ஸ்காட்லாந்து யார்ட் போலிஸ் படைக்கு அடுத்த இரண்டாவது திறமையான காவல் படை என்றால் அது தமிழ்நாடு காவல்துறை தான் என பலர் சொல்வதை கேட்டிருப்போம். ஆனால் அப்படி ஒரு தகவல் உண்மையா என்று என்றாவது சிந்தித்து உள்ளீர்களா. எப்படி ஒரு மாநில காவல்துறை உலகின் சிறந்த காவல் படைகளால் ஒன்றாக இருக்கக்கூடும்?

அது இருக்கட்டும் ஸ்காட்லாண்ட் யார்ட் என்றால் என்ன அது ஏன் புகழ்பெற்றுள்ளது என்று முதலில் அறிவோம். லண்டன் நகரின் பெருநகர காவல் படையின்(Metropolitan Police Service) பெயரே ஸ்காட்லாண்ட் யார்ட்(Scotland Yard). பொதுவாக முக்கிய பகுதியின் பெயர்கள் பிரபலமடைவதை போல இந்த பெயரும் லண்டனை குறிப்பிட பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது ஒப்பிட்டு சொல்லும் விதமான இந்த வழக்காடல் நம்மிடம் புகழடைந்திருக்கலாம்.

மற்றபடி ஒரு நாட்டின் காவல்துறையின் கடமை என்பது குற்றங்களை எதிர்த்து தேசத்தின் பாதுகாப்பையும் விதிமுறைகள் மற்றும் அரசாங்க சட்டங்கள் ஆகியவற்றின் இணக்கத்தன்மையையும் உறுதிப்படுத்துவதாகும். அந்த வகையில் உலகின் சிறந்த 10 காவல் படைகளை கொண்ட நாடுகளின் பட்டியலை பின்வருமாறு பார்ப்போம்.

10. கனடா

பல வல்லரசு நாடுகளை போல போர் சூழல்களை எதிர்கொள்ளாத போதும் உலகத்தரமான  பயற்சி முறையில் சிறந்த காவல்படைகளில் ஒன்றாக கனடா திகழ்கிறது. துறையில் மேம்பட்டு வெளிப்படையாக இருப்பது சிக்கலான சமயங்களில் கடமையை பின்பற்றுவது ஆகியவை இவர்களின் பலம்.

மேலும் தரமான உலகளாவிய ரீதியிலான பயிற்சிகளும் பெற்றிருக்கிறார்கள். புதிய காவலர்களை அனுபவமுள்ள சீனியர்களே வழிநடத்துகிறார்கள். இதனால் அவர்களின் அனுபவம் இவர்கள் பணிச்சுழலை எதிர்கொள்ள ஏதுவாக இருக்கிறது. RCMP கடந்த 140 வருடமாக குற்றத்தை கட்டுப்படுத்தும் பணியை சிறப்பாக செய்து வருகிறது.
RCMP – Royal Canadian Mounted Police

9. நெதர்லாந்து

டச்சு நாட்டின் காவல் படையின் சிறப்பமைப்பாக இருப்பது தனித்தனி குழுக்களாக செயல்படுத்து. திட்டமிட்டு விதிமுறைகள் வகித்தது இவர்கள் பணிக்கு அனுப்பப்படுகிறார்கள். நாட்டின் ஒவ்வொரு வீதிகளும் இவர்கள் பார்வை பாதுகாப்பில் உள்ளது.

இக்கட்டான சூழலை சந்திக்கும் போலீஸ் காரர்களுக்கு ஆலோசனை வழங்கவும் ஒரு குழு இருக்கிறது. மற்ற நாடுகளை போல குற்றம் நடந்த பின் புலனாயாமல் யாரேனும் சந்தேகப்படும் படி நடந்து கொண்டாலும் தென்பட்டாலும் உடனே விசாரித்து குற்றம் நடக்கும் முன்னமே தவிர்க்க முயல்கின்றனர் இந்த டச்சு மாஸ்டர்கள்.

