க்கப்படுகிறது. அடர்ந்த காடுகளும் மலைப் பகுதிகளும் இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

a457d371e65fdbd7db02fa11ee996d29

உலகின் கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலுமே கஞ்சா தடை செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உலகில் அதிகளவு கள்ள சந்தை இயங்குவது கஞ்சா தொழிலில்தான்.

அமெரிக்கா போன்ற பொருளாதார நாடுகளில் தான் ஹெராயின்,கஞ்சா போன்ற கன்னாபீஸ்களின் தேவையும் புழக்கமும் அதிகளவில் இருக்கிறது. இதிலும் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் உள்ளது சிறப்பம்சம்.

கஞ்சாவின் மதிப்பு வருடாவருடம் பெருமளவில் அதிகரிக்கிறது, இருப்பினும் இங்குள்ள விவசாயிகள் ஒரு சராசரி வாழ்வையே வாழ்கின்றனர். தங்களுக்கென சிறிய அளவிலான நிலத்தில் மட்டுமே பயிரிடுகின்றனர், அதன் மூலம் வரும் வருவாயோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

04cannabis_farmers-ngsversion-1454355002670-adapt-536-1

கஞ்சா மத்திய/ தெற்கு ஆசிய பகுதிகளை தாயகமாக கொண்டது. 3000 ஆண்டுகளுக்கு முன்னரே புழக்கத்தில் இருந்ததற்கான சான்றுகள் உண்டு.

பண்டைய இந்து மதத்தின் ஞானிகள் அல்லது சாதுக்கள் தியானம் செய்ய இமயமலை நோக்கி பயணித்தனர் (இப்போது பலர் அங்கேயே வாழ்கிறார்கள்). இவர்களே இந்த செடிகளை முதன் முதலில் இமாலயத்தில் விதையிட்டவர்கள் அல்லது கண்டறிந்தவர்கள்.

இப்போது கூட காசி உட்பட பல இடங்களில் சாதுக்கள், அகோரிகள் எல்லோர் மத்தியிலும் சர்வ சாதரணமாக கஞ்சா உட்கொள்ளவதை காணலாம். இதை அவர்கள் சர்வசித்த நிலையாக எண்ணுகிறார்கள்.

யுகங்களாக தொடரும் இவர்கள் பழக்கம் 1970 வரை கூட இமயமலையில் பரவலாக அறியபடவில்லை. ஏனெனில் பொதுவாக இவர்களை கண்டறிவதே அறிது.

காலம் மாற 70 கால கட்டத்தில் சில ஆசாமிகள், உள்ளூர் வாசிகளும் இவர்கள் பின்னால் மலைக்கு செல்ல அவர்கள் செடியின் சில பாகங்களை எடுத்து சிகரேட்டாக பயன்படுத்துவதை கண்டனர். பின்னர் இவர்களே இதை அங்கு பயிரிட துவங்கினர்.

07cannabis_farmers-adapt-536-1

அப்போது பின்பற்றப்பட்ட அதே பழமையான பயிரிடும் முறையை பயன்படுத்தி தான் ஒவ்வொரு வருடமும் டன் கணக்கில் உற்பத்தி நடைபெறுகிறது.

இது சட்டவிரோதமான முறையில் நடப்பதால் இவர்களுக்கு ஒரு முக்கிய புள்ளியோ அல்லது இயக்கமோ வெளியே தெரியுமளவில் இல்லை. இந்திய அரசாங்கமும் அதற்கான விவரங்களை அறிய ஒரு புள்ளிவிவரத்தை எடுக்கவில்லை.

ஏனெனில் கஞ்சா அங்கு இயற்கையாக வளர்கிறது, அதன் உரிமையாளரை கண்டறிவது காவலர்களுக்கு கடினம்.

உள்ளுர் வாசிகள் ரெய்டிலிருந்து தப்பிக்க தங்கள் பயிர் நிலங்களை மலையின் உயரத்திற்கு நகர்த்திக் கொண்டே செல்கின்றனர்.இவர்கள் இனத்தின் பல்லாயிரகணக்கான குடும்பங்கள் கஞ்சா செடி உற்பத்தியை நம்பியே உள்ளன.

12cannabis_farmers-ngsversion-1454355003334-adapt-536-1

விவசாயிகள் பெரும்பாலும் வெளிநாட்டினரிடம் விறபனை செய்கின்றனர், சில சமயம் பெரிய இந்திய நகரங்களிலிருந்து வந்து வாங்கி செல்கின்றனர். இந்தியாவில் தற்போது இதன் தேவை அதிகரித்து வருகிறது.

மேலும் புதிய விருந்தினர் மாளிகை போன்றவை கஞ்சா குடிப்பவர்களுக்காவே இங்கு சீசன் நேரங்களில் அமைக்கப்படுகிறது, சட்ட விரோதமாகத்தான்.

