Image default
Featured History Mystery

தக்கீ கொலையாளிகள் – மறக்கப்பட்ட வரலாறு

Thugs என்ற ஆங்கில சொல்லுக்கு கொள்ளைக்காரர்கள், வழிப்பறி கும்பல் என்று பொருள். இந்த சொல் ஏமாற்றுக்காரன் என பொருள்படும் சமஸ்கிருத/இந்தி சொல்லிலிருந்து ஆங்கிலத்திற்கு சென்றது.

கொள்ளைக்காரர்கள் என அர்த்தம் தரும் ஒரு ஆங்கில சொல் இந்தியாவிலிருந்து செல்ல காரணம் என்ன?

உலகின் எந்தவொரு கொள்ளைக்கார இயக்கமும் தக்கீ(Thuggee) அளவிற்கு மக்களை கொலை செய்ததாக வரலாறில்லை. 1830 ஆம் ஆண்டுக்கணக்கில் இந்தியாவின் இந்த ரகசிய அமைப்பு குறைந்த பட்சம் 50,000- 1,00,000 வணிகர் மற்றும் பயணிகளை கொலை செய்ததாக ஆங்கில அரசு சொல்கிறது.

கின்னஸ் சாதனை(!) புத்தகத்தின் படி 600 வருடங்களில் 20 லட்சம் கொலைக்கு காரணமாக இருந்திருக்கிறது தக்கீ இயக்கம்.

thaggi2.jpg

இவர்கள் கொள்ளை அடிக்கும் முறை புராதாணமானது, அதாவது சாலைகளில் செல்லும் பயணிகளோடு வணிகர்கள் அல்லது யாத்ரீகர்கள் போல இணைந்துக் கொண்டு தக்க சமயத்தில் அவர்களை தாக்கி அவர்களிடம் இருக்கும் பண, அணிகலங்களை கொள்ளையடித்து பின்னர் கழுத்தை நெரித்து  கொலை செய்து விடுவார்கள்.

தோற்றம் :

13 ஆம் நூற்றாண்டிலேயே இவர்கள் தோன்றிவிட்டதாக கருதப்படுகிறது. முகலாய் பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு இந்திய மக்களிடம் ஏற்பட்ட குழப்ப சூழலே தக்கீக்களின் எண்ணிக்கை பெருக முக்கிய காரணமாக அமைந்தது

ஜியாவுதின் பரணி என்ற சுல்தானிய அறிஞர் இவர்களை பற்றிய தன்னுடைய வரலாற்று குறிப்பில்(History of Firoz Shah – 1356) கூறியுள்ளார். சுல்தான் ஆட்சிக் காலத்தில்(1290) ஆயிரகணக்கான தக்கீக்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் சுல்தானால் கொல்லப்படமால் மற்ற அண்டை தேசங்களுக்கு(இப்பொது மாநிலங்கள்) அனுப்பபட்டனர்.

இவர்களின் தோற்றம் சரியாக தெரிவில்லை எனபோதும் ஏழு இசுலாமிய குலத்தில் இருந்துதான் இவர்கள் தோன்றியதாகவும் பிற்காலத்திலேயே இவர்களுடன் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

thug 5.jpg

நூற்றாண்டுகளாக இவர்களை யாரும் அடையாளம் காணவில்லை. பிரிட்டிஷ் அரசு அதன் கிளைகளை இந்தியா முழுதும் தழைக்க விட்டபோது தான் இவர்கள் பற்றிய செய்திகள் வெளியானது.

அடையாளம் :

1799 வரை ஒரு தக்கீ கூட பிரிட்டிஷ் அதிகாரிகளால் கைது செய்யப்படவில்லை. 1810-ல் தபால் கொண்டுசென்ற வண்டியைத் தாக்கிக் கொள்ளையடித்த பிறகே, தக்கீக்கள் பிரச்னை குறித்து பிரிட்டிஷ் கவனம் செலுத்தத் தொடங்கியது.

நாட்டுபுற பகுதிகளில் பயணிகள் கொலையாவதை பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்திறங்கின.