8. சீனா

ஆரம்பத்தில் குறைவாக மதிப்பிடபட்ட சீனாவின் காவல்படை அதன் பெயரை தற்போது மீட்டு கொண்டுள்ளது. பெரும்பான்மையான சீனா காவல் அதிகாரிகள் குன்பூ கற்று தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அது ஆயுத பயன்பாடு மட்டுமில்லாமல் நேரடி சண்டை சயங்களில் உதவியாக இருக்கிறது.

கைப்போர் மட்டுமல்லாது அவர்கள் அதிநுட்ப ஆயுதங்களை கையாளுவதில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளனர். ஒழுக்கத்தை சார்ந்த சீருடை தொடங்கி புதுமையான முறைகளில் குற்றங்களை எதிர்கொள்ளுவது போன்றவை இவர்களின் பலம். இங்கு ஒழுக்கமே எல்லாம்.

7. ஜெர்மனி

உலகப்போரின் போது சர்வாதிகார ஹிட்லரின் ஆதிக்கத்தில் இருந்த ஜெர்மன் காவல் படை இரண்டாம் உலகப்போருக்கு பின் சுதந்திர கட்டமைப்பாக மாறியது. BMI of Germany என்றழைப்பப்டும் ஜெர்மன் காவல்துறை எந்த ஒரு அதிகாரத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாமல் தன்னிச்சையாக செயலாற்றும் வல்லமை கொண்டிருக்கிறது.

புதிதாக பணிக்கு இணைபவர்களுக்கு ஜெர்மன் காவல் பல்கலைக்கழகத்தில் (Deutsche Hochschule der Polizei) பல்வேறு துறைகளில் முதற்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறாக சிறப்பு பயிற்சி, நவீன கருவிகள், செயல்முறைகள் என பல்வேறு மாபியாக்கள் நிரம்பிய ஜெர்மன் நகர்களை கட்டுக்கோப்பாக காத்து வருகிறது.

6. ஆஸ்திரேலியா

விளம்பரங்களில் காண்பிக்கப்படும் சுற்றுலா தலங்களுக்கு மட்டுமல்லாமல் தேர்ந்த அரசாங்க அமைப்புக்கும் ஆஸ்திரேலியா முன்னுதாரணமாக திகழ்கிறது. ஆஸ்திரேலியா காவல் கூட்டமைப்பு நாட்டின் மிகப்பெரும் ஊழலாக விளங்கிய போதைப் பொருள் வணிகத்தை கட்டுப்படுத்தியதில் தன்னை உலகின் சிறந்த அமைப்பாக மெருகேற்றிக் கொண்டது. AFP – Australian Federal Police

பல லட்ஷம் கோடி மதிப்புள்ள சரக்குகளை கைப்பற்றி பண முதலைகளை கைது செய்தது. மிகப்பெரும் அரசியல் பின்னணி கொண்டவர்களை கூட விட்டுவைக்காமல் ஒட்டுமொத்த களவாணிகளையும் காவலில் அடைத்து ஆச்சர்யம். NSW உடன் இணைந்து தீவிரவாதத்தை எதிர்ப்பது போன்ற விஷயங்களில் புகழுக்கு ஆசை படாமல் செவ்வனே சேவை புரிகிறது.

மேலும் காவல்துறையில் பெண்களுக்கு அதிகளவில் இட ஒதுக்கீடு செய்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளது.

5.பிரான்ஸ்

பிரான்ஸ் நாடு வரலாறு காலம் முதலே ரத்தசுவடுகளை சுமந்து வந்துள்ளது. இன்று ஈபிள் டவர், பழமையான கட்டிட கலைகள் என காதல் மையமாக அடையாளப்படுத்தப்படும் பிரான்ஸ் நாடு என்றுமே அச்சுறுத்தல்களுக்கு தயாராகவே இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மனித வெடிகுண்டு விபத்தில் காவல்துறையின் உடனடி செயல்பாட்டால் பல உயிர்கள் காக்கப்பட்டன. பிரான்ஸில் சாதாரண பணிகளுக்கு நகர காவல் படையும் தீவிரதவாதம் போன்றவற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் ஒரு ராணுவ சக்தி கொண்ட காவல் படை எந்நேரமும் இருக்கிறது.