<getting-high-in-india

கஞ்சா நம் சிந்தனையை இரு வகையாக பாதிக்கும். குழப்பம் ஏற்பட்டு எல்லாவற்றையும் மறக்கும் நிலையும் வரும், மனதிற்கு எண்ணங்களிலிருந்து ஓய்வும் கொடுக்கும்.

அதனால் இதனை மருவத்துவத்தில் பயன்படுத்தலாம் என சில ஆய்வுகள் கூறுகிறது. பழங்கால மருத்துவ முறைகளில் வலி நீக்கி மூலிகையாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஆனாலும் நவீன ஆய்வுகள் இதனை எதிர்க்கின்றன.  முதன்முறையாக உருகுவே அதிரடியாக கஞ்சாவை அதிகாரப்பூர்வமாக அனுமத்தித்தது, ஆனால் இதுவரை அங்கீரிகாரமாக எதுவும் விற்கப்படவில்லை.

போதை பொருள் கடத்தல் மிகவும் கடினமான ஒன்று, கஞ்சா கடத்தலில் அதிக நேரத்தை மலை பிரதேசங்களிலே செலவிட வேண்டிருக்கும்.

கஞ்சா இந்தியாவில் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாறு கொண்டது. பண்டைய வேதங்களில் கூட இதை பற்றிய குறிப்பு உள்ளது. 

சிவபெருமானின் திருவாலயமாக கருதப்படும் இமாலயத்தில் அவர் தியான கோலத்தில் கஞ்சா மலர்களை உட்கொள்வதாக இந்து மதம் விவரிக்கிறது. சிவ மூலிகை எனவும் அறியப்படுகிறது.

எது எப்படியோ, இப்போது இவை எல்லாம் ஒரு வியாபாரம் தான். இமாலய கிராமவாசிகள் அந்த வியாபாரத்தை வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.

இமயமலை பழங்குடி சமூகங்கள் பெருமிதமிக்கவை, அதே சமயத்தில் அவை தனித்தன்மை வாய்ந்தவையும் கூட. இயல்பிலேயே கடும் உழைப்பாளிகளான இவர்கள் எவ்வித காலநிலை சூழலையும் ஏற்றக் கொள்ள தக்கவர்கள்.

ஆனால் இவர்கள் மலையேற்றம், எருதுகளை மேய்த்தல் போன்றவற்றை தவிர வேறு தொழில் அறியாதவர்கள். இதனாலே கஞ்சா வளர்ப்பது இவர்கள் வாழ்வின் அங்கமாக மாறியுள்ளது.

சொல்லப்போனால் இந்த பழங்குடியினர் வாழ்வில் எதையும் சட்டப்படி செய்ய நேர்ந்ததில்லை. மத சடங்குகளையும் பழமையான வழக்கங்களையுமே நம்பியுள்ளனர்.

11cannabis_farmers-adapt-536-1

1985 ஆம் ஆண்டு போதை பொருள் செடிகள் வளர்ப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டது. ஆனால் அது முதல் கஞ்சா வளர்ப்பு அதிகரித்துள்ளதே தவிர கட்டுபடுத்தப்படவில்லை.

1961 ஆம் ஐக்கிய சபையில் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி இந்தியா போதை பொருளை ஒழிக்கும் நாடுகளின் பட்டியலில் தன்னை இணைத்துக் கொண்டது, ஆனால் இது இந்தியா.

ஒரு இனத்தின் பண்பாட்டை அழித்தல் இந்தியாவின் சார்பின்மைக்கு பங்கம் விளைவிக்கும். கஞ்சா வளர்ப்பை தடை செய்யும் சட்டம் கொண்டு வரவே 24 வருடங்கள் பிடித்தது இந்தியாவில்.

மனித நாகரிகத்தின் வாசமே அறியாத கற்கால மனிதர்களாக வாழும் வடக்கு சென்டினல் தீவு மக்களை இந்திய ராணுவம் என்றும் ஆக்கிரமித்ததில்லை.

நம் நாடு பல கலாச்சார வேறுபாடுகள் கொண்டது, கஞ்சா பல மத சடங்குகளில் பானம் போல பல இனங்கள், பழங்குடிகள் மற்றும் காட்டுவாசிகளால் பயன்படுத்தப் படுகிறது.

மலைவாசிகளுக்கு ஒரு சிறந்த வேலைவாய்ப்பையும் வாழ தேவையான சூழலையும் அமைத்து தருவது அரசின் கடமை. இமாச்சல பிரதேசம் மற்றும் அதன் அருகாமை வடகிழக்கு மாநிலங்களின் மக்களின் தேவையை எந்த அரசும் இதுவரை முழுமையடைய செய்ததில்லை என்பது வருந்ததகுந்த நிஜமே.

Related posts

சமஸ்கிருதம் பேசும் ஒரே இந்திய கிராமம்

Seyon

கதவுகளே இல்லாத இந்திய கிராமம்

Seyon

கோலார் தங்க வயல் புதைந்த வரலாறு

Seyon

Leave a Comment