விண்டோஸ் 8 : Startup Folder ல் மென்பொருள்களை புதிதாக இணைப்பது எப்படி?

தேவையான மென்பொருள் செயலிகளை Startup ல் வைத்துக் கொள்வது பல சமயங்களில் உதவியாக இருக்கும்.

StartUp என்பது நமது கணினி தொடங்கும் போதே அதனுடன் இணைந்து இயங்க தொடங்கும் மென்பொருள்களின் பட்டியலே ஆகும்.உங்கள் கணினியில் ஏற்கனவே உள்ள தொடக்க மென்பொருள்களை காண Task Manager திறந்து அதில் இருக்கும் Startup எனும் பகுதியை பார்க்கவும்.

இங்கு நீங்கள் நேரடியாக புதிய செயலிகளை சேர்க்க இயலாது.விண்டோஸ் 8 ல் Startup என தேடினாலும் பயனில்லை.அதற்கான வழிகள் தான் பின்வருமாறு உள்ளன.

1.விண்டோஸ் கீ உடன் சேர்த்து R (Win key+ R) டைப் செய்து Run Dialog Box ஐ தொடங்கவும்.

2. %AppData% என்பதை டைப் அல்லது பேஸ்ட் செய்து Ok கொடுக்கவும்.

3.இப்போது கீழே கொடுக்கப்படுள்ள Code ஐ அப்படியே copy செய்து மேலே உள்ள Address bar-ல் Paste செய்யவும்.

       MicrosoftWindowsStart MenuProgramsStartup       

அல்லது நேரடியாக shell:startup என Run Dialogue Box ல் டைப் செய்தும் இந்த Startup கோப்பை (Folder) திறக்கலாம்.

shell-startup-command
shell:startup

4.அடுத்து உங்களுக்கு தேவையான exe மீது ரைட் கிளிக் செய்து Create shortcut கொடுத்தால் உருவாகும் அதன் shortcut file அப்படியே Drag அல்ல்து copy செய்து startup கோப்பில் இடவும்.

அவ்வளவுதான் இனி உங்கள் கணினி தொடங்கும் போது இந்த மென்பொருள் களும் தாமகவே செயல்பட துவங்கும். நீங்கள் தினமும் பயன்படுத்தும் மென்பொருள்களை இதில் இணைத்து கொள்வது உங்கள் நேரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும்.


 

3 comments

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.