முதலில் இந்த கொள்ளை கும்பலுக்கும் கொலையாளிக்கும் தொடர்பில்லை எனவே எண்ணப்பட்டது. அப்போது 50 மேற்பட்டரோரின் பிணக்குவியல் கங்கைக்கு அருகே உள்ள கிணறுகளில் தொடர்ச்சியாக கண்டெடுக்கப்பட்டது.பின்னர் இவர்கள் பற்றிய தேடலும் அச்சமும் மென்மேலும் அதிகரித்தது.

ஆனால் இன்னும் ஆயிரக்கணக்கான பிணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உடல் விரைவில் மக்குவதற்கு ஏதுவாக எலும்பு இணைப்புகள் முறிக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன.

thugs_blinding_and_mutilating_traveller

கிணறுகளில் புதைப்பதால் பிணந்திண்ணி போன்ற விலங்குகளால் ஏற்படும் கவனத்தையும் திசை திருப்ப முடிந்தது. மற்றபடி பிணத்தை எரிப்பதே இவர்கள் வழக்கம்.

இப்படியான செயல்கள் மிக சாதரணமாக நிகழ்த்தப்படுவதல்ல. அதிபலமும் ஆற்றலும் கொண்டு மிகத்திறமையாக ஆதாரங்களே இல்லாமல் தக்கீக்கள் இதனை செயல்முறை படுத்தியிருந்தனர்.

மிகப்பெரும் ரகசிய இயக்கத்தின் அச்சுறுத்தலை கண்டுகொண்ட ஆங்கிலேய அரசு இவர்களை அழிக்க தனி வியூகம் வகுத்தது.

காளி :

தக்கீ இயக்கத்தை சேர்ந்தவர்கள் காளியை தங்கள் அர்பணிப்பு தெய்வமாக வணங்கினர். அவர்கள் தங்களை காளியின் வாரிசுகள் எனவும் சொல்லி  கொண்டார்கள், மரணத்தை இருள் தாய்க்கு சமர்பித்து தங்களுக்கு பாதுகாப்பை வேண்டினர்.

ஒரு சில இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இவர்களுடன் இணைந்து செயல்பட்ட போதிலும் பெரும்பான்மையானவர்கள் இசுலாமிய மதத்தை பின்பற்றுபவர்களே. வழிபாட்டு மரபை பின்பற்றிய இயக்கங்களில் கொடூர கொலைகள் அதிகளவு நடந்தது இவர்களாலே.

கொலை மற்றும் மற்ற மத தெய்வத்தை வணங்குவது இசுலாமிய மரபுப் படி பாவச் செயலாகும். அதே நேரத்தில் வழிப்பறிக்கு செல்லும் போது மட்டுமே இவர்கள் காளியை வணங்கியதாகவும் பிடிபட்டவர்கள் எல்லோரும் காளி தெய்வத்தை குறிப்பிடவில்லை.

நிஞ்சாக்கள் போல இவர்களும் சிறுவயது முதலே விரைவாக கொலை செய்வதற்கான பயிற்சியை பெற்றிருந்தனர்.

தின்னமான துணியைக் கொண்டு பலியாளின் கழுத்தை இறுக்கிக் கொல்வதே இவர்களின் முறை.

KENNY 16
KENNY 16

ருமால் எனப்படும் கைக்குட்டை ஆயுதம் தக்கீ இயக்கத்தை சேர்ந்தவர்கள் கழுத்தில் முடிச்சிடப்பட்டிருக்கும். தக்கீக்களுக்கான பயிற்சி, குழுவின் மூத்த நபரான குருவிடம் இருந்து புதியவர்களுக்கு செல்லும்.

உள்ளாட்சி :

உறுப்பினர்கள் தன் மகனுக்கு வழிபாட்டு மரபுகளையும் ரகசியங்களையும் கடத்திச் சென்றனர். சில நேரங்களில் பயணிகளுடன் இருக்கும் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு அவர்கள் குழுவில் இளம் தக்கீயாக வளர்ப்பார்கள்.

தக்கீக்கள் நீங்கள் நினைப்பதை விட பெரும் இயக்கமாக செயல்பட்டனர். மிக ரகசியமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த இவர்கள் கொள்ளைக்காக அதிகம் பயணித்தனர், நிலப்பரப்பை ஆக்கிரமித்தனர், ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு பகுதி நேரமாகவும் பணி செய்துள்ளனர்.

