Image default
Relationships

திருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டுகளில் வைத்துக்கொடுப்பது ஏன்?

திருமணம் என்பது அனைவருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு அளிக்க கூடிய ஒன்று. இன்றைய சூழலில் வாட்ஸ் ஆப்பில் அழைப்பு விடுக்கும் நாம் நமது கலாச்சாரத்தை மறந்து விட்டோம்.
திருமண வாழ்க்கை என்பது அன்பு, உதவி, அரவணைப்பு, ஆறுதல், நம்பிக்கை போன்ற பல பகுதிகள் இணைந்ததாகும். இந்த திருமண வாழ்க்கையில் ஒன்றாக இணையப்போகும் மணமக்களின் திருமணத்திற்கு வருகை புரியுமாறு நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வேண்டுகோள்விடுக்கும் ஒரு அழைப்பு கடிதம் தான் திருமண அழைப்பிதழ்.
 
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து சமூகத்தினராலும் கடைபிடிக்கக்கூடிய ஒரு திருமணச் சடங்காக திருமண அழைப்பிதழ் வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும், தங்களுடைய வசதிக்கு ஏற்றவாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து வழங்குவார்கள்.
அவ்வாறு திருமண அழைப்பிதழை வடிவமைத்து, திருமண அழைப்பிதழை நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் சுற்றத்தில் உள்ள அனைவருக்கும் வழங்கும்போது வெறும் திருமண அழைப்பிதழ் மட்டுமல்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ, குங்குமம் உள்ளிட்டவைகளையும் வழங்கும் பழக்கம் ஒரு சிலரிடம் இருக்கிறது.
 
சிலரிடம் திருமண அழைப்பிதழுடன் நாணயம் ஒன்றையும் இணைத்து வழங்கும் பழக்கம் உள்ளது. அவ்வாறு திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது திருமண அழைப்பிதழ்களை கையில் கொடுக்காமல் தாம்பூலத் தட்டுகளில் வைத்துக் கொடுப்பதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
உதாரணமாக, ஒரு சிலர் திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்ல, ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுக்கும்போதும் கூட தட்டில் வைத்துதான் கொடுப்பார்கள். அதேபோல் ஒருவர் மற்றொருவருக்கு அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கும்போது முறத்தில் வைத்துதான் கொடுப்பார்கள்.
 
இவ்வாறு கொடுப்பவரும், வாங்குபவரும் பொருளாதார அளவில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த நிலையில் இருந்தாலும் வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே அவ்வாறு தட்டில் வைத்துக் கொடுத்தனர். மேலும் ஒரு பொருளைக் கொடுக்கும்போது வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும்.
 
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருவருடைய மனதிற்குள்ளும் தோன்றக்கூடாது என்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும், நம் முன்னோர்கள் தட்டில் வைத்துக் கொடுப்பதை பழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாகத்தான் திருமண அழைப்பிதழ் கொடுக்கும்போது அழைப்பிதழை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுக்கின்றனர். மேலும், திருமண அழைப்பிதழ் தாம்பூல தட்டில் வைத்துக் கொடுக்கப்போகும்போது, அதனுடன் வெற்றிலை, பாக்கு, பூ மற்றும் குங்குமம் உள்ளிட்டவற்றை வைத்து வழங்குவது சிறப்பாகும். அழைப்பிதழ் இருபுறமும் மஞ்சள் வைக்கும் பழக்கமும் கூட நம்மில் உண்டு.
 
கொடுக்கும் பொழுதும் வாங்கும் பொழுதும் கிருமிகள் அண்ட கூடாது என்பதற்காக மஞ்சள் வைத்து வழங்குவர்.இன்று கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இயற்கை முறையில் மாறிய நமது உணவு பழக்க வழக்கங்கள் போல திருமண வழக்கங்களிலும் பண்டைய முறையை கடைபிடிப்போம்.

Related posts

முதல் இரவில் மணப்பெண் பால் கொண்டுபோவது எதற்கு?

Seyon

ஏன் ஆணை விட பெண்ணின் திருமண வயது குறைவாக இருக்க வேண்டும்? #90sKids

Seyon

உங்கள் ராசிக்கு காதல் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்?

Tulasi

Leave a Comment