தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை

தமிழ்நாட்டில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி ஆலை

மதுரையில் இருந்து 90 கி.மீ தொலைவில் ராமநாதாபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி என்ற இடத்தில் 4550 கோடி செலவில் மிகப்பெரிய அளவிலான சூரிய மின்சக்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது.

yourstory-india-largest-solar-park

குறிபிட்ட ஒரே இடத்தில் நிறுவப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் கொண்ட இந்த நிலையம், 648 மெகா வாட் அளவிற்கு மின்சாரத்தை உருவாக்க வல்லது,இது 1,50,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தை தரக்கூடும்.

இது உலகின் விலையுயர்ந்த ‘ஒற்றை இடத்தில் உருவான சோலார் உற்பத்தி திட்டமாகவும் ‘இது கருதப்படுகிறது.

கமுதி சோலார் திட்டம் 3.80 லட்சம் அடித்தளங்களை, 25 லட்சம் சூரிய தொகுதிகள், 27,000 டன் அளவுள்ள அமைப்பு , 576 இன்வெர்ட்டர்கள், 154 மின்மாற்றிகள் மற்றும் 6,000 கி.மீ. கேபிள்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 60 தாஜ்மஹால்கள் அளவிற்கு பெரிது.

மொத்தமாக 1270 ஏக்கர் அளவிலான நிலம் இதற்காக உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. 30000 டன் எடையிலான எஃகு கம்பிகள் இணைப்பிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

மேலும் ஒரு நாளைக்கு 11mw அளவிலான உற்பத்திக்கு தேவையான அமைப்பு உருவாக்குவது என இதனை முழுமைப்படுத்த 8500 மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்துள்ளனர்.

scatec_solar

கமுதி சோலார் கூடத்தை ஆதானி என்ற தனியார் நிறுவனம் அரசுடம் இணைந்து தயாரித்துள்ளது. 2012 ஆண்டு தமிழத்தில் கொண்டுவர்ப்பட்ட மின் தேவை திட்டத்தின் ஒரு பங்காகவே இது செயல்படுத்த பட்டுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இந்த 648 MW நிலையமும் கமுதியின் 400 கிலோ வாட் மின் நிலையத்துடன் இணைக்கப்பட்டு மின்சார உற்பத்தி செயல்படுத்தப்பட உள்ளது.

 

 

Add comment