சில காலகட்டங்களில் மிக அதிக இயக்க உறுப்பினர்களை கொண்ட தலைவர்கள் ஒரு ராஜாவை போல மதிப்பு பெற்றிருந்தனர். தக்கீயின் ஒவ்வொரு வட்டமும் குறிப்பிட்ட நபர் குழுவை உளவாளிகள் போல கொண்டிருக்கும்.

இவர்களே அருகாமையிலுள்ள தங்கும் விடுதியில் இருப்பவர்கள், பயணப்படுபவர்களின் விபரத்தையும் பணக்கட்டின் எடையையும் தெரிவிப்பவர்கள்.

A photograph of a group of elderly men sitting on a mat, taken in Peshawar, now in Pakistan, circa 1865. Two of the men are looking at each other with contempt, suggesting that they may actually be enemies who have been persuaded to be photographed together as examples of native "thugs."

இந்த தகவலை கொண்டு அவர்கள் பயணப்படும் அதே இடத்திற்கு பயணம் செல்வது போல போலியாக இணைந்து கொள்(ல்)வார்கள். அவர்களுடன் சகஜமாக பழகி அவர்களின் நம்பிக்கையை பெற்றுவிடுவது தக்கீக்கள் முக்கிய நோக்கம், இது அவர்களின் சிறப்பம்சமும் கூட.

அரங்கேற்றம் :

அவர்களுடம் பிராத்தணை செய்வார்கள், உணவு உண்பார்கள், பாதுகாப்பை பற்றி கூட பேசுவார்கள். ஒரு பெரிய பயணிகள் குழுவாக இருப்பின் அதற்கான தக்க சூழலும் இடமும் அமையும் வரை பொறுத்திருப்பார்கள்,

சில சமயங்கள் நூற்றூக்கணக்கான மைல்கள் கூட செல்ல வேண்டிருக்கும். ஊரைத் தாண்டிய காட்டுப்பகுதிகள், சாலையோரங்களே இதற்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

வங்காளர்த்தில் ஆற்றில் வணிகம் செய்பவர்கள் போல இணைந்து கொண்டு கொள்ளையை துவங்குவார்கள். அக்காலத்தில் ரயில்களில் யாரவது புகையிலை கேட்டால் தரமாட்டர்கள். அது தக்கீயின் அபாய குறியீடு.

இரவிலேயே இவர்கள் தாக்குதலை துவங்குவார்கள். பொதுவாக ஒரு பெரிய குழுவிற்கு மூன்று நபர்கள் இணைந்து பலியை தொடங்குவார்கள். ஒருவர் தனது ருமாலை கொண்டு கழுத்தை இறுக்கி பிடிப்பார், இரண்டாமவர் அவரை முன்னால் தள்ளி மற்றொருவர் காலை பிடித்து தூக்கி எறிவார்.

thug-2

சிறப்பாக திட்டமிட்டு சத்தமே இடமால் தடயங்களை அழிப்பது இவர்களின் உள்வள திறமை.

ஒரு திட்ட வகுக்கும் போது அத்துணை பேரையும் கொல்வதே இவர்களின் இலக்கு. அதையும் மீறி ஒருவர் தப்பிச் சென்று காட்டுக்குள் நுழைந்து விட்டால் காட்டு எல்லையில் இருக்கும் மற்றொரு தக்கீ வீரரிடம் மாட்டக் கூடும். தக்கீ இயக்கத்திற்கு என்று கொலை கொள்கைகள் வேறு உண்டு.

கொள்கை :

இசை கலைஞர்கள், நடனம் ஆடுபவர்கள், தச்சர், கங்கை தண்ணீரை கொண்டு செல்பவர்கள், பெண்கள்,etc ஆகியோர் பலியின் விதிவிலக்குகள். ஆனாலும் ஒரு பெரிய குழுவில் கணவன் மனைவி இருந்தால் அந்த பெண் அமைப்பின் ரகசியத்தை பாதுகாப்பதற்காக கொல்லப்படலாம்.

