மனிதர்களுக்கு ரோமம் குறைவாக இருப்பது ஏன்?

உங்களை சுற்றி இருப்பவர்களை கவனியுங்கள், ஏதாவது வித்தியாசமாக காண முடிகிறதா? கண்கள், அழகிய முகங்கள் விட்டு அவர்களது முடியை பாருங்கள் அல்லது அதன் இல்லாமையை.

இது அவ்வளவு வித்தியாசமான ஒன்றாக தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நாம் இயல்பாகவே ஓரளவிற்கு ரோமத்தை தேகத்தில் கொண்டுள்ளோம். ஆனால் மீதமுள்ள பாலூட்டிகள் மற்றும் நமக்கு நெருக்கமான உறவினர்களான மனிதக் குரங்குகளை ஒப்பிடும் போது,

CpATt04W8AA_Wza.jpg

மனிதன் மட்டுமே ரோமங்கள் குறைவாக உள்ள பெரிய உடலுள்ள பாலூட்டி இனம்.மேலும் குரங்குகளை போலல்லாது நமது தோலின் பெரும்பகுதி காட்சிப்படுத்தப்படுகிறது.

அதிகப்படியான ரோமங்கள் பயனுள்ள போதிலும் நாம் அவ்வாறே பரிணமித்துள்ளோம். அடர்த்தியான முடி அதிகளவு குளிர் போன்ற சூழலை கடத்தாமல் தோலை காக்கிறது, சில சமயங்களில் உருவத்தை மறைத்து கொள்ளவும் உதவுகிறது.

இவ்வளவு சாதகமான ஒன்றானால், நாம் ஏன் அதனை பெருமளவு இழந்துள்ளோம்?

மனிதர்கள் குரங்கிலிருந்து பரிணமித்தவர்கள் என்ற கோட்பாடை முதன் முதலில் உலகிற்கு சொன்னவர் சார்லஸ் டார்வின், ரோமங்களற்ற நிர்வாண உடல் எவ்வையிலும் பயனுள்ளது என கொள்ளத்தக்கது அல்ல, எனினும் இது இயற்கையின் தேர்வாகவே நிகந்துள்ளது என்றார்.

அவரின் கூற்றுப்படி, பாலியல் தேர்வே நாம் ரோமங்களை இழக்க காரணமாக இருக்கும், மனித மூதாதையர்கள் முடிகளற்ற தேகம் உடையவர்களை இணையாக தேர்ந்தெடுப்பதை விரும்பினார்கள்.

ஆனால் இக்கோட்பாடு முழுமையாக ஏற்க தக்கதல்ல. விருப்ப தேர்வு நடந்திருக்கும் முன்பு, நாம் முடியை இழக்க துவங்கிருக்க வேண்டுமல்லவா.

நமது முற்காலத்திய மனிதனை போன்ற முன்னோர்கள் கொமினினி எனப்பட்டனர். வளர்ச்சி அடைந்த மனித குரங்குக்கு ஒப்பான அவர்களை, மிகுதியான ரோமம் குளிர் இரவுகளில் வெப்பமாக வைத்திருந்தது.

ஏதோ ஒன்று ஹோமினினி மனிதர்கள் தங்கள் முடிகளை இழக்க பரிணாம அழுத்தம் தந்திருக்க வேண்டும்.

பல யுகங்களுக்கு முன்னர், பல்வேறுபட்ட ஹோமினினி இனங்கள் புவியில் உலாவந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று லூசி(Lucy), பிரபலமான முதல் மனித ஹோமோசெபியன்.

lucy16.jpg

ஹோமோசெபியன்ஸ் நவீன மனிதனின் முன்னோடி.அதிலும் லூசி ஒரு பெண் என்பதால் முதல் மனித இனம் அவளிடமிருந்துதான் தோன்றிருக்க வேண்டுமென நம்பப்படுகிறது.

எப்படியோ இருபது முப்பது லட்ஷம் ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் வெகுவாக புல்வெளி பிரதேசங்களை கடந்தனர், இதனால் அவர்கள் ஒரு நாளில் வெகுநேரம் வெயிலை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

அதே நேரத்தில் வேட்டையாடி மாமிசத்தை உண்ணவும் ஆரம்பித்தனர் மற்றும் இரை விலங்குகள் வெளியில் சுற்றி திரிந்தால் மனிதர்கள் வெட்ட வெளிக்கு வரவேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த செயல் முடி குறைவுக்கான விளக்கங்களை தருகிறது.

ஹோமினின்ஸ் உடல் ரோமத்தால் மூடப்பட்டிருந்தால் வெப்பத்தை வெளியேற்றுவது மிக கடினம், மெல்ல அவர்கள் மூளை வெப்படைந்து அவர்களை செயலிழக்கவும் செய்யும்.

HomininReconstructionDaynes.jpg

ஹோமினினிஸ்களால் மதிய நேர சூரிய வெளிச்சத்தை தாங்கி கொள்ள முடியவில்லை. இதனால் காட்டை விட்டு வெளியேறி வேட்டையாட முடியாமல் நிழலுக்குள் ஒளிந்து நின்று நேரத்தை வீணாக்கியது, நவீன கால சிம்பன்சிகளை போலவே.

ஒன்று நிமிர்ந்து நேராக நடப்பது. இரண்டு கால்களால் நடப்பதால் உடலின் மேற்பகுதியில் மட்டுமே சூரிய ஒளி வீசும்.ஆனால் அவர்கள் வெகுதூரம் ஓடவும் துவங்கினர்.அப்படி ஆனால் இரைச்சல் உண்டாகி அதிவெப்பத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் உருவானது.