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் கட்டுப்பாட்டில் உள்ள இந்த படைக்கு உயர் இடத்தில் உத்தரவு வந்துவிட்டால் சற்றும் தாமதிக்காமல் வான்வழி, தரைவழி என போர் முனை தாக்குதல் உடனடியாக நிகழ்த்தப்படும். இதுவில்லாமல் ஒரு பாதுகாப்பு குழுவும் அவசர தேவைக்கு உள்ளது.

4. இங்கிலாந்து

ஆட்சி திறமைக்கு புகழ்பெற்ற இங்கிலாந்து நாட்டின் பாதுகாவல் படை உலகின் சிறந்த காவல் படைகளில் ஒன்றாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. பழமையான போலீஸ் படைகளில் ஒன்றாக இங்கிலாந்து தான் காவல்துறையை உடனடியாக தொடர்பு கொள்ள அவரச தொலைபேசியை அறிமுகப்படுத்திய பெருமைக்குரியது.

சீனியர் ஜூனியர் போன்ற பாரபட்சம் இல்லாமல் சமநிலையை தோற்றிவித்தவது அவர்களின் வெற்றிக்கு அடையாளம். மேலும் காவல் தேர்வு முறையில் இங்கிலாந்தின் கையாளும் முறை தான் உலகின் சிறந்தது, இதனால் சரியான புதியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உயர்தரமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

3. இத்தாலி

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இத்தாலி அதன் புராண வரலாறுக்கும் கலை கொடைக்கும் ரோம் நாகரீகத்தின் பெயராலும் பேறு கொண்டது. ஆனால் அதே நேரத்தில் பிரபல சர்வதேச மாபியா கும்பலுக்கும் இத்தாலியே தாயகம்.

8 ஆம் நூற்றாண்டு காலத்தில் தோன்றி உலகம் முழுதும் கிளைத்திருந்த இந்த மாபியாவை அழிந்த பெருமை இத்தாலி காவல் படையை சேரும். மெல்ல வளர்ந்து 19 நூற்றாண்டில் மொத்த நாடும் இவர்கள் விதிகளுக்கு கீழ் கட்டுப்பட்டு இருந்தது.

டான் என்ற சொல்லே இவர்களிடம் இருந்து தான் வந்தது. அவர்களின் முக்கிய தலைவர்களை கைது செய்ததுடன் நாட்டின் சட்ட ஒழுங்கையும் நிலைநாட்டியது இத்தாலி. இந்த திட்டம் மிகவும் தெளிவாகவும் அதி புத்தி கூர்மையுடன் நடத்தப்பட்டு அந்த காவலர்களுக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ள யாவருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

300000 வீரர்கள் கொண்ட இத்தாலி காவல் துறை 5 தேசிய படையும் 5 உள்ளூர் படையும் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க விஷயமாக இத்தாலி காவல் படை 350 கிமீ வேகத்தில் பறக்கும் லம்போர்கினி(Lamborghini) கார்களை கொண்டுள்ளது. அது செல்வந்த மாபியாக்கள் தப்பித்தது செல்லாமல் பிடிக்க வழிவை செய்கிறது.

2.அமெரிக்கா

உலகமெங்கும் அமெரிக்காவின் கலாச்சாரம் ரசிக்கப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படம் முதல் உடை உணவு என எல்லாவற்றிலும் அமெரிக்க வேர் ஊன்றியுள்ளது. அதேபோல் சிறந்த காவல்துறை என்றால் கண்ணை மூடிக் கொண்டு எல்லோரும் சொல்வார்கள் அமெரிக்க அரசுதான் என்று. அமெரிக்காவின் FBI, S.W.A.T, CIA போன்ற அமைப்புகளை பற்றி கேள்வி படாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