தக்கீக்களின் மற்றொரு மிக நுட்பமான கொள்கை இரத்தம். ஒருவரை கொல்லும் போது இரத்தம் வெளியேறக்கூடாது. தக்கீ நம்பிக்கைப்படி காளி தேவி அவர்களின் முன்னோர்களுக்கு ரததம் வெளியேறாமல் கொல்லும் வழிமுறையை சொல்லி தந்துள்ளார்.

kali.jpg

ஓம்காரிக்கு தங்கள் அர்பணிப்பை மரண பலி மூலம் செலுத்துகின்றனர். காளியின் அருளை பெற வேண்டுமெனில் ஐந்து கர்மங்களிலிருந்து விடுபட வேண்டும்.

போதைப் பொருள், இறைச்சி, மீன், சுயஇன்பம், பாலுறவு கொள்தல் போன்றவையே அவை. இதனை விடுவத்தவர்கள் மட்டுமே தூய்மையான ஆத்மாவை பெற்று நேரடியாக காளியின் அருளை பெற முடிவதாக நம்பினர்.

வீழ்ச்சி :

ஒரு பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி,தன் பரிவாரங்களோடு இரவுப் பயணம் செய்தபோது, தக்கீக்கள் அவர்களை வழிமறித்து உடன் வந்த காவலர்களை கொலை செய்துவிட்டு, பிரிட்டிஷ் அதிகாரிகளின் உடைகள் மற்றும் ஆயுதங்களைப் பறித்துக்கொண்டனர்.

மேலும் பிரிட்டிஷ் அதிகாரிகளை சாலை ஓரத்தில் இருந்த மரத்தில் கட்டிவைத்துவிட்டுச் சென்று விட்டனர். ஆங்கிலேய ராணுவ அதிகாரியே தனியாகப் பயணம் செய்ய முடியாத சூழல் இருப்பது ஆபத்தானது என்று உணர்ந்த கம்பெனி, தக்கீக்களை ஒடுக்க கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வலியுறுத்தியது.

thuggee-e1375055698921

1822 ஆம் ஆண்டு வில்லியம் சீலீமேன் என்ற ஆங்கிலேய அதிகாரி வழிப்பறியர்களை ஒடுக்க பணி அமர்த்தப்பட்டார். அரபி, ஹிந்துஸ்தானி, வங்காளம் என மும்மொழி அறிந்த அவர் முடிந்தவரை பல தகவல்களை திரட்டினார்.

மூர்க்கதனமாக அவர்களை கையாள்வது சாதாரண காரியமில்லை என்று உணர்ந்த அவர் தக்கீக்களின் நடவடிக்கையை பின்பற்ற துவங்கினார். தக்கீக்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதற்காக, ரகசிய பாஷை ஒன்றை உருவாக்கி வைத்திருந்தனர்.

உளவாளிகள் மூலன் அதனை அறிந்து கொண்ட சீலீமேன் பின்னர் ரகசியமாக அவர்களை நோட்டமிட எண்ணினார்.

துவக்கத்தில் ஒரு ஆதாரம் கூட கிடைக்கவில்லை, இந்த ரகசிய அமைப்பு எப்போது எங்கு தாக்குதல் நடத்துகிறது, யார் பயணிகள் யார் தக்கீக்கள் என்பதை இவர்களால் அடையாளம் காண முடியவில்லை. தக்கீ என்ற பெயருக்கு ஏற்ப அவர்கள் சிறந்த ஏமாற்றுக்காரர்களாகவும் புத்திசாலியாகவும் தோன்றினர்.

உளவாளிகள் மூலம் சீலீமேனுக்கு சில இடங்களில் நடந்த கொலை சம்பவத்தை பற்றி செய்தி வந்தடைந்தது. இந்திய சாலைகளின் வரைபடைத்துக் கொண்டு அவர்கள் எங்கு அடுத்து கொள்ளையடிப்பார்கள் என்பதை யுகிக்க ஆரம்பித்தார்.

tantia_topees_soldiery

அடுத்த முறையில் பயணிகளுக்கு பதிலாக ஆங்கிலேய அரசின் வீரர்கள் பயணித்தார்கள். எதிர்பார்த்தது போல தக்கீக்கள் அவர்களுடன் இணைந்துக் கொண்டார்கள். ஆயதங்கள் ஏந்திய ஒரு பயணிகள் படையிடமும் தன் வேலையை காமிக்க அந்த குழு வசமாக மாட்டிக் கொண்டது.

