Image default
Medical

கர்ப்பிணிகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்

இயற்கையின் சமநிலை தவறும் போது உண்டாகும் பிறழ்வுகளை சரிசெய்ய நோய்கள் உருவாகி உயிர்களை கொல்லும் என்றொரு கூற்று உண்டு.

எயிட்ஸ்,எபோலா போன்ற பல நோய்கள் பேரழிவை ஏற்படுத்தின. அதன் கணக்கில் புதிதாக இணைந்துள்ளது ஜிகா வைரஸ் (Zika virus, ZIKV).

1947 காலங்களிலே தலைகாட்டிய இந்நோய் பின்னர் சத்தமில்லாமல் மறைந்து போனது, தற்போது 2015 ஆம் ஆண்டு பிரேசிலில் மீண்டும் சிறிய துளியாய்(break out) துவங்கி எல்லா நாடுகளிலும் பரவிவருகிறது.

ஆரம்பத்தில் ஆப்பிரிக்க-ஆசிய நாடுகளில் மட்டுமே தென்பட்ட ஜிகா தற்போது கடல் கடந்து கிழக்கு நாடுகளிலும் பரவி அமெரிக்க வரை  தொற்றியுள்ளது. இதனால் உலக சுகாதார அமைப்பு சர்வதேசங்களையும் எச்சரித்துள்ளது.

தாக்கம் : 

ஜிகா வைரஸ் பரவலால் பெரும்பாலும் உயிரிழப்புகள் நிகழ்வது அரிதுதான், அறிகுறிகள் கூட மிக மென்மையாக தென்படும் என்பதால் இதனை கண்டறிவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளது.

zika

ஸிகா நோய் என்பது டெங்கு காய்ச்சலைப் போன்று அதிக வீரியம் மிக்கது அல்ல. ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறத் தொடங்கினால் அதை எளிதாககக் குணமாக்கிவிடலாம் என இந்திய மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள போதிலும் நிலைமை மோசமானால் ஆபத்து தான்.

இசீக்கா தீநுண்மம் காய்ச்சல் ஒரு கடுமையான நரம்பியல் கோளாறுக்கு வழிவகுக்கும் என்றும், அதனால் பக்கவாதமும் உயிரிழப்பும்கூட ஏற்படலாம் என்றும் தி லான்சட்டு மருத்துவமனையில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது.

கரிப்பிணிகள் கவனம் :

முக்கியமாக கர்ப்பிணி பெண்ணின் உடலில் இந்த வைரஸ் கிருமி தாக்கம் இருந்தால் அவர் கருவிலிருக்கும் குழந்தை மூளை பாதிப்பு, கை கால் முடம்,குறுந்தலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு பிறக்கும் வாய்ப்பு பேரதிகம்.

ஒரு பெண் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், பிறக்கும் குழந்தையானது மரபணு, நரம்பியல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Microcephaly-comparison-500px

மியாமியில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு பிறந்த குழந்தைகளின் தலை சிறுத்து காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அமெரிக்காவில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் கடும் சோதனை நடத்திய பின்னரே ஒவ்வொருவரும் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.

கொலொம்பியா, எக்குவடோர், எல் சால்வடோர், ஜமேக்கா மற்றும் பிரேசில் போன்ற பல தென் அமெரிக்க நாடுகளில் நோய்க்கான தீர்வு குறித்து முழுமையாக அறியும் வரை பெண்கள் யாரும் கர்ப்பமடைய வேண்டாம் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜிகா வைரஸ் பாதிப்பு

மேலும் ஜிகா வைரஸ் தாக்கத்தினால் நோய்பரவியுள்ள நாடுகளுக்கு செல்வதை கர்ப்பிணிப் பெண்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

காரணம்  : 

அடெஸ் ரக நுளம்புக் கடியால்(Aedes mosquitoes) உருவாகும் இக்கிருமிக்கு முறையான சிகிச்சை முறை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொசுக்களால் ஏற்கனவே டெங்கு போன்ற நோய்கள் பரவுவதால் மக்கள் முன்னெச்சரிக்கை யாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியமாகிறது.

மற்ற பல நோய் பரவல் வாய்ப்புகளும் தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. ஆண் பெண் உடலுறவு கொள்வதன் மூலம் இந்நோய் பரவும் என்பதும் இப்போது  கண்டறியப்பட்டுள்ளது.பாதிக்க பட்டவரின் இரத்தத்தை அறியாமல் உட்செலுத்துதல் மூலமும் பரவும்.

அறிகுறிகள்:

காய்ச்சல், தோலில் அரிப்பு, கண் நோய், எலும்பு மூட்டுகளில் வலி, உடல் சோர்வு போன்ற சாதாரண அறிகுறிகளே தோன்றும்.ஏடிஸ் கொசுக்கள் கடித்த 2 முதல் 7 நாள்களில் இந்த அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். டெங்கு போலல்லாமல் லேசான பாதிப்பே இருக்கும்.

ஜிகா வைரஸ் அறிகுறிகள்

அடெஸ் வகை கொசு கடித்த நான்கில் ஒருவருக்குதான் பாதிப்பு ஏற்படும். உணவுக்காக அல்லாமல் முட்டையிடும் பருவத்தில் மட்டுமே இவை மனிதர்களை கடிக்கின்றன. பெரும்பாலும் நல்ல நீரில் தான் இனப்பெருக்கம் செய்யும். காலை, பிற்பகல் வேளைகளில் இந்த வகை கொசுக்கள் கடிக்கும்.

