மார்ச் 9ல் முழூ சூரிய கிரகணம்

முழூ சூரிய கிரகணம்(Total Solar Eclipse) வழக்கமான சூரிய கிரகணத்திலிருந்து வேறுபட்டது. பொதுவாக பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும்போது கிரகணம் உருவாகிறது.

அந்த சமயத்தில் சூரியன் மறைக்கப்பட்டு பூமியின் சில இடங்கள் இருளில் முழ்கும்.அப்போது நிலவின் அளவால் சூரியனை சுற்றி ஒரு வளையம் மறைக்கப்படாமல் தோன்றும், ஆனால் மூழு சூரிய கிரகணத்தின் போது சூரியன் மூழுதாக மறைக்கப்படும்.

Eclipse

மார்ச் 9ம் தேதி இந்திய நேரப்படி முழு சூரிய கிரகணம் சரியாக காலை 4.49 மணிக்கு  தொடங்கி காலை 9.08 மணி வரையில் நீடிக்கும் எனவும், பகுதி நேர கிரகணம் காலை 5.47க்கு தொடங்கி, 10.05க்கு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை முற்றிலும் 3 மணி 13 நிமிடங்கள் தொடரும் கிரகணம் நிலப்பரப்பில் அதிகபட்சம் 4 நிமிடங்கள் மட்டுமே கடக்கிறது, மற்ற நேரம் முழுதும் இந்திய பெருங்கடலில் தொடங்கி பசுபிக் பெருங்கடலில் முடிவடைகிறது.

SE2016Mar09Tவலது பக்கத்தில் உள்ள அனிமேஷன் காட்சியில் குறிப்பிட்டுள்ள கரும்புள்ளி மூழு கிரகணம் தென்படும் இடங்களையும் பெரிய நிழலானது பகுதியாக காட்சியளிக்கக் கூடிய கிரகண(partial solar eclipse) பகுதிகளையும் குறிக்கிறது.

இதன்படி முழு கிரகணத்தை இந்தோனிஷிய தீவுகளான சுமத்ரா, போர்னியோ, சுலவேசி மற்றும் சில பசுபிக் கடல் பகுதிகளில் 100 சதவீதமும், இந்தோனிஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ்,புது ஜெனிவா ஆகியவை 50 சதவீதமும் கம்போடியா நாட்டினர் 50% மேலாகவும் காணலாம்.

இந்தியாவில் :

இந்தியாவில் முழு சூரிய கிரகணம் கடந்த 2010–ம் ஆண்டு ஜனவரி மாதம் 15–ம் தேதி ஏற்பட்டது.

இந்த முறை இந்தியாவில் முதலாவதாக வடகிழக்கு மாநிலங்களில் கிரகணம் நிகழ ஆரம்பிக்கும். ஒருவர் கிட்டத்தட்ட ஒரு மணி நேர அளவு நீளக்கூடிய பகுதி நேர கிரகணத்தை கிழக்கிந்தியாவின் கடைசியில் அல்லது அந்தமான் தீவுகளில் நின்று கொண்டு ரசிக்கலாம்.

கிரகணம் தொடங்கும் வேளை இந்தியாவில் அதிகாலை என்பதால் பல இடங்களில் சூரியன் பகுதி கிரகணமாகவே உதயமாகும்(partially eclipsed sunrise).அதாவது சந்திரன் மறைக்காத பாதி சூரியனே விடியலில் தெரியும்.

இந்தியாவின் அகர்த்தலாவில் 15%,புவனேஸ்வரில் 24%,கவுகாத்தியில் 11% , கொல்க்கத்தாவில் 18.5%,பாட்னாவில் 12% மற்றும் போர்ட் ப்ளேயரில் 49% அளவிலும் பகுதி நேர கிரகணமாக தென்படும்.(15 percent in Agartala, 24.5 percent in Bhubaneswar, 11 percent in Guwahati, 18.5 percent in Kolkata, 12 percent in Patna, 49 percent in Port Blair and 12 percent in Silchar)

சூரிய கிரகணத்தின் போது அதை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, சில சமயம் சக்திவாய்ந்த கதிர்கள் நேரடியாக கண்களில் உள்ள கார்டினா பகுதியை தாக்கி பார்வை இழப்பு கூட நிகழலாம்.தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகள் அல்லது அதற்கென வடிவமைக்கப்பட்ட கேமராக்களை  அணிந்து தான் பார்க்க வேண்டும்.

சுவாரசிய தகவல்கள் :

  • அன்று நிச்சயம் அமாவாசையாக இருக்க வேண்டும்.சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும்.

  • சூரியனைவிட சந்திரன் 400 மடங்கு சிறியது என்றாலும், பூமியில் இருந்து சந்திரனைவிட 400 மடங்கு துாரத்தில் சூரியன் இருப்பதால், சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்க முடிகிறது.

  • ஒருமுறை முழூ சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும்.

  • சந்திரன் மூழுதாக சூரியனை மறைக்கும் கடைசி சில வினாடிகளில் ஒரு பிரகாசமான வெளிச்சம் நிலவின் நில பிரதிபலிப்பால் உருவாகும்.இதனை ஆங்கிலத்தில் Diamond ring effect(வைர மோதிரம் போலவே காட்சி அளிப்பதால்) என்பார்கள்.

  • அதே போல நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளதாக்குகள், முகடுகளில் சிதறி வரும் ஒளிகள் பெஃய்லி முத்துகள்(Baily’s beads) எனப்படுகின்றன.

  • சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக இரு வாரங்களில் சந்திர கிரகணம் நிகழும்.அடுத்த சந்திர கிரகணம் மார்ச் 23 ல் நிகழப்போகிறது.

  • கிரகண வேளையில் இந்தியாவில் ஒரு இந்து கோவிலை தவிர மற்ற கோவில்கள் அனைத்தும் மூடப்படும்.

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.