தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் புனிதமாக கருதப்படுவது பசும்பால். இந்து சமயத்தின் பாரம்பரியம் தொட்டே பால் ஒரு முக்கிய மங்கலகர பொருளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
புதுமனை புகும் போது பால் காய்ச்சுவது, பால் ஊற்றி பிராத்தனை செய்வது என மரணத்தின் விளிம்பில் கூட பால் பயன்படுத்துவது நவீனத்தின் எல்லைக்கு சென்றாலும் நம் மரபில் இன்னும் தொடரும் வழக்கம்.
பால் தூய்மையின் அடையாளமாக கருத்தபடுகிறது, சற்றே கவனித்தால் மற்ற நாகரீகங்களை விட தமிழர்களே வெண்மையை பெரிதும் மதித்தாக தெரிகிறது. மேலும் அது வளமையையும் செழிப்பையும் குறிப்பதாக இருக்கிறது.
மணப்பெண் சாந்தி முகூர்த்த அறையினுள் நுழையும் போது அவள் மணமகனுக்கு அதிர்ஷ்டத்தையும் வளமையையும் அளிக்கிறாள், மறைமுகமாக ஒரு ஆணுக்கான கவுரவத்தை தருகிறாள்.
பாலானது நல்ல எதிர்காலத்தின் துவக்க அடையாளம். மணமக்கள் வாழ்வின் துவக்கத்தில் பால் அளித்து அதை சம்பிரதாயப்படுத்துவது சரியென்றே எனக்கும் தோன்றியது, ஆனால் இன்னும் பல காரணங்களை தேட மனம் விழைகிறது.
அதற்கு முன் ஏன் பெண் பாலை முதலில் கணவணுக்கு அளிக்கிறாள்? நல்வாழ்வின் இன்ப சுகத்தை முதலில் அவள் ஆணுக்கு அளிக்கிறாள்.
அதை பருகிய அவன் அந்த சுகத்தை அவன் மனைவிக்கும் தருகிறான். அதுமட்டுமன்றி இருவரும் உளமாற எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
இப்படி எடுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் மணமகனாக அமர்ந்து இருக்கிறீர்கள் புதுப்பெண் உள்ளே வருகிறாள். பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது, கட்டில் தாழ்ந்திருக்கிறது, அறிமுகம் இல்லாத நபர் ஆடையை களைய ஆயத்தமாக உள்ளார்.
ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்குமென சிந்தித்து பாருங்கள், அவளின் பதற்றத்தை எப்படி அறிவீர்கள்? அதற்காகவே இந்த பால் பேழை.
பால் செம்பை கொண்டுவரும் போது கையின் நடுக்கத்தை கண்டாலே தெரிந்துவிடும் அவள் பதற்றத்தின் அளவீடு, அதை புரிந்து அவளை நிலைபடுத்த வேண்டியது ஆண்மகனின் கடமை.
சரி வழக்கம் போல நம் தமிழகத்தில் ஒவ்வொரு புராதாண செயலுக்கும் ஒரு பின்புல அறிவியல் இருக்குமே.
பால் என்பது இயற்கையிலேயே ஒரு நல்ல கடத்தி. குங்குமப்பூ அல்லது மஞ்சள் கலந்து பாலினை அருந்தும் போது அது பாலுறவுக்கு தேவையான பலன்களை அளிக்கிறது.
பெருஞ்சீரகம்,தேன் கூட பயன்படுத்தப் படுகிறது. இவை கலந்த பால் ஹார்மோன்களை தூண்டி இருவரிடையே காமத்தை அதிகரிக்கும்.
பழங்களில் திராட்சை, வாழை, மாதுளை மற்றும் குங்குமப்பூ, முந்திரி, பாதாம் போன்றவை உடலுறவுக்கு தேவையாக வீரியத்தை அதிகரிக்கும், பால் உடலின் சரியான பாகங்களுக்கு அவற்றை கொண்டு சேர்க்கும்.
உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் அதிக நேரம் நீடித்திருப்பது போன்றவற்றிலும் இது உதவும்.
