ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

ஆடி மாதம் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

மற்ற கலாச்சாரங்களை ஒப்பிடும்போது இந்தியர்கள் ஆன்மிக சிந்தனை மிக்கவர்கள். அதிலும் தமிழர்கள் இயற்கையை தெய்வமாக வழிபட்டு அதற்கு விழா எடுப்பவர்கள். ஆடிப்பெருக்கு தினத்தில் பொங்கிவரும் காவிரியை வணங்கி ‘ஆடிப்பட்டம் தேடி கட்டு’ என விவசாயத்திற்கு வித்திடுவது இந்த மாதம்.

ஆனால் இதே சிறப்பான மாதத்தில் தான் சுப நிகழ்வுகள் காலம் தள்ளிப்போடப் படுகின்றன. திருமணங்களை தவிரிக்கிறார்கள். குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகளை பிரித்து வைக்கின்றனர்.

வெயில்

ஏன் என்று வினவும் போது செவிவழி கதையாக முன்னோர்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்ற பாணியில் நம்மிடம் சொல்லப்படுவது ஆடி மாதத்தில் தாம்பத்தியம் வைத்துக் கொண்டால் குழந்தை சித்திரை மாதம் பிறக்கும், அது வெயிற்காலமாததால் தாய் சேய்க்கு நலமில்லை என்கிறார்கள்.

இதை முற்றிலும் மறுக்க இயலவில்லை, அதே நேரம் அடுத்த குழந்தை பிறக்கும் போது சித்திரையில் பிறந்தால் பரவாயில்லையா என்ற எதிர் கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை. ஆனால் பெண்ணுக்கு தலைப்பிரசவம் என்றுமே கடினமானது. ஒருவேளை சித்திரை வெயில் முதன்முறையாக குழந்தை பெறுபவளுக்கு இக்கட்டை தரலாம்.

mersal baby

மேலும் அறிவியல் ரீதியாகவும் கர்ப்பிணி பெண்ணுக்கு அதிக வெய்யில் ஏற்புடையதல்ல. முக்கியமாக குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வெயில் தொடர்பான நோய்கள் எளிதில் பற்றும் அபாயமும் இருக்கிறது.

நெல்

இரண்டாவது கருத்து இயல்பானது. ஆடிமாதம் தான் விவசாயம் சூடிபிடிக்கும் காலம். உழவு, சேடை ஓட்டுதல், விதைத்தல், நடவு நடுதல்ன்னு விவசாயம் சார்ந்த பணிகள் ஏராளம். அந்த நேரத்தில் புதுமண தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வை ஆசைபெற துவங்கும் போது அது வாழ்வாதாரத்தை பாதித்து விட கூடாதல்லவா.

எனவே புது மணப்பெண்ணை அவள் தாயார் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுவது ஆண்பிள்ளை நடவு வேளைகளில் அதிக கவனம் செலுத்த வாய்ப்பாக அமையும். ஆடி சிறத்தால் தானே பின்வரும் கார்த்திகை பொங்கல் பண்டிகைளை சிறப்பாக கொண்டாட முடியும்.

kadaikkuttisingam

மேலும் ஆடிமாசம் விதை வாங்க, வரப்பு சீர் செய்ய, கிணறை சரிப்பார்க்க, ஏர் உழ, நடவு மாதிரியான வேலைகளுக்கு அதிகளவு பணம் தேவைப்படும். அதனாலதான் அந்த மாசம் சுப காரியம் எதும் நடத்தாமல் விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதையும் ஏற்க முடிகிறது.

சக்தி

முன்னரே சொன்னது போல நாம் இறைபக்தி மிக்கவர்கள். ஆடி மாதம் தான் அம்மனுக்கு சிறப்பு. அங்காங்கே இருக்கும் சிறிய கோவில்களில் கூட விழாக்கோலம் பூண்டு அலங்கரிக்கும். சுவையான கூழ் பகிரப்படும். இறைவனுக்கான நேரம் என்பதால் மற்ற சுபகாரியங்களை தவிர்த்து முழுதும் கடவுள் நினைவாக இருக்க தம்பதிகளை பிரிக்கிறார்கள்.

amman alagaram

தனிப்பட்ட முறையில் இதை நான் ஏற்கவில்லை, ஆனால் புராண கதை என்னை அசைக்கிறது. அதன்படி சிவன் பார்வதிக்கு உண்டான பேச்சுவார்த்தையில் அம்பாள் புன்னை வனம் வந்து ஊசி முனையில் தவமிருந்ததாக ஐதிகம். ஆடி மாதம் சிவன் மனம் குளிரிந்து தேவியை தேடி வந்து இணைகிறார்.  இதையே ஆடித்தபசு வாக சங்கரன்கோவிலில் கொண்டாடுகிறார்கள்.

இறைவன் பார்வதியின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம் இது. அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலம் என்பதால் ஆடி மாதம் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் அதிகம் நடக்கின்றன.

புதிதாக உருவான எந்தவொரு உறவிலும் ஒருவர் மற்றவரை புரிந்து கொள்ள நேரம் எடுக்கும். ஒரு சிறிய கால இடைவெளி அவர்கள் உறவை வலுபடுத்துவதொடு வெகுகாலம் நிலைபெறவும் செய்கிறது என்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லைதானே.

Guru Aaruyire

அதுவும் சிறிய மன சஞ்சலங்கள் இருந்தாலும் பிரிந்திருக்கும் நாட்களில் அவளுடம் இணைந்திருந்த இனிய நினைவுகளை எண்ணிப்பார்த்து ஆடி முடிந்ததும் ஆருயிரே என்னை ஏற்பாயா என பாடிக் கொண்டே அவர் இல்லம் சென்றால்..தன்னை தேடி வந்தவனை பெருமிதத்தோடு கண்டு கட்டிக்கொள்வாலே தாரகை.

Add comment