American Police Force எனப்படும் நகர போலீசாரே(LAPD, NYPD) பெரும்பான்மையான குற்றங்களை கையாளுகிறார்கள். பிரச்சனையின் தீவிரம் அதிகரித்து கொந்தளிப்பு ஏற்படும் போது சிறப்பு படைகளான S.W.A.T களமிறப்படுகிறது. சவாலான குற்றத்தின் பின்னணி அறிந்து அதனை கையாள FBI(Federal Bureau of Investigation) நுழைகிறது. அமெரிக்க போன்ற வல்லரசு நாடுகளின் சட்ட ஒழுங்கு நீடித்திருக்க FBI போன்ற அதிதிறம் வாய்ந்த பாதுகாப்பு புலனமைப்பே காரணம் என்றால் அது மிகையல்ல. CIA சர்வதேச குற்றங்களை கண்காணிக்கிறது.

தற்போது அமெரிக்காவிடம் தான் உலகின் சக்திவாய்ந்த ராணுவ அதிநுட்ப உபகரணங்கள் இருக்கின்றன என்பது யாவரும் அறிந்ததே. அதேபோல் ராணுவ அளவிலான பயிற்சி முறையில் அமெரிக்காவை அடித்து கொள்ள ஆளில்லை. போர் சுழலை எதிர்கொள்ளும் அளவிற்கான பயிற்சி முறைகள் ஒவ்வொரு அதிகாரிக்கும் வழங்கபடுகிறது. வேறு எந்த நாட்டு துறையில் தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் காவலர் ஆகும் வசதி
இவர்களிடம் இருப்பது போல் இல்லை.

மற்றொரு முக்கிய பிரிவு ஐக்கிய அமெரிக்க கடல்சார் சிறப்புப் போர் மேம்பாட்டுக் குழு(SEAL Team Six). மேம்பட்ட பிரத்யேகமான செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் இந்த குழு கடல், வான், தரை என எல்லா வகையிலும் தாக்க வல்லது. இவர்களின் மைல்கல் வெற்றி என்றால் அது பல தலைமுறைகளாக வித்தை காட்டிய ஒசாமா பின் லாடனை தேடிபிடித்து கொன்றது.

1.ஜப்பான்

ஆசிய நாடுகள் அதன் கட்டுப்பாடு ஒழுக்க பண்பாட்டிற்காக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. ஆசியாவில் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு தேவையான பண்புகள் வீட்டில் இருப்போரால் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அந்த அர்பணிப்பு காக்கிச் சட்டையின் மீது என்றுமே ஒரு மதிப்பை தருகிறது.

ஜப்பான் நாட்டு காவல்துறை அவர்களின் ஒழுக்கத்தின் நேர்மையை மையபடுத்தி கட்டமைக்கப்படுகிறது. தீவிரமாகவும், சூழலுக்கு ஏற்ப நடந்து கொள்ளுதல் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அறிவு பெற்று குற்றங்களை அறவே தடுப்பதே இவர்கள் நோக்கம். ஒவ்வொரு துறைக்கும் தனிப்பட்ட பயற்சி மற்றும் அமைப்புகள் இருக்கிறது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் எந்த ஒரு சந்தர்பத்தையும் எதிர்கொள்ளும் வகையில் சரிவிகித அளவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பொதுத்துறை பயற்சியில் மக்கள் பின்பற்ற வேண்டிய சாதாரண பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தெரிவிக்கபடும். சமூக காவல் பயிற்சி மக்களுக்கு தேவையான ஆதரவை அளிப்பது பற்றியது.

குற்றவியல் பயிற்சி பிரிவு சிந்தித்து பார்க்க இயலாத எல்லா வழியான விசாரணையிம் மேற்கொள்கிறது. குற்றபிரிவு மாபியாக்களின் நடவடிக்கைகளை எப்போது உற்று நோக்கும் பணியில் இருக்கிறது. யகுசா என்ற கொடூர மாபியா பற்றி உலகம் அதிகம் அறிந்திராது. பயமற்ற முறையான காம்பட் அதிகாரியாக இல்லையென்றால் அவர்களை பற்றி அறியும் முன்பே உங்கள் உயிர் போய்விடும்.