இதை சமாளிக்க அவை உடலின் ரோமத்தை குறைக்க வேண்டியிருந்தது – முக்கியமாக வியர்வையை வெளியேற செய்ய.

ஆரம்ப கால மனிதர்கள் எங்கும் தடைப்பட்டு நிற்கவில்லை, அவர்கள் பயணம் பாலைவனம் முதல் பனிப்பிரதேசங்கள் வரை சென்று கொண்டே இருந்தது, ஏனெனில் அவர்கள் வெப்பத்தை வியர்வை மூலம் சுலபமாக வெளியேற்ற முடிந்தது.joggers1.jpg

அவன் விரைவாக வேட்டையாடினான். அதனால் அவனுக்கு தேவையாக சக்தி கிடைத்தது, அவன் மூளையின் ஆற்றல் அதிகரிக்க துவங்கியது.

தற்போது உலகில் உயிர்வாழும் விலங்குகளில் அதிகளவு வியர்ப்பது மனிதனுக்கு தான்.

மற்ற விலங்குகளுக்கு வியர்த்தாலும் நம்மளவிற்கு வியர்வை சுரப்பிகள் சிறப்பாக பரிணமிக்கவில்லை.பனாமஸ் குரங்குகளுக்கு மனிதனை போன்றே வியர்வை நாளங்கள் இருந்தும் அவை இறுதி நிலையை அடையவில்லை.

நமக்கு நேரடி மூதாதையாளர்களான ஹோமோ இனம் ரோமங்கள் அற்றும் நிமிர்ந்து நடக்கும் பண்புடனே பூமியில் வலம் வந்ததர்க்கான பதிவுகள் உள்ளன, முதன்முதலாக ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய இவர்கள் தான் கற்கால மனித இனத்தை உலகில் தோற்றுவித்தனர்.

Chimpanzee (Pan troglodytes) adult female with young, riding on back (captive)

சரி, நம் தலையில் மட்டும் ஏன் முடி உள்ளது என நீங்கள் சிந்திக்கலாம். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது இணை சேருவதே. அதாவது அதிக தலைமயிர் உள்ளவையே எதிர் பாலினத்தை கவர முடிந்தது.

நிறைய முடியுள்ள பெண் குரங்குகள் மற்றவற்றால் விரும்பப்பட்டது.இப்போதும் கூட நீள கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் தன்னை அறியாமல் அதிகம் துணையாக்க விரும்புகின்றனர்.

அதிக தலைமயிர் உள்ள ஆண் குரங்குகள் மற்றவற்றை விட அதிக வாய்ப்புகளை பெற்றது. அதனால் அது தலைவனாகவும் தந்தையாகவும் ஆக முடிந்தது. முடி அதிகமுள்ள குழந்தைகள் பிறக்க ஆரம்பித்து பரிணமித்தது.

மேலும் தலை முடிகள் புற ஊதாக் கதிர்களிடமிருந்து காக்கிறது. அரிய காலக்கட்டங்களில் சிரசை குளிராக வைக்கவும் உதவுகிறது.மற்ற பாகங்களில் உள்ள மயிர் வெப்பம் மற்றும் உராய்வு போன்றவற்றிலும் பாதுகாக்கிறது.

ஆனால் ரோமங்கள் இழந்த நிலையில் ஹோமினினிஸ் இரவு குளிரை சமாளிக்க முடிந்தது எப்படி? அவர்களுக்கு கலோரிகள் நிறைந்த உணவு அதிகம் தேவைப்பட்டிருக்கும்.

18 லட்சம் வருடங்களுக்கு முன்பு ஹோமினினிஸ் உணவை வேக வைத்து சாப்பிட கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.அப்படினால் அன்றே நெருப்பையும் கண்டுபிடித்திருப்பார்களா.

human find fire.jpg

நெருப்பு ஒரு மிகப்பெரிய குளிர் விரட்டி. அது அவனுக்கு பல வழிகளில் பயன்பட்டது.

5,00,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெருப்பு மனிதனால் பயன்படுத்தப்பட்டது என ஒரு ஆய்வு கூறுகிறது. இன்னொரு கருத்து அவை வெகுவாக நேரத்தை நீரில் செலவிட துவங்கின என்பதாகும்.

இந்த நீர்நில குரங்குகள் நீந்துவதற்கு சுலபமாக முடியை இழந்தன என்றால் கடல் சீல்கள் உடல் முழுதும் ரோமங்களை கொண்டுள்ளனவே.

galapagos-fur-seal-1.jpg

அவைகளின் முடிகள் குறைய தொடங்கியதுமே உண்மையில் வெளிரிய பிங்க் போன்ற ஒரு வண்ணத்தில் தான் காட்சியளித்திருப்பார்கள், பின்னர் சூரிய வெப்பமே மனிதனின் இயற்கை நிறமாக கருமையை அளித்திருந்தது.

ஆக மொத்தம் எப்படி முதலில் ஆதிமனிதன் ரோமத்தை இழந்தான் என்பதை விட ரோமங்களை இழக்க துவங்கியதும் வியர்வைச் சுரப்பிகள் அதிகரித்ததும் சமகால நிகழ்வாக நிகழ்ந்துள்ளது.

தற்போது ரோமம் குறைவாக உள்ள உங்கள் நண்பர்களை பாருங்கள், சற்றே வித்தியாசமாக இருக்கலாம். ஆனால் இந்த பரிணமிப்பே நம்மை முழுமை அடைந்த மனிதர்களாக மாற்றியுள்ளது.

Source

Add comment

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.