தொடக்கம் : 

முதன்முதலாக 1947-இல் உகாண்டாவின் ஜிகா காட்டில் செம்முகக் குரங்கு ஒன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது, எனவேதான் இந்த பெயர். 1957 இல் மனிதருக்கு தொற்றியிருந்திருக்கக்கூடிய சான்றுகள் உள்ளன.

2007-ஆம் ஆண்டு மேற்கு பசிபிக் பெருங்கடலில் அருகில் உள்ள யாப் என்ற தீவில் வசித்த 75 சதவீதம் பேரை இந்த வைரஸ் தாக்கியது.

2015 அக்டோபர் முதல் தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா நாடுகளில் ஜிகா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக பிரேசிலில் அதிக அளவாக 4000 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

zika-virus (1)

சில ஆசிய நாடுகளில்(இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்சு, தாய்லாந்து, வியட்நாம்) ஜிகா வைரஸ் பரவல் இருப்பினும் இந்திய துணைக்கண்டத்தில் இதுவரை எந்த ஒரு நபரும் பாதிக்கப்பட்டதாக பதிவில்லை.

இந்தியர்கள் இயற்கையிலே இதற்கான் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர், ஆரோக்கியமான இந்தியர்கள் ரத்த மாதிரி மூலம் தடுப்பு மருந்துகளை உருவாக்கவும் முயற்சி நடக்கிறது.

தடுப்பு மருந்துகள்(vaccine):

இந்த ஸிகா வைரசுக்கு தொடர்பான டெங்கு, மஞ்சள் காய்ச்சல் போன்றவற்றின் மருத்துகளும் முயற்சிக்கப்பட்டன.ஐக்கிய அமெரிக்காவின் தேசிய நல கழகம்(NIH) 2016 ஜனவரியில் இதற்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.

இந்தியாவின் பாரத் பயோ டெக் இன்டர்நேஷனல் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தடுப்பு மருந்தை கண்டுபிடித்ததாக கூறியது. இன்னுமும் முழுமையான மனித சோதனைக்கு உட்படுத்த ஒப்புதல் கிடக்கத்தால் காத்திருப்பு நிலையில் உள்ளது.முழுமையாக கட்டுப்படுத்த விட்டாலும் தடுக்கும் ஆற்றலை இம்மருந்து கொண்டுள்ளது.

ஜிகா வைரஸ் தடுப்பு மருந்து

எல்லாவற்றையும் முழுமையாக ஆராய்ந்த சர்வதேச ஆராய்சசியாளர்கள் தடுப்பு மருந்து உருவாக குறைந்தது இரண்டு வருடங்கள் பிடிக்கும் அதிலும் சக்திவாய்ந்த எதிர்ப்பு மருந்து தயாராக 10 முதல் 12 வருடங்கள் பிடிக்கும் என கூறியுள்ளனர்.

ரியோ ஒலிம்பிக் :

தற்போது ரியோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு வருகை தரவிருக்கும் சுற்றுலா பயணிகள் மற்றும் ரசிகர்களால் நோய் பரவும் ஆபத்து உலக நாடுகளுக்கு உண்டாகும் என்று அஞ்சப்பட்டுகிறது. இதன் அறிகுறிகள் சட்டென தெரியாது என்பதால் ரசிகர்களிடம் விரைவில் பரவ வாய்ப்பிருக்கிறது.

rio-olympics-zika-virus

ஏற்கனவே இந்த ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவில் இருந்து ரோஜர் ஃபெடரர், மிலோஸ் ரயோனிச், தாமஸ் பெர்டிச் உள்ளிட்ட 20 முன்னணி வீரர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக விலகியுள்ளனர். ஆனால் உண்மையான காரணம் ஜிகா வைரஸ் அச்சமே என்று சொல்லப்படுகிறது.

பாதுகாப்பு நடவடிக்கை :

மற்ற நாடுகளை போலவே இந்திய எல்லை மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரத் துறை இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் கூட்டத்தில் ஸிகா வைரஸ் குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய்களைத் தடுக்கும் வகையில் அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. ரத்தப் பரிசோதனையின் மூலம் ஸிகா வைரஸ் பாதிப்பு இருந்தால் அவற்றை எளிதில் கண்டறிய முடியும்.

விமானம் மற்றும் கப்பல் வழியாக வரும் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் பாதிப்பு இருந்த போது, இந்திய விமான நிலையத்தில் ஏற்படுத்தப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகள் இப்போதும் தொடரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றையும் தாண்டி வீட்டை சுற்றியுள்ள பகுதிகள், அலுவலகங்களில் தண்ணீரை சுத்தமாக வைத்து சுகாதாரமாக இருந்தாலே கொசுக்களால் உண்டாகும் பெரும்பான்மையான நோய் ஆபத்துகள் தவிரிக்கப்பட்டு விடும்.

 

Related posts

செங்காந்தள் மலர் – கார்த்திகை செல்வம்

Seyon

அறிய வேண்டிய அபூர்வ இரத்த வகை

Seyon

ஏன் இந்திய கழிப்பறைகள் சிறந்தவை? 5 அறிவியல் காரணங்கள்

Seyon

Leave a Comment