ஜப்பானின் சாலை போக்குவரத்து காவல் துறைதான் உலகின் மதிப்பிற்குரிய போக்குவரத்து காவல் துறைகளில் சிறந்தது. சிறிய நாடாகினும் அதிக மக்கள்தொகையை சமாளித்து விபத்து போன்றவற்றை கையாளுவதில் இவர்கள் கைத்தேர்ந்தவர்கள்.

பாதுகாப்பு பிரிவனர் கடத்தல் கொள்ளை போன்றவற்றை எதிர்கொள்ளும் போது சிலசமயம் உயிர்பலி கூட நிகழ்வதுண்டு. உடல் மற்றும் உளவியல் சார்ந்த பயிற்சியும் இங்கு கட்டாயம். நல்ல உடல் வலிமை கொண்டவர்கள் தனிப்படையாக அமைத்து களத்தில் பயனபடுத்த படுவார்கள்.

இவற்றுக்கும் மேலான பொருளாதார மோசடிகளை கண்டுபிடிக்க அதற்கென தனியே ஒரு அணி பண முதலீடு முதல் பங்குவர்த்தகம் வரை கவனித்து வருகிறது. தொழிற்நுட்ப வளர்ந்த காலத்தில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகளில் பெரும் விஞ்ஞான அனுதினமும் கண்டுபிடித்து வருகிறது. ஜப்பான் காவல்துறையில் இதற்கென ஒரு தனிபிரிவும் உள்ளது.

சைபர் கிரைம் பிரிவினர் தொழிற்நுட்ப குற்றங்களை உன்னிப்பாக ஆராய்ந்து முன்னமே தடுக்கிறது. இதில் ஹாக்கிங், குழந்தை ஆபாச வீடியோக்கள், இணைய கொள்ளை, பரிவர்த்த ஏமாற்றுதல் ஆகியவை அடங்கும்.

இதையெல்லாம் தாண்டி ஜப்பான் ஒரு அழிவு நாடு. அங்கு பூகம்பம், சுனாமி போன்றவை பருவ காலத்தை போல வந்து சேரும். அந்த சமயங்களில் வெறும் சீருடை காவலர்களாக இல்லாமல் போற்றத்தக்க வகையில் அழைக்கும் சமயங்களில் வந்து பணிசெய்யும் அவர்களின் உழைப்பு அபாரமானது.

தமிழ்நாடு:

தமிழ்நாடு காவல்துறையும் எந்த வகையில் சலித்தது இல்லை. மற்ற நாடுகளை போல மேம்பட்ட பயிற்சி முறையோ ஆயதங்களோ இல்லாத போதும் பணியை விரைந்து செய்து இக்கட்டான சூழல்களில் திட்டமிட்டு துணிந்து செயல்படுவது போன்றவற்றில் தமிழக காவல்துறைதான் இந்தியாவில் சிறந்தது. மிக சிக்கலான பல வழக்குகளை தமிழக காவல் துறை வெகுவாக கையாண்டுள்ளது.

இந்தியாவின் பெண்கள் வாழ பாதுகாப்பான நகரம் என்றால் அது சென்னை மட்டுமே. டெல்லி, மும்பை போன்ற நகரங்களை ஒப்பிடுகையில் மக்களின் பாதுகாப்பு என்ற வகையில் சென்னை தான் முதலிடம் என்றால் அது மிகையல்ல. OMR முதல் கோயம்பேடு வரை இரவு எந்நேரமும் ஒரு காவல் வாகனம் உலா வந்து கொண்டுதான் இருக்கும்.

சூடான், பாகிஸ்தான், ரஷ்யா போன்ற நாடுகள் ஊழல் நிறைந்த காவல்துறைகளின் பட்டியலில் தான் இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அரசியல் தலையீடு. முன்னேறிய சிறந்த மற்ற நாடுகளை போல அரசியல் தலையீடு இல்லாமல் முறையான அதிகாரமும் திட்டமிட்ட தொலைநோக்கு பார்வையும் இருந்தால் இந்தியாவும் ஒரு காலத்தில் இந்த பட்டியலில் இடம்பெறும் என்பது ஐயமில்லை.

Leave a Comment