பின்விளைவு :

அது முதல் தொடர்ச்சியாக பலர் கைது செய்யப்பட்டனர். 1830 முதல் 1841 வரை கிட்டத்தட்ட 3500 தக்கீக்கள் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது, அதில் பெரும்பாலும் முதியவர்கள்.

அரசு அவர்களின் ஒட்டுமொத்த இனத்தையும் கொள்ளையர்களாக அறிவித்தது. அவர்களின் குழந்தைகள், மனைவிகள் என எல்லோரும் சிறை பிடிக்கப்பட்டனர். சட்டம் மற்றும் சூழல் காரணமாக நாடோடி போல தனித்து வாழ்ந்த இவர்கள் சரணடைய தொடங்கினர்.

இதன் பக்க விளைவாகவே குற்றப் பரம்பரைச் சட்டம் (Criminal Tribes Act) 1871 ல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தைக் கொண்டு ஒரு இனத்தையே ஒடுக்க முடியும். இந்தியாவில் இன்னமும் சில பழங்குடி இனங்கள் தீவிரவாத இயக்கமாக கருதப்பட்டு சிறையாவது நடக்கிறது.

இந்திய பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் இந்த மரபு இனங்கள் காணப்படுகின்றன. தமிழகத்தில் கூட மறவர், கள்ளர், பிரம்மகள்ளர் என சில இனங்கள் குற்றபரம்பரையினர் பட்டியலில் உள்ளன.

சர்ச்சை :

ஆனாலும் தக்கீக்கள் பற்றிய சில முரண்பாடான கருத்துகளும் நிலவுகின்றன. ஆங்கிலேய அரசு பல்வேறு கலாச்சார வேறுபாடுகளைக் கொண்ட இந்தியாவை கட்டி ஆளவே இப்படியொரு திட்டத்தை தீட்டி இனங்களை அழித்தது என சொல்லப்படுகிறது.

தக்கீக்களை விட பெரிய அமைப்பாக விளங்கிய மத்திய/வட இந்தியாவின் பிண்டாரிகள் என்ற ஒரு இனம் அழிக்கபட்டதே அதற்கு சான்று என்கின்றனர் இவர்கள். எந்தவொரு இயக்கமும் அரசின் துணை இல்லாமல் இவ்வளவு காலம் நிலைத்திருக்க முடியாது என்பது வரலாற்றாலர்கள் சிலரின் கருத்து.

SOBTHUG21-570x599.jpg

கொள்ளையடிப்பதில் முக்கியமானவை குதிரைகளும் ஆயுதங்களும். ஆயுதங்களை அதிகாரிகளுக்கு இவர்கள் அளித்ததாகவும் சில குற்றசாட்டுகள் உள்ளது.

தேவையான ஆதாரங்கள் தந்து சரணடைந்த 50 பெயரை தவிர எஞ்சியவர்கள் அந்தமான நிக்கோபார் தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். 500 க்கும் மேற்பட்டோர் தூக்கிலிடப்பட்டனர்.

“Oh, the Thuggee. Marvelous brutes. Went about strangling travelers. … The British army did away with them nicely.”
―Phillip James Blumburtt

கைதானவர்களிடன் நடந்த விசாரணையில் பலரின் கொலை வாக்குமூலம் திகைக்கவைத்தது. 20 பேர் அடங்கிய ஒரு குழு 5200 கொலைகளுக்கான வாக்குமூலத்தை தந்து அதிரவைத்தது.

தக் பெக்ராம்:

முக்கியமாக பெக்ராம் என்பவர் தன் குழுவுடன் 40 வருடங்களில் 931 கொலைகளை செய்துள்ளார். அதில் 125 கொலைகளை தன் கைகளால் செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.