திருமண ஆன புதிதில் குறைந்தது மூன்று மாதங்கள் வரை தினமும் பால் குடிப்பது நல்லது, நம் நாட்டில் மட்டுமல்லாது மற்ற சில இடங்களில் கூட தம்பதிகள் இரவில் பால் குடிப்பதை அறிவுறுத்துகின்றன.
இன்னொரு குறிப்பிடதக்க விசயம், முதலிரவின் போது துணை நெருங்கையில் உடல் வெப்பம் அதிகரிப்பது இயல்பே, பால் உடல் சூட்டை தணிக்கும் வல்லமை கொண்டது.
ஆனால் எல்லோருக்கும் வரும் சந்தேகம் ‘பால் குடிச்சா தூங்கிருவோமே’ என்பது தான். உண்மைதான் பால் தூக்கமின்மைக்கு ஒரு சிறந்த ஆறுதல்.
தூக்கம் சரியில்லை என்றால் அதனை தீர்க்கும் ஆற்றல் பாலுக்கு உண்டு, இருப்பினும் பால் புத்துணர்ச்சியின் மகள்.
தூக்கம் வராதவர்களுக்கு தான் அது மருந்து, மற்றவர்களுக்கு அல்ல. அதனால் ஐயம் வேண்டாம். உண்மையில் அதிக நேரம் நீடித்த இன்பத்திற்கே வழிவகுக்கும். சிவராத்திரி ஆகதெனினும் சுபராத்திரியாக இருக்கும்.
இந்து மதத்தை தாண்டியும் நமது தமிழ் பாரம்பரியம் தனித்துவ அடையாள மரபுகளை கொண்டது.
பழந்தமிழர்கள் வேக வைத்த உணவை இருட்டிய பின்னர் உட்கொள்ள மாட்டார்கள். அதன் காரணமாக என்னவோ உடலுக்கு வலுவான ஒரு சிற்றுண்டி போல இந்த பால் பழம் ஆகிருக்கலாம்.
அதெல்லாம் சரி, நவீன கால உளவியல் காரணங்கள் தேவை அல்லவா, நிச்சயம் அதுவும் உள்ளது.
திருமண சடங்குகள் அது இது என்று புதுமண தம்பதிகள் சோர்வடைந்திருக்க பெரு வாய்ப்புண்டு. அந்த அசட்டை போக்க பால் ஒரு உற்சாக பானமாக காத்திருக்கும்.
உளவியல் ஆராய்ச்சிகளின் படி பால் வாய் கொப்பளிக்கும்(Mouth Wash) நீருக்கு மாற்றாகவும் உதவுகிறது. அது மட்டுமில்லாமல் பற்பசையை விட சிறந்ததாகவும் புத்துணர்வாகவும் கருதப்படுகிறது.
அதன் காரணத்தால் என்ன சொல்ல வருகிறேன் என புரியுமென எதிர்பார்க்கிறேன். வேறென்ன முத்தத்திற்கு முன்னால் ஒரு சுத்த சுவை ஒப்பனையே.
காம கடல் இதழென்னும் கரையினில் முத்தத்தால் நனைந்த பிறகு வீசும் அலையில் தப்புபவர் யவருமில்லை.
பலர் இந்த சடங்கு முறையெல்லாம் சினிமா, சீரியல்களில் மட்டும் தான் காண்பிக்கப்படுகின்றன நிஜ வாழ்வில் மறைந்து நாளாகிறது என்கிறனர்.
முழுமையான கலாச்சார காரணம் அறியாமல் இருப்பதால் இதனை பலரும் ஒரு வெற்று சடங்காக எண்ணி ஒதுக்குகின்றனர்.
பல வருட ஆசை கனவிற்கு பதில் சொல்ல அழகிய அதிர்ஷ்ட பெண்ணோருத்தி உங்கள் வாழ்விற்கு வளமையை ஆரோக்கியத்தை பரிசளிக்கும் அடையாளமாக பால் கொண்டு வரும் போது ,
சாந்தி முகூர்த்த இரவில் அவளை அமர்த்தி, அரவணைத்து அனைத்தையும் பகிர்ந்து கொண்டு இனியதொரு நல்லுறவை துவங்க உங்களுக்கு விருப்பம் இல்லையா என்ன?..
1 comment
[…] முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவ… […]