Thug Behram.jpg

ஒருவேளை இவரது வாக்குமூலம் உண்மையான தாக இருப்பின் உலக வரலாற்றில் அதிக கொலைகள் செய்த தொடர் கொலையாளி(Serial Killer) இவராகத் தான் இருப்பார்.

இரக்கமில்லாமல் கொலை செய்தற்கான குற்றவுணர்வு இல்லை அவர்களுக்கு. ஒரு மனிதன் தன் வாழ்வு பாதைக்காக தொழிலுக்காக செய்யும் செயல்கள் அவனை சஞ்சலமடைய செய்யாது என்பது ஒரு தக்கீயின் வாக்குமூலம்.

“தூக்கிலிடப்பட்ட பல கைதிகளிடம் கடைசி ஆசை என்னவென்று வினவிய போது தங்கள் ருமாலை கழுத்தில் கட்டிக் கொண்டே தூக்கிலிடுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.”

தற்காலம் :

தற்காலத்தில் தக்கீக்கள் இருக்கின்றன என்றொரு கேள்வி பொதுவாக எழுப்பப்படுகிறது. தற்போதும் கொள்ளைகள் தெருவெங்கும் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.

தக்கீக்கள் போன்ற சிலர் வட இந்திய பகுதிகளில் உலவிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்கள் கொலை செய்வதில்லை.

தீரன் படத்தில் காண்பித்தது போல பல்வேறு கொள்ளை அமைப்புகள் காவல்துறையால் கட்டுபடுத்தப்பட்டு இருக்கின்றன. நவீன பாதுகாப்பு முறைகளும் யுத்திகளும் குற்றங்களை குறைத்தாலும் அவர்களை மீண்டும் எழ செய்யமால் இருப்பது சமுதாயத்தை சார்ந்தே இருக்கிறது.

Divider-R

தக்கீக்களை தொடர்புபடுத்தி எழுதபட்ட நாவல்கள் & படங்கள் :

Philip Meadows Taylor’s Confession of a Thug நாவல், 1839 – இதுவே thug என்ற சொல் ஆங்கிலத்திற்கு மாற தூண்டுகோலாக இருந்தது.
John Masters’s – The Deceivers(1952) – 1998 படமாகவும் எடுக்கப்பட்டது.
George Bruce’s – The Stranglers: The cult of Thuggee and its overthrow in British India (1968)
Dan Simmons’s Song of Kali(1985).
Arthur Conan Doyle தனது Sherlock Holmes நாவலான The Adventure of the Crooked Man பிரிட்டிஷ் இளவரசியை தக்கீக்களிடமிருந்து காப்பாற்றுவது போல ஒரு கதை செல்லும்.
தக்கீக்களை மையபடுத்தி வந்து படங்களில் குறிப்பிடதக்கது Gunga Din(1939) மற்றும் Indiana Jones and the Temple of Doom(1984). -இந்தியர்களை மோசமாக சித்தரித்தாக இந்த படத்திற்கு ஆசியாவிலிருந்து பல்வேறு தரப்புகளிடமிருந்து எதிர்ப்பும் வந்தது.
The Stranglers of Bombay(1959).
Indian film Sangharsh(1968).
தீரன் அதிகாரம் ஒன்று(2017) படத்தில் தக்கீ மற்றும் அவர்கள் வழியில் கொலை கொள்ளை செய்த கும்பல், கதையின் மையமாக அமைக்கப்பட்டிருக்கும்.
Thugs of Hindostan(2018) அமிர்கானும் அமிதாப் பச்சனும் முதன்முறையாக இணையப் போகும் படமிது.

References :

https://en.wikipedia.org/wiki/Thuggee

http://historum.com/asian-history/39355-thuggee-holy-knot.html

http://www.unexplainedstuff.com/Secret-Societies/The-Thuggee.html

http://www.npr.org/sections/codeswitch/2013/11/18/245953619/what-a-thugs-life-looked-like-in-nineteenth-century-india

Related posts

பெர்முடா முக்கோண மர்மம் விலகியது

Seyon

போய்வரவா : கன்னியாகுமரியின் காதலன்

Seyon

செம்பவளராணி – முதல் கொரிய அரசி

Seyon

Leave a Comment